Social Icons

Pages

Saturday, 16 March 2013

இலங்கையின் பிணைச்சட்டம் ஓர் பார்வை



01.பிணை என்றால் என்ன ?

பிணை என்பது குறித்த ஒரு நாட்டின் குற்றவியற் சட்ட முறைமையின் கீழ் குற்றவாளி என கருதப்படக்கூடியவாறான சட்டத்தால் தடுக்கப்பட்ட செயலை புரிந்த ஒருவரை அரசின் சட்டப்படியான தடுப்பிலிருந்து சில நிபந்தனைகளுடன் தற்காலிகமாக விடுவிக்கும் ஓர் செயன்முறை எனலாம்.

அத்தோடு இச்செயன்முறை ஆனது எதேத்சதிகார கைதுகளின் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் நீதித்துறை பொறியாகவும் காணப்படுகின்றது. எதேச்சதிகார கைதிலிருந்து விடுபட்டு சுகந்திரமாக வாழ்வதன்ற உரிமையானது எமது நாட்டின் அரசியலமைப்பின் உறுப்புரை 13(1) மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இலங்கை ஏற்றுள்ள “குடியியல் மற்றும் அரசியற் உரிமைக்கான அகில பிரகடனத்துவம் 1966 இன் உறுப்புரை 9 இன் மூலமும் மனித உரிமைகள் அனைத்துலக பிரகடனத்துவம் உறுப்புரை 9 மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை கோடிட்டு காட்டக்கூடியதாகும்.

இதற்கு மேலதிகமான ஓர் காரணமாக பொருளதார காரணியையும் சமூக்க காரணியையும் காட்டலாம். முதலாவதாக சிறைச்சாலை பராமரிப்பு என்பது ஓர் உச்ச கட்ட பாதுகாப்பு பழுவாகும் ஏற்னகவே போதுமான அளவு பாதுகாப்பு சர்ச்சைகள் உள்ள இடத்தில் இவ்விடயம் நேரடியாகவே பாதுகாப்பு எனும் மறைவிடத்தினுள் பெரும் பணத்தொகையை பாதீட்டில் நேரடியாகவே விழுங்கிவிடும்.

இரண்டாவது காரணியை நோக்கின் பெரும்(Grave) அல்லது வழமை(Habitual) யான குற்றவாளிகளுன் சிறு குற்றவாளிகளை ஒன்றாக சிறைப்படுத்துவது சிறு குற்றவாளிகளை பெரும் குற்றவாளிகளாக ஆக்குவதற்கான ஓர் தளஇடமாக அல்லது பயிற்சி கூடமாக மாறிவிடும் ஆபத்தும் இல்லாமலில்லை. இவற்றை எல்லாம் கருத்திற் கொண்டே குற்றவியல் நியாயாதிக்கம் பிணையை ஓர் நடைமுறையாக கொண்டுள்ளது.

02.) இலங்கையில் பிணை தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகள் யாவை ?

குற்றவியல் நடவடிக்கைக் கோவை இல 15 இன் 1979. Code of Criminal Procedure Act No 15 of 1979.

பிணைச்சட்டம் இல 30 இன் 1997. Bail Act no 30 of 1997.

விரிவான விளக்குகையில் மேற்குறிப்பிட்ட பிணைச்சட்டம் 3(2) இன் படி எந்த எந்த குற்றங்கள் குற்றவியற் நடவடிக்கையின் கீழ் பிணைக்கான வகுதிகளை கைக்கொண்டு காணப்படுகின்றதோ அவை யாவும் இப்பிணைச்சட்டத்திற்கு பிணைக்காய் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

03.) 1997 இன் பிணைச்சட்டத்தின் உட்கூறுகள் பற்றி ?

இதுவே தற்போது இலங்கையில் பிணை தொடர்பாக ஏற்புடைய சட்டமாகும். இது பிணை வழங்கக்கூடிய குற்றம் (Bailable Offence) பிணை வழங்க முடியாத குற்றம் ( Non-Bailable Offence) எனும் எண்ணப்பாடுகளை எல்லாம் யதார்தத ரீதியில் தகர்த்து இன்று குற்றங்கள் அனைத்திற்குமே பிணை வழங்கக்கூடிய நிலைமை ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சம் முற்பிணை எனும் அம்சத்தை உள்வாங்கியமை, இது இந்திய பிணைச்சட்டத்தின் நகலெடுப்பு என்றாலும் இலங்கையர்கள் என்ற ரீதியில் நாம் அனைவரும் சில ஜனநாயக பண்புகளிற்கு உரித்துடையவர்கள் என்பதை இச்சட்டம் வெளிப்படுத்துவதாக எண்ணுகின்றேன்.

