கலையுலக படைப்பாளிகள் நமது கற்பனை திறக்கு அப்பாற்பட்டு வரலாற்று சுவடுகளை எம் கண்முன் என்றும் நிறுத்த தவறியதில்லை எனும் கருப்பொருளிற்கமைய Martian Scorsese இன் GANGS OF NEW YORK எனும் வரலாற்று திரைப்படம் சாட்சியாகின்றது. சட்டம் என்பது சமூகத்தை ஆளும் ஒரு தொகுதிவிதிகள் என வரைவிலக்கணப்படுத்த முடியாவிடினும் மறுவகையில் சமூக விதிகளே சட்டமாகும். எனவே சமூகமே சட்டத்தை உருவாக்குகின்றது. என்பது தவிர்க்க முடியாதது.
வழக்கமான திரைக்கதைப்பாணியின்படி கதாநாயகன் (குடியேற்ற வாசி) வில்லன் (உள்ளுா் வாசி) தன் தந்தையை கொன்றதற்காக பழிதீா்ப்தே கதைக்கருவாகும். வேறுபட்டு நின்ற குடியேற்ற வாசிகளை ஒன்றினைப்பதன் மூலம் தன் வெற்றிக்கு அடித்தளம் இடும் கதாநாயகன் சுகந்திர காற்றை சுவாசிக்க எத்தனிக்கும் ஒவ்வொரு இனத்தினதும் கூட்டுறவான பரஸ்பர நம்பிக்கை தளத்தின் வலிமையையும் தேவைப்பாட்டையும் உணர்த்துகின்றான். அதோடு தன்னோடு போரிட்டு இறந்த எதிரியின் புகைப்படத்தை தன் விடுதிச்சாலையில் உருவேற்றியிருக்கும் வில்லன் எதிரியின் வீரத்தயும் மதிக்கும் உயர் குணத்திற்கு வித்திடுகின்றான்.
ஒரு பெண் இல்லாமல் வாழ்வே சுவைப்பதில்லை எனும் பித்தனின் வரிகளுக்கேற்ப ஒரு குடியேற்ற பெண்ணால் திரைக்கதை சுவாரசியமாக்கப்படுகின்றது. எனினும் அவளின் வாழ்க்க சம்பவங்கள் வயிற்று பிழைப்பிற்கான போராட்டங்கள் ( கொள்ளை விபச்சாரம் ) அதோடு பசிக்காக பிணங்களை திடுடி விற்று குடும்பம் நடாத்தும் யாதர்த்தம் என்பன எமக்கு அக்கால அமெரிக்காவின் நரக போராட்டங்களை ஊடாட்டுகின்றது. ஆபிரகாம் லிங்கனின் அடிமை ஒழிப்பு பிரகடனத்தின் போதான வெள்ளையர்களின் நீக்ரோக்கள் மீதான கொலைவெறியாட்டமும் அடித்தே கொல்லுதல் மற்றும் தீயில் எறிதல் எனும் கொடும் செயல்களும் நிறவெறியின் உச்சகட்டத்தை காட்டுகின்றது.
கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பில் தப்பிக்க வேண்டும் எனில் பெருந்தொகை தண்டம் என்பன பொருளாதார வர்க்க ரீதியில் இருவேறுபட்ட குழுவினரிடையே பரிணமிக்கும் வர்க்க வேறபாட்டை சிக்கலாக்குகின்றது. அதோடு நிறைவேற்று துறை மற்றும் காவல் துறையினரின் இலஞ்ச ஊழல் நடவடிக்ககைளையும் தெளிவாக விபரிக்கின்றது இத்திரைப்படம்.
Leon Dicapio , Daniel Day-Lewis and Cameron Diaz ஆகியோரின் நடிப்பில் 166 நிமிடங்கள் எம்மை கட்டிப்போடும் இத்திரைகாவியம் அடக்கப்படும் இனம் ஒன்றிணைந்து தம் உரிமைகளை நிச்சயம் ஈன்றெடுக்கும் இன்னோர் வரலாற்று சான்றாக ஆவணப்படுத்தப்படும் என்பது திண்ணமே !!!!
No comments:
Post a Comment