v மாற்றத்தைப்
பர்சனலாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அவசரப்படாதீர்கள், உணர்ச்சிவசப்படாதீர்கள்.
v நெகடிவ்
எண்ணங்களை விட்டுவிடுங்கள்.
v ஒவ்வொரு
பிரச்சனையும் ஒவ்வொரு வாய்ப்பு.
v காலத்தோடு
ஒட்டி மாறுங்கள்.
v மாற்றத்திலிருந்து
நிறைய கற்றுக்கொள்ளலாம்.
v வியாபாரத்தில்
தோல்வி, நெருங்கியவரின் மரணம், பிரிவு, ஏமாற்றம் எதுவுமே நிலையானதல்ல.
v இன்பம்,
லாபம், மகிழ்ச்சி, குதுாகலம் எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டவை.
v சுயாச்சாதாபம்
பார்ப்பது வேலைக்கு உதவாது.
v இழப்பை
எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்.
v செய்வதையே
செய்துகொண்டிருந்தால் இதுவரை கிடைத்ததே இனியும் கிடைக்கும்.
v அடுத்தவர்
துக்கத்தை மாற்ற உதவுங்கள்.
v சந்தோஷமான
வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விஷயங்களும் உங்களிடம் இருக்கின்றன.
v என்ன,
ஏது என்று பார்க்காமல் மாற்றத்தை எதிர்க்காதீர்கள்.
v என்ன,
ஏது என்று பார்க்காமல் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
v உங்களுக்கு
நீங்களே ஒரு Change Manager.
v மாற்றத்தைத்
திட்டமிடலாம்.
v உங்கள்
பாதுகாப்பு வட்டத்தைவிட்டு முதலில் வெளியே வாருங்கள்.
v ஒன்றிலிருந்து
இன்னொன்றாக மாறும் போது முரண்பாடுகள் தோன்றும். இது சகஜமானதுதான்.
v சந்தித்தாக
வேண்டியதை எதிர்கொள்ளுங்கள்.
v நீங்கள்
எதை இழந்தீர்கள் என்பதல்ல, எங்களிடம் என்ன மிச்சமிருக்கிறது என்பதுதான் முக்கியம்.
v நீங்கள்
இழந்த ஒவ்வொன்றுக்கும் ஈடாக நீங்கள் வேறொன்றைப் பெற்றிருக்கிறீர்கள்.
v எப்போதுமே
இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. தோல்வி என்பது கீழே விழுவதல்ல. கீழேயே இருப்பது.
v ஊனமுற்று
இருப்பதற்கும் முடமாகிப் போவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
v தவிர்க்க
முடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்.
v எதிர்ப்பாதால்
மாற்றம் வலுப்பெறுகிறது.
v மாற்றம்
என்பது கண் மூடிக் கண் திறப்பதற்குள் ஏற்பட்டுவிடாது.
v மாற்றத்தை
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
v மாற்றத்தை
எதிர்பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
v சிறியதாக
இருக்கும்போதே மாற்றத்தை இனம் காணக் கற்றுக்கொள்ளுங்கள்
v பழைய
தீர்வுகளை வைத்துக் கொண்டு புதிய பிரசனைகளைத் தீர்க்க முடியாது.
v ரிஸ்க்
எடுக்காமல் இருப்பதுதான் நீங்கள் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க்.
v எல்லாமே
ரிஸ்க்தான்!
-சிரித்தால் ரிஸ்க். ‘ஒரு மாதிரி’
என்பார்கள்.
-அழுதால்
ரிஸ்க். செண்டிமென்டல் என்பார்கள்.
-ஒருவருக்கு
உதவி செய்தால் ரிஸ்க். ஏன் தலையிடுகிறாய் என்று கேட்பார்கள்.
-உங்கள்
கனவுகளைச் சொன்னால் ரிஸ்க். எகத்தாளம் செய்வார்கள்.
-சேமிப்பது
ரிஸ்க். தொலைந்துபோகலாம்.
-காதலித்தால்
ரிஸ்க். நீங்கள் காதலிக்கும் நபர் உங்களை விரும்பாமல் போகலாம்.
-நம்பிக்கை
வைப்பது ரிஸ்க். நீங்கள் நினைப்பது நடக்காமல் போகலாம்.
-வாழ்வதே
ரிஸ்க்தான். எந்த நேரமும் நீங்கள் இறந்து போகலாம்!
v நீங்கள்
மாற வேண்டுமானால் ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும்.
v சிறிய
மாற்றங்களே பல சமயங்களில் பெரிய பிரச்சனைகளைத் தீர்த்து விடும்.
v உங்கள்
துயரத்தை நீங்கள் மறந்து விடுங்கள். அது தண்ணிர் ஓடுவது போல ஓடி மறந்து விடும் (ஜாப்
11.16 பைபிள்)
v கடலில்
நீண்டிருக்கும் நிலத்தைப் போல் நீங்கள் இருக்க வேண்டும். அதன்மேல் அலைகள் தொடர்ந்து
மோதினாலும் அது உறுதியாக நிற்கிறது. அதன் மேல் மோதும் ஆர்ப்பரிக்கும் அவைகள் அடங்கிய
அமைதியாகின்றன-மார்கஸ் அரேலியஸ்.
v உராய்வின்றி
ரத்தினங்களைக் பளபளப்பாக்க முடியாது. சோதனைகளின்றி மனிதரைச் சரியானவராக்க முடியாது-கன்/பூசியஸ்.
v சந்தோஷமாக
ஏற்றுக்கொள்ளும்போது சுமை தெரிவதில்லை-ஒவிட்.
v நமது
உடலில் குறிப்பிட்ட அளவு விஷத்தைச் செலுத்தி நமது எதிர்ப்பு சக்திளைத் துாண்டி சில
உடல் நோய்களுக்கு எதிராக எடலை நோய் எதிரிப்பு சக்தி பெற வைப்பது போல், வாழ்வின் எதிர்பாராச்
சோதனைகளை எதிர்கொள்வதால், பிரச்சனைகளுக்கு எதிராக நம்மால் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்
கொள்ள முடியும்- டபிள்யூ. பேரன் உல்/ப்.
v நாம்
ஏற்றுக்கொள்ள அவசியமானவற்றைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்வோம்.
v தைரியமாக
இறுதிவரை போரிடுபவர்களுக்கு, வாழ்வின் இருளான எல்லாவ்றையும் வெற்றி கொள்வது சாத்தியம்
– ஜேம்ஸ் ஆலன்.
v வளையாத
கோபுரத்தைப் போல் நிமிர்ந்து நில். புயலின் அதிர்ச்சியும் அதை ஒன்றும் செய்யாது – தான்தே
v உங்கள்
பயத்தை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தைரியத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்-
ராபர்ட் லுாயிஸ் ஸ்டீ வன்சன்
v முற்றிலும்
புதிதாக ஆரம்பிப்பது அவமானமில்லை. அது ஒரு வாய்ப்பு –ஜார்ஜ் மாத்யூ ஆடம்ஸ்.
v எல்லாவிதக்
கசப்பு, கோபம், சண்டை, போராட்டம், தவறான பேச்சையும், விரோதம் உட்பட, உங்களை விட்டு
விலக்கி வையுங்கள். – எபிசி யன்ஸ் 4.35
v நாணல்
போல மென்மையாகவும் வளையும் தன்மையோடும் இருங்கள், செடார் மரத்தைப் போல வளையாமல் இருக்காதீர்கள்.