Social Icons

Pages

Featured Posts

Friday, 6 November 2020

சாணக்கிய நீதி-பெண்கள்

 

 



மூன்று உலகங்களையும் காத்து ரஷிக்கும் மகா விஷ்ணுவே ஒரு பெண்ணின் மயக்கும் ஆற்றலின் முன்னால் தோற்றப் போனார் என்றால் அப்படி ஒரு பெண்ணிடம் ஏமாந்து போகும் ஒரு சாதாரண மனிதனை எப்படிப் பழி சொல்ல முடியும்? பெண் என்பவள் பார்ப்பதற்கே கவர்ச்சியுடன், மயக்கும் விதமாய் வசீகரிக்கும் தன்மை கொண்டவள். மனிதனுக்கு ஆசை காட்டித் துாண்டில் போடுவதில் அவள் கடவுளை விட அதிகமான வசீகரிக்கும் சக்தி கொண்டவள்.

மகிழ்ச்சியில்லாத இந்த உலகத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மனிதன் துாய்மையான பக்தியுடன் கடவுளை வணங்க வேண்டும். இந்த தேவலோக வாழ்க்கையின் சந்தோஷங்களை அடைய அவன் தன் மதத்தின் மறைகளில் கூறப்பட்டுள்ள ஒழுங்கு முறைகளைக் கண்டிப்பாக கடைப் பிடிக்க வேண்டும். இது முடியவில்லை என்றால் பெண்ணின் கவர்ச்சியில் மாட்டிக் கொள்ளாமலாவது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இது எதையும் செய்யாதவன் தன் ஒப்பற்ற  சக்தியை வீணாக்குவதுடன் தன் இளமையையும் வீணே தொலைக்கிறான்.

துரதிருஷ்டம் ஒருவனை எதிர்பாராமல் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம். அதனால் பணத்தை சேமிப்பது என்பது எப்போது முக்கியம். பணம் இருந்தால் தான் ஒருவனால் ஒரு பெண்ணை வசீகரிக்க முடியும். ஆனால் இதில் ஒரு உண்மையைப் பார்க்க மறந்துவிடக்கூடாது. இரண்டுமே ஒரு நிலையில்லாதது. பணம் பெண் இரண்டுமே ஒரு மனிதனை எந்தக் கணத்திலும் ஏமாற்றி விடக் கூடியது.

குறிப்பாகத் திருமணத்தை முடிவு செய்யும் போது ஒருவன் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவசரத்தில் எடுக்கும் எந்த முடிவும் அவனுடைய வாழ்க்கையை நிரந்தரமாக நாசமாக்கி விடும். சமூகத்தில் அவனுக்கு நிகரான அந்தஸ்து உள்ள குடும்பத்திலிருந்து தான் அவ் திருமணம் செய்ய வேண்டும். வெளிப்படையான அழகில்லாமல் இருந்தும் ஒரு நல்ல பரம்பரை வழிவந்த பெண் என்றால் அவளைத் திருமணம் செய்து கொள்ளத் தயங்கக் கூடாது. அதே நேரம் யோக்கியதை இல்லாத ஒரு குடும்பத்தில் இருந்து வரும் ஒரு பெண் எத்தனை அதிரூப சுந்தியாக இருந்தாலும் அவளை மனைவியாகத் தேர்ந்தெடுத்துவிடக் கூடாது.

பெண் என்பவள் ஆணை விட மிகவும் மென்மையானவள் என்று நம்பப் படுகிறாள். ஆனால் அவள் ஒரு ஆணைப் போல நான்கு மடங்கு வீம்பான உறுதி படைத்தவள். அலணை விட ஆறு மடங்கு துணிச்சலும் எட்டு மடங்கு உணர்வின் பலமும் கொண்டவள் பெண்.

ஒரு ஆண் தன் இல்லத்தரசி, தன் சினேகிதர்களின் மனைவிமார்கள், தன் மாமியார் போன்ற அனைத்துப் பெண்களிடமும் மரியாதை செலுத்த வேண்டும் முறையற்ற எண்ணங்களுடனும், தகாத உறவு கொள்ள ஆசைப்படும் பெண்களை நெருங்கும் ஆண்கள் மிகவும் மோசமான நடத்தையுடையவர்கள். ஒவ்வொரு மதத்திலும் பெண்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தப் படுகிறார்கள். அவர்கள் எல்லோராலும் விரும்பப்படுகிறார்கள்.

அன்பு என்னும் நுால் மிகவும் வலிமையானது. போகீந்திரர் மரத்தைப் பிளந்து செல்லும் வலிமை பெற்றிருந்தார். ஆனால் தாமரையில் நுழைந்த பிறகு அவரால் வெளியே வரமுடியவில்லை. அதன் இதழ்களை துளைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. காரணம் தாமரை மலருக்கும் அதன் இதழ்களுக்கும் இடையே இருந்த அன்பின் நெருக்கம்! அன்பை விட வலிமையான ஒரு சக்தியை உலகம் இன்னும் பார்க்கவில்லை.

ஒரு பெண் தன் மேல் காதல் கொண்டு விட்டாள் என்னும் எண்ணத்தால் ஒருவன் தன்னை
ஏமாற்றி கொள்ளும்போது, அவளுடைய கைகளில் தான் ஒரு பொம்மலாட்ட பொம்மையாகிப் போனோம் என்பதை அவன் உணருவதில்லை.

மற்றவர்களின் ஜாடையான, பாவனை பொருந்திய அசைவுகளுக்கு தன் கவனத்தை திருப்பி பொஞ்சிப் பேசும் அற்பமான பெண்ணால் தன்னுடைய கற்பு நிலையைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. மற்ற ஆண்களுடன் நிச்சயமாக அவள் தகாத உறவை ஏற்படுத்திக் கொள்வாள்.

தன் கணவனின் குறிப்பான ஒப்புதல் இல்லாமல் நோன்பைக் கடைப்பிடிக்கும் பெண் அவனுடைய நீண்ட ஆயுளைக் குறைக்கிறாள். அவள் சாசுவதமான நரகத்திற்கு செல்ல விதிக்கப்படுகிறாள்.

ஒரு பெண் தனக்குக் கிடைத்துள்ள அத்தனையையும் வாரி வழங்கினாலும், பலவிதமான நோன்புகளை நோற்றாலும், எல்லா இச்சைகளையும் விட்டொழித்த வாழ்க்கையை வாழ்ந்தாலும் அத்தனை ஆன்மிகத் தலங்களுக்கு சென்று வந்தாலும் மனதில் சுத்தமானவளாக ஆக மாட்டாள். ஆனால் அவளுடைய கணவனின் பாதத்தில் விழுந்து வணங்கினால் அவள் எல்லாப் பாவங்களும் கழுவப்பட்டு நிச்சயமாக அவற்றிலிருந்து விடுபடுகிறாள்.

நேபாளத்தில் ஒரு நடைமுறை வழக்கம் உள்ளது அதன்படி திருமணமான ஒரு பெண். பெண் தாமிரப்பாரத்திலுள்ள நீரை எடுத்து தன் கணவனின் கால்களைக் கழுவி அப்படிக் கழுவிய நீரை தினமும் குடிப்பாள். இப்படிச் செய்வதன் மூலம் அவளுடைய கணவனின் ஆயுள் அதிகரிப்பதாக அவள் நம்புகிறாள். அத்தோடு அவன் மகிழ்ச்சியுடனும், ஆரேக்கியத்துடனும் செல்வத்துடனும் வாழ இது வகை செய்யும் என்றும் நம்புகிறாள்.

வஞ்சிப்பது, எச்சரிக்கை இல்லாத தைரியம் மினுக்குவது ஏமாற்றுதல், பேராசை, சீர் கெடுதல் மற்றும் சண்டை போடுதல் பெண்களுக்கு இயல்பான குணங்கள். இதனைப் பார்க்கும் போது ஒருவர் குழப்பம் அடையாமல் புரிந்து கொள்ள வேண்டும்.

கற்புள்ள, புத்திநுட்முள்ள, நற்குணமுள்ள, இனிமையான, கணவனிடம் விசுவாசமுள்ள பெண் தான் கணவன் கொடுக்கும் ஆதரவிற்குத் தகுதியான பெண். இப்படிப்பட்ட ஒரு பெண் மனைவியயாக அமைந்தால் அந்தக் கணவனுக்கு அது கடவுளின் செயலே! உண்மையில் அப்படி ஒரு பெண் மனைவியாகக் கிடைத்ததில் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவன் அவன்.

வாழ்க்கையின் பிணியின் நிவாரணமே ஒரு பெண்ணின் உதட்டில் இருக்கிறது என்று தீவிரமாக அவளின் பால் ஈர்க்கப்பட்டு விழுந்தவர்கள் பலர். பல கடவுளரும், மிக அதிகமான ஞானமுள்ள பண்டிதர்களும், சம்ஸ்கிருத்தை ஆழமாகக் கற்றறிந்த அறிஞர்களெல்லாம் கூட இப்படிப் பெண்ணிடம் மயக்கம் கொண்டிருந்திருக்கிறார்கள் எனும் போது ஒரு சாதாரண மனிதன் ஒரு பெண்ணிடம் சரணடைந்தால் அதனை எப்படிக் கடிந்து கொள்ள முடியும்! பெண் ஒரு வலிமையான அலைக்கழிப்பு.

மனிதனை எது மிக அதிகமாக வசீகரிக்கும் சுற்றி “பெண்” தான். அவனுடைய மனம் எப்போது சுற்றி வரும் மையப் புள்ளி அவள். அவளுடைய கவர்ச்சியிலும் மினுக்கலிலும் அவன் தன்னை இழந்து விடுகிறான். பேரர்வமும் பகுத்தறிவு இல்லாமல் இருக்கும் நிலையும் கொண்ட சிறையில் அவனை வெற்றிகரமாக சிறைப்பிடித்து விடுகிறாள்.

வடித்த சிலை போன்ற அமைப்புகள் கொண்டு மந்திரத்தால் மயக்கும் மிகச் சிறந்த பெண்ணாக இருந்தால் கூட கடைசில் அவளும் இரத்தம், சதை எலும்புகள் அடைத்த வெறும் பை தானே! இருந்தாலும் மனிதன் தன் இளமை, காதல் என்னும் முட்டாள் தனத்தால்வெறியூட்டப்பட்டு முடிவில்லாத வலி என்னும் சுழலில் மூழ்கிவிடுகிறாள்.

ஒரு பெண்ணின் வசீகரிக்கும் வழிகளிலிருந்து ஒதுங்கி இருப்பதே மிகப்பெரிய ஒழுக்கமாகும்.

“ஏய் விகாரமான கிழவியே! என்ன தேடிக் கொண்டிருக்கிறாய்? ஏதாவது தொலைத்து விட்டாயா?”

“முட்டாள் மனிதா, நான் என் தொலைந்து போன இளமையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று பதில் சொன்னாளாம் அந்தக் கிழவி.”

வயதாகி விட்டால் கூட, தன் வயதைவிடக் தான் இளமையாகத் தான் இருக்கிறோம் என்கிற கானல் நீர் போன்ற எண்ணத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறாள் பெண்.

தன் இளமையை கடைசி வரை இழுக்கும் விதமாய், தன்னை முடிந்தவரை கவர்ச்சிகரமாகக் காட்டும் முயற்சியில் எப்போதும் இருக்கிறார். ஒரு பெண்ணின் அழகான உடமையும் மனதை இழுக்கும் கவர்ச்சியையும் ஒரு மனிதன் ஏன் பார்க்க வேண்டும்? அவனுடைய உணர்ச்சிகளை பொழுந்துவிட்டு எரியச் செய்வதற்கா? எல்லாப் பெண்களும் இயற்கையாகவே ஒன்றுதான். மனிதன் அவளிடமிருந்து உடல் ரீதியாக பெறக்கூடிய இன்பத்தில் கூட மிகச் சில மாற்றங்களே உள்ளன.