இதன் பிரிவு 02 ஆனது பிணை விண்ணப்பம் அனுமதிக்கப்படுவதை விதி என்றும் பிணை மறுக்கப்படுவது விதிவிலக்கு என்றும் எடுத்துரைக்கின்றது.


04. இச்சட்டதின் விதிவிலக்குகள் அல்லது செயற்பாட்டு வரம்பெல்லைகள் பற்றி ?

இச்சட்டம் இலங்கை தண்டனை சட்டக்கோவையில் உள்ள அனைத்து குற்றங்கட்கும் பயன்படுத்த கூடிய நிகழ்தன்மையை கொண்டதுடன்  பல்வேறு நீதித்துறை விவாதங்கட்கு பின்பு இரண்டு சட்டங்களின் கீழ் உ்ள்வாங்கப்படும் குற்றங்கட்கு மட்டும் விலக்குடையதாக நீதித்துறை முற்றீர்ப்புக்கள் மூலம் இன்று அறியக் கிடைத்துள்ளது. ஆனால் நீதித்துறையில் இந்நிலைமை 1997 தொடக்கம் 2004 வரை ஓர் குழப்ப நிலைமையை பின்வரும் சட்டங்கள் மூலம் ஏற்படுத்திக்கொண்டது.

(a).Offensive Weapons Act—-தீங்கு விளைவிக்கும் ஆயுதங்கள் சட்டம்
(b). Customs Ordinance—சுங்கக் கட்டளைச் சட்டம்
(C . Bribery Act – இலஞ்ச ஊழல் சட்டம்.
(d), Firearms Ordinance.—சுடுகலன்கள் கட்டளைச்ச சட்டம்
(e). the Antiquities Act- தொல்பொருள்கட் சட்டம்
(f) Poisons, Opium and Dangerous Drugs Ordinance.—நச்சுப்பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் சட்டம்.
(g) The immigrants and Emigrants Ordinance.---குடிவரவு குடியகல்வுச் சட்டம்

விதிவிலக்கு சட்டங்கள்

1.   பயங்கரவாத தடுப்புச் சட்டம் இல 48 இன் 1979 ( Prevention of Terrorism Act No 48 of 1979 )

2.   பொதுமக்கட் பாதுகாப்பு பிரேரணையின் பெயரிலான சட்டங்கள் ( Public Security Ordinance )

இச்சட்ட நிலைமை ஆனது பின்வரும் இரு அண்மைய வழக்குகள் மூலம் நிரூபணமாகின்றது.

01.திலங்க சுமதிபால எதிர் சட்டமா அதிபர் (2004) மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு . (Thilanga Sumathipala V Atternoy General (2004) Court of Appeal judgement.)

02.றுவான் குணசேகர எதிர் ரவி கருநாநாயக்க (2005) (Ruwan Gunasekara and another V Ravi Karunanayake.)



இதன் சுருக்க அர்த்தம் இன்று பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் பொதுமக்கட் பாதுகாப்பு சட்டம் எனும் இரண்டு சட்டங்களை தவிர வேறு எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாலும் பிணைச்சட்டத்தின் மூலமாக பிணையை பெற்றுக்கொள்ளலாம்.


05.) சமூகத்தால் பாரதுாரமான குற்றங்களாக கருதப்படுகின்ற கொலை மற்றும் பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்கட்கு பிணைச்சட்டத்தின் வழியாக பிணை பெற முடியுமா ?

ஆம் முடியும். ஆனால் குற்றம் ஒன்றிற்காக மரண தண்டனை பெற்ற கைதி எனில் அவரை பிணையில் விடுவிக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கே உண்டு.


06.பிணையின் வகைகள் எவை ?

இது பிணைச்சட்டத்தின் பிரிவு 07 உடன் மேலோட்ட வாசிப்பின் பயனாக அறியக்கூடியதாகும்.

(அ). காசுப்பிணை ( காசை பிணையாக வைப்பது )
(ஆ). உறுதிப்பிணை ( உறுதியளித்து பிணை பெற்று செல்லல்)
(இ). தனிப்பட்ட பிணை ( தனக்கு தானே பிணை வைப்பது “காசு”)
(ஈ). சரீரப்பிணை (வேறோர் நபர் எதிர்வாதிக்காக காசுக்கு பொறுப்பு நிற்றல்)
(உ). பொலிஸ் பிணை (சட்டத்தினடிப்படையில் பொலிஸார் சில குற்றங்கட்கு பிணை வழங்க முடியும்.)


07.பிணையில் விடுபட்டு வெளியே வந்தவரின் கடமைப்பாடுகள் எவை?

(அ). நீதிமன்றம் கட்டளை இடுமாயின்
     01.பொலிஸ் நிலைய பதிவேட்டில் தினமும் ஒப்பமிடல்.
     02.மன்று குறித்துரைத்த தினத்தில் மன்றற்கு சமூகமளித்தல்.
     03.குறிப்பிட்ட நீதிமன்ற நியாயாதிக்க எல்லையை விட்டு வெளியேற அவசியம் ஏற்படின் நீதிமன்ற முன் கட்டளையொன்றை பெற்றுக் கொள்ளல்.

(ஆ). வழக்குடன் சம்மந்தப்பட்ட எதிர் தரப்பினருடன் ஊடாடுவதையோ சாட்சிகளை குழப்பவோ முயற்சிக்காது இருத்தல்.

(இ). சாட்சிகளை அச்சுறுத்தவோ அல்லது வழக்கை கையாளும் பொலிசாருடன் தனிப்பட்ட ஊடாட்டங்களை மேற்கொள்ளாதிருத்தல்.


08.பிணையாளரின் ( பிணை வைத்தவரின்) சட்ட கடமைப்பாடுகள் எவை ?

(அ). சந்தேக நபரை ( பிணை யாருக்காக வைக்கப்படுகின்றதோ) நீதிமன்ற கட்டளைகளின் படி அவரை மன்றின் முன் சமர்ப்பித்தல்.

(ஆ). சந்தேக நபரை மன்றில் ஒப்படைக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் வைத்த பிணையை தளர்த்தி சட்ட கடப்பாடுகளில் இருந்து விடுபடலாம்.

(இ). சந்தேக நபர் மன்றில் தோன்ற முடியாத தருணங்களில் அதற்குரிய தகுந்த காரணங்களை மன்றின் முன் சமர்ப்பித்தல்.

(ஈ). சந்தேக நபரை பிணையாளி மன்றிற்கு சமூகம் தர வைக்க முடியவில்லை என்றால் வைக்கப்பட்ட தொகையை அரசுடமையாக்க மன்றிற்கு அதிகாரம் உண்டு.

உ). சந்தேக நபர் சமூகமளிக்காவிடின் பிணையாளிக்கு அறிவித்தல் வழங்கப்படும். அவ்வறிவித்தலுக்கு பிணையாளி தகுந்த துலங்கலை காட்டாது விடின் அவர் பெயரில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது  செய்யப்படுவார்.


09. நீதிமன்றமொன்று பிணை விண்ணப்பம் ஒன்றை பரீசீலிக்கும் போது ஏற்புடையதாகும் காரணங்கள் எவை ?

(அ). குற்றசாட்டுக்கள் எவையும் மறையாக சுமத்தப்படாமல் நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டிருந்தால் ( Attorney general V Ethiri Weera 2005)

(ஆ). கடும் சுகவீனத்திற்கு எதிரி ஆட்பட்டிருப்பின்

(இ). மனைவி, பிள்ளை மற்றும் நெருங்கிய இரத்த சொந்தங்கட்கு ஏற்பட்டிருக்கும் கடும் சுகவீனம்.

(ஈ). பிள்ளையின் பராமரிப்பிற்கு வேறு வழிகள் இல்லாத போது

(உ).சந்தேக நபருக்கு எதிரான வழக்கு நடைமுறைகள் மிகவும் பலவீனமாக உள்ள போது  CA 310/92 ( Thamathina Thero V O.I.C , C.I.D )

(ஊ). பிணைச்சட்டம் ஏற்புடையதாக மாட்டாது என தீர்க்கப்பட்ட வழக்கின் தண்டனைகளிலும் கூட வழக்கு விசாரணைகள் நியாயமற்ற தாமதத்தை ஏற்படுத்தின்  (( Subramaniyam Saraswathy V Attorney General )

ஆனால் மேற்குறித்த காரணங்கள் யாவும் நீதிபதியின் தற்றுணிபின் பெயரிலேயே அதிசிறப்பு காரணங்கள் என ஏற்கப்படுவதுண்டு. இவை சட்டத்தினால் எங்கும் இவை இவை என வரையறுக்கப்படவில்லை என்பதை கோடிட விரும்புகின்றேன்.

10. நீதிமன்று பிணை விண்ணப்பம் ஒன்றினை நிராகரிக்கும் சந்தர்ப்பங்கள் எவை ?

இச்சந்தர்ப்பங்கள் பிணைச்சட்டத்தின் பிரிவு 14 இன் வாயிலாக காட்டப்பட்டுள்ளது.

(அ).நீதிமன்ற விசாரணைக்கோ அல்லது வழக்கு விசாரணைக்கோ சமூகமளிக்கமாட்டார் என மன்று கருதும் போது

(ஆ). எதிரிக்கு எதிரான சாட்சியத்தை குழப்புவாரன்றோ அல்லது நீதிக்கு பங்கம் விளைவிப்பார் என்றோ மன்று கருதுமிடத்து

(இ).பிணையில் உள்ள போது ஓர் குற்றத்தை புரிவார் என மன்று கண்டால்

(ஈ). குறிப்பிட்ட எதிரியை விடுதலை செய்வது பொதுமக்களிம் பாரிய எதிர்ப்பலைகளை அல்லது சமூக அமைதியின்மையை ஏற்படுத்தும் என மன்று கண்டால்.  பிணை மனு நிராகரிக்கப்படும்.


11. பொதுவாக பிணைச்சட்டத்தைப் பற்றிய கருத்தோட்டம் ?

இலங்கையின் பிணைச்சட்டமானது 1997 இல் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அது முழுமையாக இந்திய ஒப்புவிப்பு என்பதை மேலோட்ட வாசிப்பிலேயே விளங்கி கொள்ள கூடியதாக உள்ளது. ஆனாலும் முற்பிணை எனும் புதிய அம்சத்தை இச்சட்டம் எமக்கு அறிமுகப்படுத்தியுள்ளத. இது அபிவிருத்தியடைந்த பல நாடுகளின் குற்றவியல் நியாயாதிக்த்தில் இல்லாத ஓர் எண்ணக் கருவாகும்.

இந்திய அரசியல் வரலாறு ஊழலுக்கு பெயர் போனதால் அரசியற் பழிவாங்கல்களிலிருந்து அரசியல்வாதிகளை காப்பாற்றவே இந்த முற்பிணை என்ற அம்சம் அங்கு அறிமுகப்படுத்தபட்டது. அதை நாம் இன்று பல்வேறு காரணங்கட்காக பயன்படுத்துகின்றோம். ஆனாலும் தொடர்ச்சியாக இப்பிணைச்சட்டம் செயற்பட மன்றின் தற்றுணிபு பெருமளவு பங்கு வகிக்கின்றது என்பது குறிப்பிடதக்கது.

அத்தோடு மிக குழப்பகரமாக அண்மைய மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பில் (CA Bail No: 260-262/2009) எனும் வழக்கில் தொல்பொருட் சட்டம் (Antiquities Ordinance) இன் பிரிவு 15 படி அச்சட்டம் பிணை பற்றிய தனியான சட்டப்பிரிவை கொண்டிருப்பதானது பிணைச்சட்டத்தின் செயற்படுதகைமையை அச்சட்டத்தின் மேல் கொண்டிராது என தீர்த்தது. ஆனால் 2004 ஆம் ஆண்டு திலங்க சுமதி பால வழக்கு நேர் எதிர் சட்டக்கருவை வெளிப்படுத்தியமை கவனிக்கத்தக்கது. எனவே இது ஒரு முறைமைக்குள் அல்லது சீர்தன்மைக்குள் வரும் வரை இந்த வெற்றிடம் அல்லது குழப்பத்தன்மை தொடர்வது தவிர்க்க இயலாதது. ஏனென்றால் இதில் எதையும் பிணிக்கும் முற்றீர்ப்புக்களாக கொள்ள முடியாது. 

