இன்று மன்னார்
நகரப்பகுதியில் மியன்மாரில் தொடர்ச்சியாக ஓர்
நிலவெல்லை ஊடறுத்து அதில் காணப்படும் அல்லது பூர்வீகமாக காணப்படுகின்ற முஸ்லீம் மக்கள்
தொடர்ச்சியாக சொல்லணா துன்பத்திற்கு ஆட்படுத்தப்படுவதை எதிர்த்து அதில் அடங்கியுள்ள
மனித உரிமை மீறல்களை கண்டித்து ஓர் ஆர்ப்பாட்டம் ஒன்று அல்லது கவனயீர்ப்பு கூட்டம்
ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இடம் பெற்று முடிவடைந்துள்ளது. இதில் சாதாரண மனித உரிமை
மீறலுக்கான ஓர் கண்டனம் என்பதை தாண்டி ஒரு தமிழ் சார் ஒரு நபர் சார் இயக்கத்தாலேயே
இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இரண்டு
நாட்களுக்கு முன்னர் முஸ்லீம்கள் இலங்கையிலும் குறிப்பாக மன்னாரிலும் சிறப்பாக அவர்களது
பண்டிகையை கொண்டாடிய போதும் கூட இந்தளவு ஓர் எதிர்ப்பை அல்லது ஓர் கண்டன செய்தியை மியன்மார்
அரசிற்கு எதிராக மேற்கொண்டமை தொடர்பில் என்னால் ஓர் உறுதியான ஒரு முடிவிற்கு வர இயலவில்லை.
மேலும் இன்றைய
பொழுதில் மியன்மார் என்ற வார்த்தை கூட உச்சரிக்க முடியாத அல்லது ஏதோ ஒரு கண்கட்டிற்கே
பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டதாக அறிகின்றேன். குறிப்பாக இதில் வடமாகாண சபையை பிரதிநிதித்துவம்
படுத்தும் அமைச்சர் ஒருவரும் மற்றும் முன்னார் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினரும் கலந்து
இதை ஏதோ ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் தள்ள முற்படுவதாகவும் பலரும் கருத்து தெரிவிக்கின்றார்கள்.
எது எவ்வாறிருப்பினும் பலம் மிக்க சமூக வலையமைப்பான முகப்புத்தகத்தில் இலங்கை முஸ்லீம்களுக்கு
இது தேவையில்லாத வேலை எனவும் இது பௌத்த பேரினவாதத்தின் கோபத்தை இன்னும் கிளறி இலங்கை
வாழ் முஸ்லீம்களுக்கு பாதிப்பைவ ஏற்படுத்தும் என நிபுணத்துவ துறைசார் முஸ்லீம் நபர்
ஒருவரும் பதிவிட்டுள்ள நிலையில் தமிழர் தமது அரசியல் அல்லது பயங்கரவாதம் என பிரகடனப்படுத்தப்பட்டு
பின்னர் இரத்தக்குழம்புடன் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு பின்னரெல்லாம் தேவைப்படும்போதெல்லாம்
பூச்சாண்டியிற்காக உயிர்ப்பூட்டப்பட்ட நியாயமான ஓர் அலகிற்கான தாகத்தை சில பொதுக்கொள்கைகள்
எனும் அடிப்படைவாதத்தை மெருகூட்டுவதன் மூலம் தாரைவார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்
என்பது மட்டும் மறைமுகமாக அரங்கேறி வருகின்ற ஓர் காலக்கொடு8ம என்பது மட்டுமே இன்று
என்னால் உறுதிப்படுத்த முடிந்த ஒன்றாகும்.
ஏனெனில் நிலையான
கோட்பாட்டின் படி காலம் பலவற்றை மாற்றும் அல்லது மறக்கப்பண்ணும் இவ்வாறான பொது அணைப்புக்கள்
சிலவற்றை வேகப்படுத்தும் அல்லது உள்ளூர மந்தப்படுத்தும் என்ற எனது நிலைப்பாடு எவ்வளவு நிஜமானது என்பதைக் கூட காலமே சொல்லும்.....
அர்ஜின்
05-09-2017