பெரும்பாலும் ஒரு மனிதன், ஒரு பெண்ணின் அழக்கான தோற்றத்தாலும் மயக்கும் வசீகரத்தாலும் அடக்கமுடியாமல் துாண்டப்படுகிறான். மனிதன் இயல்பாகவே பல தாரங்களை நாடும் பழக்கம் கொண்டவதனாதலால், பல தரப்பட்ட பெண்களை அடைய மன்றாடுகிறான். இந்தப் பைத்தியக்காரத்தமான பின் தொடர்தலில் ஒரு விஷயம் அவன் கண்ணை மறைத்து விடுகிறது. தோற்றத்திலும், உடல் நெருக்கத்திலும் எல்லாப் பெண்களும் ஒரே மாதிரியானவர்கள் என்கிற உண்மைதான் அது. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் காமக் கலப்பில் ஈடுபடுவது ஒரு ஆணுக்கு முறையல்ல மாதவிலக்கின் சமயத்தில் ஒரு ஆண் தன் மணைவியுடன் உடலுறவில் ஈடுபடுதல் கூடாது. இப்படிச் செய்வது அவன் ஆயுளைக் குறைத்து விடும்.

நுட்பமான அறிவுடையவர்கள் ஒரு பெண்ணின் அறிவுரைகயைக் கேட்டு அதன்படி நடக்க மாட்டார்கள். ஒரு வீட்டில் நடக்கும் சர்ச்சைகளுக்குக் காரணம் பெண்கள் தான். அருவருக்கத்தக்க சண்டைகளையும் பாபகரமான செயல்களையும் துாண்டுவதில் முழுப் பொறுப்பும் அவர்களுடையது தான். இதனால் தான் முனிவர்கன் பெண்ணின் நிழலைப் பார்ப்பதில் இருந்து கூட விலகி இருந்தார்கள்.

ஒரு பெண்ணுக்குண்டான விரும்பத்தக்க குணங்களுடன் அவள் இருந்தால் தன் கணவனுக்கு விடியற் காலையில் ஒரு தாயைப் போலவும், பகல் நேரங்களில் ஒரு சகோதரியைப் போலவும் சேவை செய்வாள். அந்த நாள் இரவை நோக்கி செல்கையில் அவளே ஒரு சிறந்த ஜெமானியாக உருமாறி அவளுடைய உடலின் தேவைகளை பூர்தி செய்வாள். இப்படிப்பட்ட பெண் தன் கணவனின் தேவைகளைப் பரிபூரணமாக நிறைவேற்றுவதோடு அவனுடைய நம்பிக்கைக்கும் பாத்திரமாவாள். இவள் கவர்ச்சியாக இருக்கிறாளா அல்லது அழகில்லாமல் இருக்கிறாளா என்பது முக்கியமல்ல. ஆனால் தன் கணவனை எல்லாவிதத்திலும் கட்டுப்படுத்த அவளால் முடியும்.

 

Tuesday, 12 November 2019

சட்டமாமேதை அம்பேத்காரின் சிந்தனைத் தொகுப்பு - 01




v ல்விக்கூடங்களில் எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சீருடை, கல்வி இடம் கண்டிப்பாகக் கொடுத்தாக வேண்டும் குழந்தைகளுக்கிடையே சாதி மனப்பான்மை சிறிதளவு வராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

v பிறப்புக்கு அடையாளமாக ஒவ்வொருவரும் தங்கள் பெயருக்குப் பின்னால் பிறந்த சாதிப் பெயர்களையும், பட்டங்களையும் போட்டுக் கொள்கிறார்.

ஜனநாயக தத்துவத்திற்கு நேர் எதிராகக் காணும் இத்தகைய சாதிப்பெயர்களையும், பட்டங்களையும் உடனடியாக எடுத்துவிட வேண்டும்.

v இந்துமதக் கோவில் ஆராதனை செய்ய எல்லா இந்துக்களுக்கும் முன்னுரிமை
அளிக்கப்பட்டாக வேண்டும். பிராமணர்கள்தாம் பூஜை செய்ய வேண்டும் என்ற முறையை அடியோடு ஒழித்தால்தான் கோயிலில் சமத்துவம் நிலவும்.

v ஆண்டுக்கொருமுறை உலகத்திற்காக ‘சமபந்தி போஜனம்’ என்று விளம்பரப்படுத்திவிட்டுக் கோயிலில்விருந்து சாப்பிடுவதைவிடக் கொடுமை உலகில் வேறு ஏதுமில்லை. இதனால் தீண்டாமை ஒரு போதும் அகலாது.

v மக்களிடம் நிலவியிருக்கும் கோழைத்தனமும், பரம்பரை மூடப்பழக்கங்களும் அடியோடு ஒழிய வேண்டும். தைரியமும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இன்றே இப்பொழுதே பெற வேண்டும்.

v சாதி ஆசாரங்களையும், விதிகளையும், மீறுகிறவர்களை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கும் நிலையை உடனடியாக ஒழிக்க வேண்டும். அதுமட்டுமல்ல; இப்படிப்பட்டவர்களை அழைத்துப் புகழ்மாலையும் சூட, இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் துணிச்சலோடு முன்வர வேண்டும்.

v தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் அனுதாபம் காட்டி, அவனுக்கு வேண்டிய வசதிகளை, சாதிமத வேறுபாடு இன்றிச் செய்ய வேண்டும்.

v சாதியின் கொடுமைகளைக் கண்டு தீண்டாமையை ஒழிக்கப் புறப்பட்ட இராமானுஜர், கபீர்தாசர் போன்ற மகான்களின் அடிச்சுவட்டைப் பின்பற்ற ஒவ்சொரு இந்துவும் முன்வர வேண்டும்.

v பகுத்தறிவும்,ஒழுக்கமும் கொண்டவர்கள் இந்து மதத்தின் தலைவர்கள் என்று ஏற்றுக் கொள்ளும்வரை சாதியை ஒழிப்பதைக் கடமையாகக் கருத வேண்டும்.

v இந்துக்களுக்கெல்லாம் பொதுவானதும் எல்லா இந்துக்களும் ஒப்புக் கொள்ளக் கூடியதுமான ஒரு ‘வேதம்’ இந்துக்களுக்கு இருக்க வேண்டும்.

v புரோகிதம் பரம்பரைத் தொழிலாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்துக்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களுக்கு எல்லாம் புரோகிதனாகும் உரிமை வழங்கப்பட வேண்டும்.

v சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகதுவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பகுத்தறிவு தத்துவத்தில், எல்லா இந்துக்களும் ஒன்றுபட்டு முயன்றால் சாதி, சமயக் கொடுமைகளை ஒழிக்கலாம். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதமையை அகற்றலாம்.

v சமுதாயக் தொண்டு செய்பவர்கள் ஒழுக்கம் உள்ளவர்களாகவும், நேர்மை உள்ளவர்களாகவும், தியாகம் செய்யக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் இந்தக் சமுதாயம் பலராலும் ஏமாற்றப்பட்ட சமுதாயம். இவர்களை நீங்களும் ஏமாற்றாதீர்கள்.

பொதுத்தொண்டு என்று சொல்லிக் கொண்டு அரசியல் இலாபம் பெறவோ, அதிகாரம்- அந்தஸ்திற்கான பணம், பெயர், புகழ்பெறவோ விரும்பாதவர்களாக இருங்கள்.

v சமூகச் சீர்திருத்தத்துக்கு பார்ப்பனர் என்றுமே முழு எதிரிகள். அரசியல் பொருளாதார மாற்றங்களில் பார்ப்பனர் முன் அணியில் நிற்பார்கள்.

ஆனால், சாதியை ஒழிப்பதற்கான இயக்கங்களில் அவர்கள் ஈடுபடமாட்டார்கள். எதிர்காலத்திலாவது ஈடுபடுவார்கள் என்றால் அந்த நம்பிக்கையுமில்லை.

v சாதி ஒழிப்புக்கு நேரான வழி கலப்பு மணமே ஆகும். இரத்தக் கலப்பினால் சுற்ற உணர்வு என்பது மாறி, நட்பு உணர்வு உண்டாகும். நட்பு கலந்த சகோதர உணர்ச்சி தோன்றாத வரையில் வேற்றுமை உணர்ச்சி இருந்து கொண்டுதான் இருக்கும்.

இந்துக்களுக்குள்ளே கலப்பு மணம், மிக்க பலன் அளிக்க கூடியதாக இருக்கும். இதைத் தவிர வேறு எதனாலும் சாதி ஒழியாது. அரசியல் கொடுமையை விட முகக் கொடுமையே மிகவும் பயங்கரமானது. சாதிக் கொடுமையை எதிர்த்து போராடும் சமூகக் சீர்திருத்தவாதியே அரசியல்வாதியைவிட மிகுந்த துணிவுக்காரன்.

v புத்தன், மார்க்ஸ் ஆகிய இருவரின் அடிப்படை ஒழுக்கத்தின் இலட்சியமுமே                 ‘இந்த உலகத்தில் மனிதனின் துன்பத்தை ஒழிக்க வேண்டும்’ என்பதுதானே தவிர வேறு மறு உலகத்தில் மோட்சத்தைத் தேடுவதல்ல. புத்தனின் ஒழுக்க தத்துவமும் மார்க்ஸின் பொருளாதாரக் தத்துவமும் விஞ்ஞானமே உண்மையை அறியும் ஒரே வழி என்று உறுதியாக நம்புகின்றன.

v கம்யூனிசமும் பௌத்தமும் அடிப்படையில் ஒன்றே, புத்தன் வறுமையைத்தான் ‘துன்பம்’ என்று பொதுவாகக் குறிப்பிடுகிறான். தனியுடைமை சுரண்டலை அடிப்படையாக் கொண்டது. ‘தனியடைமை ஒழிந்தால்தான் பொதுநலம் பெருகும்’ என்கிறான் புத்தன், ‘சுரண்டல்’ என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லையே தவிர, மார்க்ஸிகமும் பௌத்தமும் ஒரே பொதுவுடைமை சமுதாயத்தையே இலட்சியமாக அடிப்படையில் கொண்டுள்ளன.

புத்தன் பொதுவுடமை இலட்சியத்தை அடைய பிரச்சாரத்தையே கையாள வேண்டும் என்று சொன்னால், மார்க்ஸ் அரசியல் திறனையும் ஆயுதப்புரட்சியையும் உபதேசித்தான் என்ற முறையில்தான் இருவரும் வேறு படுகின்றனர்.

v இந்தியாவைப்போல சமூக ஊழல்களால் கெட்டுப்போன நாடு உலகில் வேறு இல்லவே இல்லை. தம்மை அடிமைப்படுத்தும் சமூக அமைப்பை பாமர மக்கள் சகித்துக் கொண்டிருப்பதன் காரணம் என்ன? உலகில் பல தேசங்களில் புரட்சி உண்டாகியிருக்கும் போது இந்தியாவில் மட்டும் ஏன் புரட்சி உண்டாகவில்லை? அந்தக் கேள்விக்கு ஒரே ஒரு விடைதான் உள்ளது.

அதாவது சதுர்வாண (நாலு ஜாதி) கொடுமையினால் பாமர்கள் பலவீனர்களாக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் அவர்களுக்குப் புரட்சி செய்ய ஆற்றல் இல்லை. அவர்களுக்கு ஆயுதம் தாங்க முடியாது, ஆயுதம் இன்றி புரட்சியில் வெற்றி பெற முடியாது. அவர்கள் எல்லாம் உழவர்கள்.

ஏரைக்கட்டி உழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். கொழுவை வாளாக மாற்றிக் கொள்ள அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உரிமையில்லை. அவர்களுக்குக் கல்வி கற்கவும் முடியவில்லை. எந்நாளும் அடிமைகளாகவே அமிழ்த்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

v புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானல் ஏழை எளியொர் முன்வந்துதான் ஆக வேண்டும் அத்தகைய ஒரு புரட்சி செய்ய இந்தியப் பாமர மக்கள் மற்றவர்களுடன் சேருவார்களா?

மற்றவர்கள் தம்மை சமத்துவத்துடனும் சகோதர பாவனையிலும் நீதியாகவும் நடந்துவார்கள் என்ற நம்பிக்கை இருந்தால்தான் பாமர மக்கள் மற்றவர்களுடன் சேருவார்கள்.

புரட்சி வெற்றி பெற்ற பிறகு தம்மைச் சரிநிகர் சமானமாக நடத்துவார்கள் என்று பாமர மக்கள் நம்பவில்லையானால் அவர்கள் மற்றவர்களுடனன் சேர்ந்து புரட்சி செய்ய முன்வருவார்கள்?

புரட்சியைத் தலைமை வகித்து நடத்து கம்யூனிஸ்டு என்கு ஜாதியில் நம்பிக்கையில்லை என்று சொன்னால் மட்டும் போதாது. புரட்சியில் ஈடுபடுவோர் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் சமத்துவ சகோதரத்துவ உணர்ச்சி தோன்றும்படி நிலைபெறும்படி செய்ய வேண்டும்.

v அடிமைக்கு ‘அவன் அடிமை’ என்பதை உணர்த்தினால்தான் அவன் அடிமைச் சங்கிலியினை உடைப்பான்.

v கூடிய வரையில் வன்முறையைத் தவிர்ப்பதும், அவசியமானபோது வன்முறையை பயன்படுத்துவதும்தான் புத்தன் சொன்ன வழியில் அஹிம்சை தத்துவத்தைக் கடைப்பிடிப்பதாகும்.

v சமுதாயக் கொடுமைகளை எந்த ஒரு நாகரிகம் அடைந்த சமுதாய அமைப்பாலும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. சழுதாயக் கொடுமைகளை மதக் கோட்பாடுகளால் நியாயப்படுத்த முயல்வதைப்போல அசிங்கமான, கொடூரமான போக்கு வேறு எதுவுமில்லை.

v மதப்பற்று உள்ளவரை உங்கள் அடிமைச் சங்கிலிகளை உடைப்பதோ வறுமையைப் போக்குவதோ இயலாது.

v இந்து கோயிலுள்ள நுழைய தாழ்த்தப்பட்டவர்கள் போராடமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் சுயமரியாதைக்காரர்கள். அந்தக் காலத்தில் ஐரோப்பிய ஹோட்டல்களிலும், கிளப்களிலும் ‘நாய்களும் இந்தியர்களும் அனுமதிக்கப்படுவதில்லை’ என்ற போர்டுதான் தொங்கும். அவற்றுக்கும் இந்து கோயிலுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.

‘எல்லா இந்துக்களும், நாய்கள் உட்பட எல்லா மிருகங்களும் அனுதிக்கப்படவர். ஆனால், தீண்டத்தகாதவர்களுக்கு மட்டும் அனுதியில்லை’ என்ற நடை முறை போர்டு போடாமலேயே இந்துக்களால் கடைப் பிடிக்கப்படுகிறது.

அப்படி ஆவணம் பிடித்த இந்துக்களிடம் அனுமதி பிச்சை கேட்க சுயமரியாதை உள்ளவன் எவன் வருவான்? இந்துக்கள் வேண்டுமானால் தங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ள எல்லோருக்கும் அனுமதி உண்டு என்று தங்கள் நடைமுறையை மாற்றிக் கொள்ளட்டும். தாழ்த்தப்பட்வர்கள் எதற்காக கோயிலுக்குப் போக வேண்டும்? கோயில் நுழைவு பற்றி அவர்களக்கு அவசியம் இல்லை. இருக்கத் தேவையில்லை.

v தீண்டாமை ஒழிய ஜாதி அமைப்பு ஒழிய வேண்டும். ஜாதி ஒழிய மதம் ஒழிய வேண்டும். மதம் ஒழிய சாத்திரங்கள், வேதங்கள், புராணங்கள், கடவுள் கற்பனைகள் ஒழிய வேண்டும். இவற்றை ஒழிக்காமல் சாதிமுறையை தீண்டாமையைக் கடைப்பிடிக்போரைக் குற்றம் சொல்வது விவேகமாகாது.


           








 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது