Social Icons

Pages

Thursday, 25 August 2016

தண்டனைச் சட்டக்கோவையின் பொதுப்பாதுகாப்புக்கள் நியதிச்சட்ட குற்றங்களுக்கும் பாதுகாப்பளிக்குமா ?




,yq;if Nghd;w nropg;ghd gy; tifik rl;l MSiffs; cs;s rl;l ,iwikfs; cyfpy; rpy ehLfl;F khj;jpuNk cupait vd;w ngUikia ehk; ngw;wpUg;gpDk; gy rl;l tplajhdq;fs; kw;Wk ஒரு பல்படி பரப்பு vd;gd rl;ltpayhsh;fl;F vd;WNk jiyapbahd tplaNk. mjpYk; rl;lj;jpd; Nrhjidf;$lkhd ePjpkd;wq;fspy; gytif rl;lf;Nfhl;ghLfs; gy Neuq;fspy; Kuz;rhh; விளைவுகளை  Vw;gLத்துtij jLf;f KbahJ.


MdhYk; Fw;wtpay; rl;lk; nghJthf epajpr;rl;lq;fshff; fhzg;gLtjhy; ,e;jr; rpf;fy;fs; vOtjpy;iyahapDk; xd;wpw;F Nkw;gl;l Fw;wtpay; epajpr;rl;lq;fs; xd;Wld;  ஒன்று இசைந்தோடும் சந்தர்ப்பங்களில் சட்டச் சிக்கல்கள் எழுவதில் ஆச்சரியங்களில்லை. குறிப்பாக இலங்கை காலணித்துவ ஆட்சியின் போது பிரித்தானிய பொதுச்சட்ட கொள்கைகளை உள்வாங்கி அமைக்கப்பட்ட  இலங்கை தண்டனைச் சட்டக் கோவை”யானது இன்றுவரை இலங்கை குற்றவியல் சட்டத்தில் பொதுவான பரந்த ஆளுகையை உள்வாங்கி காணப்படுகின்றது. எனினும் பிற் காலங்களில் பெருகி வந்த தொழினுட்ப வளர்ச்சி காரணமாக புதிய குற்றங்கள் சமூகத்தில் உருவாகத் தொடங்கியதால் பாராளுமன்றம் அக்குற்றங்களை நியதிச்சட்டம் (Statutory laws) மூலம் நியதிச்சட்டக் குற்றங்களாக (Statutory Offences) ஆக்கியுள்ளது.


இருப்பினும் ஆங்கில பொது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்செயல் (Actus Reus) எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு குற்றமனமும் (Mens Rea) இங்கு முக்கியமானது. அதாவது வழக்கு தொடுநர் (Prosecutor) சட்டத்தால் தடுக்கப்பட்ட செயலை ஒருவன் செய்ததாக  (Commission) அல்லது சட்டத்தால் செய்ய நிர்ப்பந்தித்த செயலை செய்யாது விட்டதாக (Ommission) குறிப்பிட்டு காட்டிய போதிலும் அதில் செயல் அல்லது செய்யாமை போன்ற காரணி மட்டுமே ஒருவனை குற்றவாளி என தீர்ப்பாக்க வைக்க ஏதுவான ஒரு வலிதான காரணியாக அமைய மாட்டாது. ஏனெனில் வழக்குத் தொடுநர் செயலை விட அச் செயலின் பின்விளைவான தாக்கத்தை (Consequences of the Crime)  அவன் முன்னமே அறிந்து அதைச் விளைவிக்கும் மனப்பான்மையை அதாவது குற்றமனப்பான்மையை (Mensrea) கொண்டிருந்தான் என நிரூபிக்க வேண்டிய அவசியமாகும்.


Oxford Dictionary 6th edition இன் வரைவிலக்கணத்தின்படி
Actus Reus (குற்றச் செயல்)
Mens Rea (குற்ற மனம்)
The essential conduct element of a crime that must be proved to secure a conviction. In most cases the actus reus will simply be an act accompanied by specified circumstances.
The state of mind that the prosecution must prove an element to have that at the time of committing a crime in order to secure a conviction.




ஆயினும் இன்றைய நியதிச்சட்டங்கள் பலவும் Mens Rea என்ற தேவைப்பாட்டை முகத்தளவிலேயே (Prima facie) புறக்கணிப்பதாக உள்ளது. அதாவது சட்டத்தின் பிரிவுகள் எண்ணம் (Intention) என்பதை குற்றத்தின் அடிப்படைக் கூறுகளாக காட்டுவதில்லை. ஆயினும் நியதிச்சட்டங்கள் எது எவ்வாறான விளைவுகளை காட்டினும் நீதித்துறை  செயற்பாட்டால் ஆங்கிலப் பொதுச்சட்டத்தின் கீழ் ”இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின்” கீழ் வழங்கப்படுகின்ற பாதுகாப்புக்கள் அனைத்தும் இன்று இலங்கை சட்டத்துறையின் நீதிப்புனரமைவு செயற்பாட்டால் அனைத்து குற்ற நியதிச்சட்டங்களுக்கும் கிடைக்கின்றது.


அதாவது நியதிச்சட்டங்கள் Mens Rea என்பதை ஒரு குற்ற உறுதிப்படுத்தல் காரணியாக ஏற்காவிடினும் ”இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின்” பகுதி IV இன் கீழ் பிரிவுகள் 69 தொடக்கம் 99 வரையானவை நியதிச்சட்டங்களுக்குமான பாதுகாப்பாக அமைகின்றன. அதிலும் குறிப்பாக பிரிவு 72 ஆனது பரந்தளவில் நியதிச்சட்டங்களுக்கான பொதுப்பாதுகாப்பாக அமைகின்றது.

“இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின்”  பிரிவு 72 ஆனது பின்வருமாறு கூறுகின்றது;

                ”சட்டமுறை நியாயமுள்ள அல்லது சட்டப் பிழையொன்றல்லாது நிகழ்வுப் பிழையொன்றினால் தமக்கு அது சட்டமுறை நியாயமானதாகும் என நல்லெண்ணத்துடன் நம்பும் ஆளெவராலும் செய்யப்பட்டதெதுவும் தவறொன்றாகாது”.


எனவே இந்த பொதுப் பாதுகாப்புக்கள் இலங்கை தண்டனைச் சட்டக் கோவையினால் குறிப்பிட்ட குற்றங்களுக்கு மட்டுப்படுத்தப்படாது அனைத்து நியதிச் சட்டங்களுக்கும் ஏற்புடையதாகும்.
இந்த சட்ட நிலையானது Perera V. Munaweera என்ற வழக்கில் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதில் வழக்குத் தொடுநர்  குற்றச் செயலை நிரூபித்த பின்னா் குற்றம் சாட்டப்பட்டவா் குற்ற மனத்தின் அடிப்படையில் தனக்கான பாதுகாப்பை பெற்றுக் கொள்ள முடியும். அதாவது அவா் எந்த நியதிச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருப்பினும் அவா் தனக்கு குற்றமனம் இல்லை எனக்காட்டி நிரபராதியாகத் தன்னை நிரூபித்து விடுதலையடைய முடியும்.


சட்டத் தீா்ப்புக்களின் படி பெரும்பான்மையான நியதிச்சட்டங்கள் இந்த பொதுப் பாதுகாப்புகளை ஏற்று அங்கீகரித்துள்ளன.
1.        Motor Traffic Act-   Gunasekere V. Dias Bandaranayake (39 NLR 17)
2.        Food and Drugs Act-  S.M.Thasthakeer V. P.J.N.Jayasekera (75 NLR358)
3.        Control of  Prices Act -  L.Munasinghe V. Pieris 


எனவே ஒவ்வொரு நியதிச்சட்டமும் குற்ற மனத்தை குற்றத்தின் நிரூபத்தின் அங்கமாக ஏற்காவிடினும் இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பொதுப் பாதுகாப்பு என்ற அங்கமாக இணைத்து பாதுகாப்பை உறுதி செய்கின்றது.

 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது