Social Icons

Pages

Monday, 13 February 2012

எண்மிய தமிழ் நுாலகம்

 
www.noolaham.org எனும் இலங்கைத்தமிழ் எண்மிய நுாலகமானது பல தரப்பட்ட தமிழ் வெளியீட்டு ஆக்கங்களை தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. இன்றைய தமிழ் பேசும் இலங்கையரின் வரலாற்று சான்றுகள் அழிக்கப்பட்டு வரும் வேளையில் இவ்வாறான இலத்திரனியல் சேமிப்புக்கள் ஆவணங்களின் பாதுகாப்பிற்கும் தொடர் தேர்ச்சியான தகவற் பெறுகைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். இருப்பினும் தன்னார்வ தொண்டர்களை மட்டுமே கொண்டு இயங்குவதால் ஏற்படும் தொழினுட்ப மற்றும் பௌதீக மட்டுப்படுத்தற் காரணிகளையும் இத்தளத்தை அணுகி  பயனுறுதலின் போது உய்ர்க்கமுடிகின்றது . இருப்பினும் இவ்வாறான முயற்சிகள் மற்றும் தொடரான இற்றைப்படுத்தல்கள் என்பன மேலும் இம்முயற்சிகளை சிறப்பாக்கும் என நம்புகின்றேன்.

ஆனால் பல ஆவணங்கள் பதிப்புரிமை சம்மந்தப்பட்ட ஆக்கக்கூறுகளை உள்ளடக்குவதால் ஏற்படும் சிக்கல்கட்கு பதிப்பாசிரியர்களின் விட்டுக்கொடுப்பு என்ற ஒன்றைத்தவிர மாற்றுபாயமில்லை. இதன் காரணமாக தானோ சட்டத்தகவல்களை இத்தளம் மூலம் திரட்டுவதில் சற்று பின்னிற்க வேண்டிய சூழ்நிலை தோற்றப்படத்தப்பட்டுள்ளது

இணையத்தளத்தை அணுக இங்கு சொடுக்கவும்..

No comments:

Post a Comment

 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது