Social Icons

Pages

Wednesday, 5 March 2014

புத்தளம்- பாலாவி வீதி தொடர்பான சுற்றாடலியல் ஓர் சட்ட நோக்கு



புத்தளம் – பாலாவி தொடர்பில் சுற்றாடற் காரணங்களை காட்டி அவ்வீதியை மூடும் பணியை செய்ய சிலர் முயற்சிக்கின்ற போதும் சர்வதேச சுற்றாடற்சட்டம் (International Environmental Law) மற்றும் தேசிய சுற்றாடற் சட்டம் (National Environmental Law) ஆகியவற்றின் கீழ் எம்மால் அவ்வீதிக்கான பயன்படுத்ததகு பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்று வாதிட்டு இவ்வாக்கம் வரையப்படுகின்றது. ஆனால் இவ்வாக்கம் சட்டரீதியாக வாதிடுகிறதே தவிர பௌதீகரீதியாக அல்ல என்பதை வாசகர்கள் கவனமெடுப்பார்கள் என வரைந்தோன் எண்ணமிட்டிருந்தான்.



இன்று மனிதன் விஞ்ஞான மேம்பாடும், துரித அறிவுப்பொருளாதார வளர்ச்சியும் மனிதனை இயற்கைத்தாயின் அரவணைப்பில் இருந்து துாரவிலக்கி கொண்டே போகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. இயற்கையில் இருந்து தன்னை வேறுபடுத்தும் மனிதன் அதை தாக்க தொடங்குகின்றான். விளைவாக இயற்கை அதன் சீற்றத்தை பல்வேறு கோர வழிகளில் மனித இனத்தின் மீது கட்டவிழ்த்து விடுகின்றது. இந்த இயற்கை- மனித உறவை மேம்படுத்த அல்லது சீராக்க சட்டம் சமூகத்தை நெறிப்படுத்தும் விதிகளின் தொகுப்பு எனும் ரீதியில் தவையிட வேண்டிய தேவைப்பாட்டிற்குள்ளாகின்றது.

சுற்றாடற் சட்டம் என்றால் என்ன எனும் வினாவிற்கு பதிலிறுப்பதானது எந்த தேர்ந்த சட்டவியலாளருக்கும் கடினமானது. அதன் பரப்பெல்லை மரபு சட்ட வகையறாக்கள் பலவற்றுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையது. அது அரசியலமைப்புச்சட்டம் (Constitutional law), மனித உரிமைகள் சட்டம் (Human Rights Law) , நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் (Consumer Protection Laws) , நிர்வாகச்சட்டம் (Administrative Law) , குற்றவியற் சட்டம் (Criminal Law) , காணிச்சட்டம் (Land Law) மற்றும் பொது சுகாதார சட்டங்கள் (Public health Law) என்பவற்றுடன் பின்ணிப்பிணைந்துள்ளது.

சர்வதேச ரீதியில் சுற்றாடலை பாதுகாக்கவென பல்வேறு நாடுகள் பல
மாநாடுகளை நடாத்துகின்றன. ஒவ்வொரு மாநாடுகளிலிருந்தும் இறுதியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அத்தீர்மானங்களை பங்குபற்றிய நாடுகள் தமது தேசிய சட்டவாக்கங்கள் மூலம் அமுல்படுத்த கடமைப்பட்டவையாகின்றன.

இதில் குறிப்பிட்டு கூறக்கூடிய முதலாவது கருத்தமர்வு 1972ஆம் ஆண்டு Stockholm எனுமிடத்தில் நடைபெற்ற கருத்தமர்வாகும். இது மனித சுற்றாடலிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் கருத்தமர்வு (The United Nations Conference on the Human  Environment) எனவும் அழைக்கப்படுகின்றது.

இதன் தீ்ர்மான வெளியீட்டு பிரிவறிக்கையின் கொள்கை 21படி நாடுகள் தமது நாட்டு இயற்கை வளங்களை தமது தேவைகட்காக தமது சுற்றாடற் கொள்கைகளுக்கேற்ப பயன்படுத்த முடியும் என்பதை ஐக்கிய நாடுகள் பட்டயம் மற்றும் சர்வதேச சட்டங்களின் படி உறுதிப்படுத்துகின்றது.

States have, in accordance with the charter of the United nations and the prilciples of international law, the sovereign right to exploit their own resources. Pursuant to their own environment policies.

அத்தோடு கொள்கை 22 படி  சுற்றாடல் மாசடைதலால் ஏற்படும் பாதிப்புக்களில் பாதிக்கப்படுவோர்க்கு குறிப்பிட்ட அரசுகள் ஏற்புடைய நட்டஈடுகளை வழங்க வேண்டும் எனவும் கூறுகின்றது. ஆனால் எந்த கொள்கையோ அல்லது பிரகடனமோ அபிவிருத்தி என்ற ஒன்று இடம் பெறவே கூடாது என கூறவில்லை.

அத்தோடு சுற்றாடல் சட்டத்தில் மிக முக்கியமாக சில கொள்கைகள் உள்ளன. அக்கொள்கைகளில் முதன்மையானது நிலைபேண்தகு அபிவிருத்தி கொள்கை {Doctrine of Sustainable Developmet}  என்பதாகும். இக்கொள்கை பற்றி முன்னைநாள் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதி வீரமந்திரி அவர்கள் சர்வதேச நீதிமன்றில் (International Court of Justice) உதவி தலைமை நீதிபதியாக கடமை ஆற்றிய போது Hungarey V Sovakia எனும் வழக்கில் வழங்கிய தீர்ப்பின் சாரத்தை கீழே தருகின்றேன்.

The Court must hold the balance even between environmental considerations and the developmental considerations raised by the respective parties’.  

அதாவது சுற்றாடற்பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவற்றிற்கு இடையே ஓர் சமநிலை பேணப்பட வேண்டுமே ஒழிய அபிவிருத்தி நடவடிக்கையே கூடாது என்பதாகாது.

மேற்குறிப்பிட்ட வழக்கில் சொல்வாக்கியா எனும் நாடு ஹங்கரி நாட்டின் தனது எல்லை அருகில் ஓர் நீர் அணையை நிர்மாணிக்க தொடங்கியது. ஆனால் ஹங்கரி இதனால் தனது நாட்டு சுற்றாடல் பாதிக்கப்படும் என சர்வதேச நீதிமன்றில் வாதிட்டது. இப்பிரச்சனை தொடர்பான தீர்வினை அறிவுறுத்தும் போதே நீதிபதி மேற்கண்ட கூற்றினை தெரிவித்திருந்தார். அவ்வாறு சூழலுக்கு எதுவித தாக்கமும் இன்றி மட்டுமே அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் அது யதார்த்தத்தில் என்றுமே சாத்தியப்படாது.

இதே சட்டநிலை இலங்கையிலும் முற்றீர்ப்புக்களாக (Judicial Precedent) உச்ச நீதிமன்றிலும் உண்டு. அதை விட இலங்கையின் பல சுற்றாடற் பாதுகாப்போடு சம்மந்தப்பட்ட சட்டவாக்கங்கள் இயற்கை வளங்களை விகித அடிப்படையில் பயன்படுத்தல் (Rational Exploitation) எனும் பயன்பாட்டடிப்படையை வழங்கியுள்ளன. உதாரணமாக சுற்றாடற் பாதுகாப்பை மேம்படுத்தும் முகமாக அமைக்கப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையை ஸ்தாபித்த சட்டமான National Environamtal Act No 7 of 1980 ஆனது அதன் பிரிவுகள் 18,19,20 மற்றும் 21 ஆகியவை ஊடாக இந்நிலையை உறுதிப்படுத்துகின்றது.

மேலதிகமாக இலங்கையின் மிக பிரபல சுற்றாடலியல் வழக்கான எப்பாவல வழக்கு என்று அழைக்கப்படுகின்ற Bulankulame V The Secretary, Ministry of Industrial Development and others (2000) வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி அமரசிங்க தனது தீர்ப்பை பின்வருமாறு எடுத்துரைத்தார்.

Undoubtedly, the state has the right to exploit its own resources pursuant, however to its own environmental and developmental policies”

அதாவது நீதிபதி வீரமந்திரி கூறியதையெ இவரும் வேறு சொல்லாடல் மூலம் கூறியுள்ளார். இதே வழக்கில் எந்த இயற்கை பாதிப்பான அபிவிருத்தியும் வறுமை ஒழிப்பு எனும் தொனிப்பொருளின் கீழ் நியாயப்படுத்த கூடியதே !

சுற்றாடலியற் சட்டத்தின் படி Polluter Pays Principle என்பது சுற்றாடலை மாசுபடுத்தியோன் அதை நிவர்த்திக்கும் வழியை காண வேண்டுமென்பதாகும். அவ்வகையில் இப்பாதை அமைப்பால் ஏற்படும் சுற்றாடற் ஊறுகட்கு யாராவது முகம் கொடுத்து இருப்பின் அவர்கள் அதற்கு தகுந்த இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும். இது இந்திய வழக்கான Indian Council for Enviro-Legal Action and others V Union of India மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இலங்கை சட்டங்களின் படி  ஓர் கணக்கெடு சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தும் ஓர் அபிவிருத்தி திட்டமானது சுற்றாடற் தாக்க மதிப்பீட்டை (Environmental Impact Assessment) செய்ய வேண்டடியது அவசியமாகும். சில சந்தர்ப்பங்களில் இதற்கு மேலதிகமாக சமூக தாக்க மதிப்பீடும் (Social Impact Assessment) கோரப்படுவதுண்டு. அதன் பின்னரே அத்திட்டத்திற்கான அனுமதி குறிப்பிட்ட சட்டங்கள் வாயிலாக ஸ்தாபிக்கப்பட்ட திணைக்களங்கள் மூலம் வழங்கப்படும்.

இத்தேவைப்பாட்டை வலியுறுத்தும் சட்டங்களாவன
01.National Environmental Authority Act
02.The National Heritage Wilderness Ares Act No 3 of 1988
03.Forest Ordinance of 1907
04.Fauna and Flora Ordinance No 49 of 1993
05.Soil Conservation Act
06. Mines and Minerals Act No 33 of 1992
07.Cost Conservation Act No 57 of 1981
08.Fisheries and Aquatic resources Act No 2 of 1996
09.The Antiquities Act No 24 of 1998

எனவே மேற்குறிப்பிட்ட சட்டங்கள் யாவும், அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் சட்டமுறைமைகளை கடைப்பிடித்து சுற்றாடல் தாக்க தகவளவை கட்டுப்படுத்த வேண்டும் என கூறுகின்றதே தவிர அபிவிருத்தியே வேண்டாம் என தடை செய்யவில்லை. உண்மையில் இயற்கையுடன் தகவளவு கூட முரண்படாவிட்டால் இன்றைய நாகரீக மனித சமூகத்தின் எழுச்சி என்பது சாத்தியப்பட்டிருக்காது. நாம் கற்கால யுகத்தை தாண்டியிருக்கவும் முடியாது.

இன்யைற மனித உரிமைகள் கூட தன்னுள் அபிவிருத்திக்கான உரிமை (Right to Development)  என்பதை ஓர் பரந்தளவு எண்ணக்கருவாக கொண்டுள்ளது. எனவே கனதிபெறா சுற்றாடற் பாதிப்பு எனும் ஒற்றை காரணத்தை காட்டி மறுபக்க நிலைத்தகு பயன்தரு அபிவிருத்தியை தடை செய்வதானது முகத்தளவிலேயே புறந்தள்ளக்கூடியதும் இலங்கையை ஆசியாவின் ஆர்ச்சரியம் மிக்கதாக்குவோம் எனும் தேசபியமன்னியத்திற்கு எதிரானதும் ஆகும்.


 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது