நோர்வேயின்
தற்போதைய அரசியல் யாப்பு 1814 வைகாசி 17 ம் திகதி ஏற்படுத்தி கொள்ளப்பட்ட எடிஸ்வொல்
பிரகடனம் மூலம் வரையப்பட்டதாகும்.
இது
நாடு எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும் எனும் அடிப்படை விடயங்களை கூறுவதோடு நடத்தை கோவை
சட்டங்களை எழுத்திலான யாப்பாக மாற்றுவதற்கான ஓர் துாண்டியாகவும் பார்வைக்குட் பட்டிருக்கின்றது.
இவ்யாப்பானது
அடிப்படையாக மூன்று விடயங்களை உள்ளடக்கியுள்ளது. மக்களின் இறைமை, வலு வேறாக்கம், மனித
உரிமைகள்.
அரச
இயந்திரத்தின் மூன்று செயலாண்மைகளும் கீழ்வருமாறு வகுக்கப்படும்.
01.சட்டவாக்கத்துறை,
பாதீடு மற்றும் அரச இயந்திரத்தின் மேலாண்மை பணிகள் பாராளுமன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
02.
நிறைவேற்று அதிகாரம் மன்னரிடம் ( அரசாங்கத்திடம்) உள்ளது. இவர்களது பணி பாராளுமன்ற
விடயங்கட்கு விளைவு கொடுப்பது தான்.
03.நீதி
துறை அதிகாரங்கள் நாட்டில் நீதிமன்றங்களிடம் உண்டு. உயரதிகார மன்றாக உயர் நீதிமன்றம்
விளங்குகின்றது.
பாராளுமன்றம்
ஊடாக மக்கள் பின்வரும் விடயங்கள் ஆளப்படுகின்றன.
சட்டங்களை நிறைவேற்றல், பண பரிமாற்றங்கள், வரி விதிப்பு மற்றும் அரசாங்கத்தை
கட்டுப்படுத்தல்.
நாட்டின்
ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில் பின்வரும் ஏற்பாடுகள் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
01.எந்த
மனிதனும் சட்டத்தினாலன்றி குற்றவாளி என தீர்க்க முடியாது.
02.எந்த
மனிதனும் சட்டத்தால் தாபிக்கப்பட்ட நீதிமன்றாலன்றி தண்டிக்கப்பட முடியாது.
03.நோர்வேயில்
பத்திரிகை சுகந்திரமும் பேச்சு சுகந்திரமும் கட்டுப்பாடற்றவை.
04.மத
வழிபாட்டிற்கான பூரண உரிமை எந்த மதத்தினருக்கும் உண்டு.
05.
எந்த மனிதனும் முழுமையாக நட்டஈடு இன்றி தனது சொத்துக்களை விட்டு விலக வேண்டியதில்லை.
06.
அனைத்து பிரஜைகளும் தாம் பணியாற்றவும் பணிச்சூழலை தெரிந்தெடுக்கவும் உரித்துடையவர்கள்.
07.
சாமி இன மக்கள் தொடர்பில் நோர்வே அரசு விஷேட பொறுப்புக்களை கொண்டுள்ளது.
யாப்பை
சீர்திருத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை எனிலும் அன்று அவையில் பிரசன்னமானோரின்
பெரும்பான்மை போதுமென யாப்பு வரையறுக்கின்றது.
பாராளுமன்றமைவாதம்
பொதுவாக பெயரளவிலான மன்னராட்சியையும் நிகரளவில் சீரிய காலமுறைமையில் தேர்தல்கள் மூலம்
இடம் பெறும் அரசாங்கத்தின் ஆட்சியையும் சுட்டுகின்றது. ஆனாலும் அரசாங்கம் பாராளுமன்றில்
தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு அல்லாவிடின் தனது பதவியை துறக்க வேண்டும்.
பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும்.
1870
இல் ஏற்பட்ட சில அரசியல் களநிலைகளை தொடர்ந்து நிறைவேற்று துறையின் உறுப்பினர்கள் சில
சம்பவங்களின் போது பாராளுமன்றில் உரையாற்ற அனுமதிக்கபடுகிறார்கள் ஆனால் வாக்களிக்கும்
உரிமை முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
மன்னர்
வாக்கரிமை உள்ளவர் ஆயினும் மரபு வழக்கப்படி அவர் வாக்களிப்பதில்லை. மன்னரை தவிர அனைவரும்
பாராளுமன்றிற்கு வந்து நேரடியாக மன்ற அமர்வுகளை அவதானிக்க முடியும். அதே நேரம் நேரடி
ஒளிபரப்பாக அமர்வுகள் உள்நாட்டு தொலைக்காட்சிகளில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
அத்தோடு
1814 இல் உயர் செல்வந்த 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கட்கு மட்டுமே என மட்டுப்படுத்தப்பட்டிருந்த
வாக்களிக்கும் உரிமை 1978 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவர்க்கும் என்றாக்கப்பட்டது.
No comments:
Post a Comment