நட்பு என்ற சொல் ஏதோ பொருள்கோடல்களிற்கு அப்பாற்பட்டு உயிர்களிடையே உலாவி வரும் உணர்ச்சிகளில் தனித்துவமானதும் உன்னதமானதாகும்.
மனித
உறவுகள் பெரும்பாலும் இரட்டிப்பு சொந்தம் என்றோ அல்லது திருமண முறை உறவுகள் என்றோ உறவு
முறைமைகளை உறுதிப்படுத்தி கொள்கின்றோம். அதோடு பிணைப்பை பின்ணிணைக்கும் காரணிகளாக மதம்,சாதி,இனம்
அதோடு மானிடம் தாமாக வரையறுத்த மட்டுப்படுத்தற்காரணிகளையும் சார்ந்தே பிணைந்துள்ளது.
விசித்திரமும்,
தனித்துவமும் என்னவெனில் நட்பு மனித உயிரிகளை தாண்டி ஐந்தறிவு ஜீவன்களிடமும் புரையோடி
காணப்படுவதுதான். சோற்றிற்கு நன்றி காட்டும் நாய் முதல் வித்தைகளில் அடக்கி ஆளப்படும்
சிங்கம் வரை மனிதனுக்கு இசைந்து போவது நட்பால் தானே !
நண்பனுக்காக
உயிரை கொடுப்பது எளிது, ஆனால் நட்பிற்காக உயிரை கொடுக்கக்கூடிய நண்பன் கிடைப்பது அரிது.
எனும் முதுமொழிக்கு புரூட்டஸ் காலம் முதல் இன்று வரை நட்பிற்கான துரோகங்கள் தொடர்கதையாக
உள்ளது. நட்பு அல்லது நண்பர் வட்டம் ஓர் காரணத்தையோ, கொள்கையையோ வைத்தே உருவாகுகின்றது
என்பது வெளிப்படை. அதற்காக எதிரிகளின் உருவாக்கம் அல்லது செயற்பாடு என்பது மேலும் நட்பை வலிமைப்படுத்துகின்றது.
ஏனெனில் வாழ்வின் அர்த்தமே வெற்றி என்ற ஒன்றிலேதான் தங்கியுள்ளது. எதிரிகள் போட்டியை
உருவாக்குவார்கள், போட்டி நம்மை சிறந்தவராக்குகின்றது, அல்லாவிடில் நாம் உள்ளதை மட்டும்
கொண்டு திருப்தியடைந்து விடுவோம்.
ஆனால்
அந்தப்போட்டி ஆரோக்கியமானதாக, முதுகில் குத்தும் வழக்கத்தை பழக்கமாக்காததாக இருப்பது
அவசியம். ஆனால் இன்று முகதுதி பாடி முதுகில் குத்துவோர் அனைவரும் சிறந்த தியாக உள்ளங்கள்
போலவும் உண்மையை உரக்க சொல்பவர்கள், அனைவருக்கும் சமநிலையை நிகழளளவில் பெறவேண்டும்
தீராத ஆவலுடையவர்கள், கட்டுப்பாடற்றவர்களாகவும் அன்பில்லா முரடர்களாகவும் நோக்கப்படுகின்றனர்.
ஆனாலும்
அவர்கள் அறிவார்கள் யாரென்பதை தளங்கள் என்ன செய்கிறோம் என்பதை அவர்களின் கொள்கையும்
வாழ்வும் இதுதான் அதாவது “எனக்கு அடிமைகள் யாருமில்லை நான் யாருக்கும் அடிமையுமில்லை”.
ஆனால் முகதுதி பாடிகளோ முதகெலும்பற்ற தம்மை அடிமைகளாக அர்ப்பணித்து ஏதோ ஒன்றை பெறமுயலும்
அப்பாவி அடிமைகள் அவர்கள் ஏனெனில் சொற்பகால சலுகைகளிற்காக தமது உரிமைகளை விட்டுக்கொடுப்போர்
அந்த சலுகைகளை தக்கவைப்பதும் இல்லை, உரிமைகளை அனுபவிப்பதுமில்லை.
ஆனால்
இளமையில் ஏற்படும் நட்பு ஒழுங்காக பராமரித்து சக்திகள் ஒன்று குவிக்கப்படின் மாபெரும்
சிகரங்கள் இலகுவாக அடையப்பட ஓர் இலகுபொறிமுறையாக காணப்பட இளமையிவ் தகா சேர்க்கை ஒருவரின்
ஒட்டு மொத்த வாழ்வையே முழுமையாக நாசமாக்கிவிடும் ஓர்
இலக்கை நோக்கி குறிபார்த்தெய்யப்பட்ட அம்பு போல் செயற்பட வேண்டிய நாம் சொந்த விருப்பு
வெறுப்புகட்கு அப்பாற்பட்டு நாம் ஏற்படுத்திக்கொண்ட பொது இலக்கிற்காய் உழைக்க வேண்டும்.
மொத்தத்தில தீயா வேலை செய்யணும் நட்புகளா !
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி
ReplyDeleteஇது எதில கொண்டு போய் விடுமோ ! இருந்தாலும் போராடுவோம்....
Delete