அடுத்த பதிவு முற்பிணை பற்றியதாகும் ( Anticipatory Bail )

Wednesday, 13 February 2013

உண்மைக்காதல்



ஜெர்மனியின் புகழ் பெற்ற இசையமைப்பாளரின் தாத்தா மோசஸ் மென்டல்சான் அழகுக்கும் அவருக்கும் ரொம்பத்துாரம். குள்ளமான தோற்றத்துடன் கூன் முதுகு வேறு.

இளவயதில் ஒருநாள் அவர் ஹாம்பர்க்கில் உள்ள ஒரு வியாபாரியை சந்திக்க சென்றார். அவருக்கு பிரம்ஜே என்ற அழகு மகள். அவநம்பிக்கை ஒருதலைக் காதலில் விழுந்தார் மோசஸ். ஆனால் அவரது அவலட்சணமான தோற்றத்தால் அவள் அவரைத் திரும்பிப் பார்க்க கூட இல்லை.



மோசஸ் ஊருக்கு புறப்படும் நேரம் வந்தது. அவர் தைரியத்தை துணைக்கழைத்துக் கொண்டு, அவளிருந்த அறையின் படிக்கட்டுகளில் ஏறினார். பிரம்ஜே உடன் பேச கடைசி வாய்ப்பு


அவளக்கு தேவலோக அழகு. அதனால், மோசஸை சாதாரணமாகக் கூட பார்க்காமல் சாகடித்தாள். பெரு முயற்சிக்குப் பின் மோசஸ் கூச்சத்தோடு கேட்டார். “திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதை நீ நம்புகிறாயா ?”

“ஆமாம்…” அவள் அவரைப் பார்க்காமல் சொன்னாள். “நீ என்ன நினைக்கிறே? என்றும் கேட்டாள்.

“நானும் அதை நம்புகிறேன்…” என்ற மோசஸ் தொடர்ந்தார். “உனக்கு தெரியமா சொர்க்கத்தில் ஒவ்வொரு ஆண் குழந்தை பிறக்கும் போதும் அது எதிர்காலத்தில் எந்தப் பெண்ணை மணக்கப் போகின்றது என கடவுள் அறிவிக்கின்றார். நான் பிறந்த போது எனது எதிர்கால மனைவியை தெரிவித்தார். “ஆனால், உன் மனைவிக்கு கூன்முதுகு” என்று கடவுள் சொன்னார்.

நான் உடனே சொன்னேன்,“ கூன்முதுகுடன் பெண் பிறப்பது பாவம். அந்தக் கூனலை எனக்கு கொடுங்கள். அவனை அழகாகப் பிறக்கச் செய்யுங்கள்.”

உடனே பிரம்ஜே அவரின் கண்களுக்குள் பார்த்தாள். அவளுக்குள் ஏதோ ஆழமான நினைவுகள் கிளர்ந்தன. அவள் மோசஸை நெருங்கி தனது கைகளை நீட்டினாள். அவரின் மனைவியானாள்.

Saturday, 9 February 2013

நோர்வே அரசியல் யாப்பு ஒரு பார்வை




நோர்வேயின் தற்போதைய அரசியல் யாப்பு 1814 வைகாசி 17 ம் திகதி ஏற்படுத்தி கொள்ளப்பட்ட எடிஸ்வொல் பிரகடனம் மூலம் வரையப்பட்டதாகும்.

இது நாடு எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும் எனும் அடிப்படை விடயங்களை கூறுவதோடு நடத்தை கோவை சட்டங்களை எழுத்திலான யாப்பாக மாற்றுவதற்கான ஓர் துாண்டியாகவும் பார்வைக்குட் பட்டிருக்கின்றது.

இவ்யாப்பானது அடிப்படையாக மூன்று விடயங்களை உள்ளடக்கியுள்ளது. மக்களின் இறைமை, வலு வேறாக்கம், மனித உரிமைகள்.


அரச இயந்திரத்தின் மூன்று செயலாண்மைகளும் கீழ்வருமாறு வகுக்கப்படும்.
01.சட்டவாக்கத்துறை, பாதீடு மற்றும் அரச இயந்திரத்தின் மேலாண்மை பணிகள் பாராளுமன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

02. நிறைவேற்று அதிகாரம் மன்னரிடம் ( அரசாங்கத்திடம்) உள்ளது. இவர்களது பணி பாராளுமன்ற விடயங்கட்கு விளைவு கொடுப்பது தான்.

03.நீதி துறை அதிகாரங்கள் நாட்டில் நீதிமன்றங்களிடம் உண்டு. உயரதிகார மன்றாக உயர் நீதிமன்றம் விளங்குகின்றது.

பாராளுமன்றம் ஊடாக மக்கள் பின்வரும் விடயங்கள் ஆளப்படுகின்றன.  சட்டங்களை நிறைவேற்றல், பண பரிமாற்றங்கள், வரி விதிப்பு மற்றும் அரசாங்கத்தை கட்டுப்படுத்தல்.

நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில் பின்வரும் ஏற்பாடுகள் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

01.எந்த மனிதனும் சட்டத்தினாலன்றி குற்றவாளி என தீர்க்க முடியாது.

02.எந்த மனிதனும் சட்டத்தால் தாபிக்கப்பட்ட நீதிமன்றாலன்றி தண்டிக்கப்பட முடியாது.

03.நோர்வேயில் பத்திரிகை சுகந்திரமும் பேச்சு சுகந்திரமும் கட்டுப்பாடற்றவை.

04.மத வழிபாட்டிற்கான பூரண உரிமை எந்த மதத்தினருக்கும் உண்டு.

05. எந்த மனிதனும் முழுமையாக நட்டஈடு இன்றி தனது சொத்துக்களை விட்டு விலக வேண்டியதில்லை.

06. அனைத்து பிரஜைகளும் தாம் பணியாற்றவும் பணிச்சூழலை தெரிந்தெடுக்கவும் உரித்துடையவர்கள்.

07. சாமி இன மக்கள் தொடர்பில் நோர்வே அரசு விஷேட பொறுப்புக்களை கொண்டுள்ளது.

யாப்பை சீர்திருத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை எனிலும் அன்று அவையில் பிரசன்னமானோரின் பெரும்பான்மை போதுமென யாப்பு வரையறுக்கின்றது.

பாராளுமன்றமைவாதம் பொதுவாக பெயரளவிலான மன்னராட்சியையும் நிகரளவில் சீரிய காலமுறைமையில் தேர்தல்கள் மூலம் இடம் பெறும் அரசாங்கத்தின் ஆட்சியையும் சுட்டுகின்றது. ஆனாலும் அரசாங்கம் பாராளுமன்றில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு அல்லாவிடின் தனது பதவியை துறக்க வேண்டும். பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும்.

1870 இல் ஏற்பட்ட சில அரசியல் களநிலைகளை தொடர்ந்து நிறைவேற்று துறையின் உறுப்பினர்கள் சில சம்பவங்களின் போது பாராளுமன்றில் உரையாற்ற அனுமதிக்கபடுகிறார்கள் ஆனால் வாக்களிக்கும் உரிமை முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.



மன்னர் வாக்கரிமை உள்ளவர் ஆயினும் மரபு வழக்கப்படி அவர் வாக்களிப்பதில்லை. மன்னரை தவிர அனைவரும் பாராளுமன்றிற்கு வந்து நேரடியாக மன்ற அமர்வுகளை அவதானிக்க முடியும். அதே நேரம் நேரடி ஒளிபரப்பாக அமர்வுகள் உள்நாட்டு தொலைக்காட்சிகளில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

அத்தோடு 1814 இல் உயர் செல்வந்த 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கட்கு மட்டுமே என மட்டுப்படுத்தப்பட்டிருந்த வாக்களிக்கும் உரிமை 1978 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவர்க்கும் என்றாக்கப்பட்டது.

Sunday, 13 January 2013

What is LAW




A simple question “What is Law” leads to a complex answer that reveals the many-faceted nature of the subject. Some think law evokes the response rules. Others think it as a means of restricting human conduct. Still others see it as an instrument for protecting their basic freedom.  Historians regard law as a reflection of mores of a society at a particular time. Sociologist regards it as a social institution developed over the years.


Natural philosophers think law is ordained by nature and universally valid.  Natural law is a body of principles of fairness and ideal justice existing for all people irrespective of time and culture. It transcends human notions of what is right and just. A positive law is one laid down by a sovereign or a duty constituted authority. It may reflect current human conduct.

Jurists assert that law, like literature is a product of political and moral values. Economists consider law as an instrument by which an efficient and dynamic economy to be brought about. It is needless to say that the law is not stable and predictable; instead, it is an endless process of interpretation, reinterpretation and counter interpretation. Law should consider not only what the law is but also what it should be.

Friday, 11 January 2013

டெல்லி பாலியல் வேட்டை ஓர் சமூகத்தள ஆய்வு



 சட்டமாணவன் என்ற வகையில் நான் கற்கும் துறை மீது எனக்கு அபிமானம் எப்போதும் உண்டு. ஆனால் சட்டம் ஓர் சமூக இயல் என்பதை அறிந்திருந்தும் மிக சிக்கல் வாய்ந்த உற்பத்தி வளமான மனித நடத்தையை அது முறைப்படுத்துகின்றது என்பதை விளங்கியும் கூட சட்ட முறையை சமூகத்தை சரியாக கைக்கொள்ள இயலுவதில்லை என்ற மனக்குறை எப்போதும் உண்டு. இது படிப்பல்ல மாறாக கல்வி.

சட்டம் என்றுமே ஓர் உருவகத்தை அறுதியாக உருவகப்படுத்துவதில்லை. அது கையாள்பவரின் தனித்திறமைக்கு ஏற்றாற் போல மறைபொருளாகவோ அல்லது வாக்கிய  பல்பொருள் கோடல்களாகவோ அமைத்து விடுகின்றன. ஆனால் இதை சட்டத்தின் நெகிழ்ச்சி என சட்டப் புலமைத்துவம் வரையறுத்து விடுவதும் உண்டு. “பாலியல் வல்லுறவு” என்பது பொதுவாக ஓர் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவளின் சம்மதமின்றி பாலியல் அங்கங்களுடன் ஓர் உடலியல் ரீதியான உறவைப்பேணல் ஆகும். இந்த வரைவிலக்கணம் மிகவும் குறுகியதும் மட்டுப்படுத்தப்பட்டதும் ஆகும். இன்றைய நவீனம் மனிதம் முன்னைய நாட்களில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு மனித வெறுப்பாண்மையை கக்க தொடங்கியுள்ளது. ஆனால் இவை இன்னோர் கோணத்தில் நாகரீகத்தின் வளர்ச்சி என்ற போர்வையினுள் முற்றாகவே சுற்றப்பட்டு விடுவதும் உண்டு. ஆனால் நாகரீக வளர்ச்சி ஒருவனை துன்பப்படுத்தி மற்றவன் மகிழ்வது அல்ல ஆனால் இன்று அது தான் நடக்கின்றது.



இனி டெல்லி வழக்கினுள் 16-மார்கழி-2012 அன்று இந்திய தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியான சாகித்தில் ஜோதியா சிங் பண்டி என்ற 23 வயது பெண்ணும் அவள் காதலனான ( முதலில் நண்பர்கள் என்று வெளியிட்ட போதும் அவர் AFP செய்தி வேவைக்கு அளித்த பேட்டியில் தாங்கள்  காதலர்கள் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.) அவேந்திரா பிரதாப் பண்டி என்கிறவரும் திரையரங்கொன்றில் திரைப்படம் ஒன்றை பார்த்து விட்டு முன்னிரவு சுமார் 09.30 மணியளவில் தங்களது இருப்பிடங்கட்கு ஒன்றாக திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது  குற்றவாளிகளான 06 பேரும் ஓர் பேரூந்தை ஓட்டி வந்துள்ளனர். ஆனால் அப்பேரூந்து பயணவழியுரிமை ( Route Pass )அற்றது.  ஆனால் அதில் வந்தவரும் தற்போது சிறுபராயத்தவர் என்ற சரச்சைக்கு உடன்பட்டிருப்பவர் இவர்கள் அருகே இறங்கி குறித்த நிறுத்தத்திற்கு இப்பேரூந்து செல்வதாக கூறியுள்ளார். இதை நம்பிய ஜோடி பேரூந்தில் ஏறியுள்ளனர். ஆனால் சிறிது பயணத்தின் பின்பு பேரூந்து வழிமாறி வேற்று வழினால் பயணித்ததும் பேரூந்தின் கதவுகள் முழுமையாக அடைக்கப்பட்டிருப்பதும் காதலனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேரூந்தில் பயணம் செய்தவர்கள் 06 பெயரும் நண்பர்கள். அவர்களிடம் இது பற்றி விவாதிக்கப் போன காதலனை இரும்பு வார்களாலும் பின்னர் கிடைத்த தடிகளாலும் தாக்கி சுயநினைவை இழக்க செய்தனர். பின்னர் கூட்டாக அந்த 23 வயது யுவதியை பாலியல் வன்புணர்ச்சிக்கு உ்ட்படுத்தினர். ஆனால் கீழே பதிவிட்ட சம்பவங்கள் ஊடாக நடந்தது ஓர் பாலியல் சார் குற்றம் என என்னால் வரையறுக்க முடியவில்லை. அது மனிதத்திற்கு எதிரான ஓர் குற்றச்செயல். அப்பெண்ணின் பிறப்புறுப்பு பகுதி மிக மோசமாக தாக்கி சிதைக்கப்பட்டுள்ளது. அவளின் எதிர்ப்பை நிறுத்த எல்போ வடிவ சில்லு மாற்றும் இரும்புக்குழாய் அடி வயிற்றில் செலுத்தப்பட்டு அவளது உணவுக்கால்வாய் அறுக்கப்பட்டு சிறுகுடலின் பெரும் பாகம் கிட்டத்தட்ட 90 வீதம் வெளியே இழுக்கப்பட்டது. இதன் மூலம் அவளது உணவு சமிபாட்டுத் தொகுதியே முற்றாக சிதைக்கப்பட்டது. அவள் தன்னை காப்பாற்றுவதற்கு போராடிய சான்றாக நான்கு பேரின் உடலிலும் அவள் கடித்த காயங்கள் உண்டு. இது வெறும் காம வெறியாட்டம் என்றோ அல்லது உளவியல் ரீதியான பிரச்சனைகட்கு முகம் கொடுத்தோரின் விளைவு என்றோ என்னால் புறம் தள்ள முடியவில்லை. இதில் திட்டமிட்ட பழிவாங்கல்கள் எவையும் இல்லை. ஆனால் இது ஒரு விளையாட்டு அல்லது ஜொலி என்றுதான் என்னால் வகைப்படுத்த முடிகின்றது.  வெறும் ஒன்றரை மணி நேரமே இந்த மிருகச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. எனவே தொடர் வேதனையை  பெண்ணிற்கு அளித்து ரசிக்கவில்லை. ஏதோ கண்டவுடன் காலால் எட்டி உதயப்படும் நாய் போல் அவள் பாவிக்கப்பட்டிருக்கிறாள். பின்னர் இருவரும் ஜோடியாகவே வீதியில் விட்டெறியப் பட்டிருக்கிறார்கள். அவள் உடலை நாராய் கிழித்த பின்பும் கூட அவள் மீது பேரூந்தை ஏற்ற முயன்றிருக்கிறார்கள். ஆனால் அரை மயக்கத்தில் இருந்த காதலன் அவளை காப்பாற்றி விட்டான். இருவரும் ஆடையின்றியே வீதியோரத்தில் கிடந்தனர்.  இன்று பிணமானவளுக்காய் வீதியில் இறங்கி கொடி பிடிக்கும் டெல்லி ஜனநாயகவாதிகள் ஒருவர் கூட அரை மணி நேரமாக உயிருக்கு போராடியவர்களை வைத்திய சாலையில் அனுமதிக்கவில்லை. பின்னர் வந்த போலீஸார் இருநிலையங்களில் எந்த காவல் நிலையத்திற்கு நியாயாதிக்கம் உள்ளது என்பதை பற்றி விவாதித்து முடித்த பின்னரே இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்தனர். 


அனுமதிக்கப்பட்ட கணத்தில் இருந்தே அவள் தன் உயிரை உயிர் காக்கும் இயந்திரங்களை வைத்தே தக்க வைத்து கொள்ள நேர்ந்தது. ஆனால் அப்பெண் 26 மார்கழியில் மேலதிக சிகிச்சை என்ற பெயரில் சிங்கப்பூர் மருத்துவமனையான மவுண்ட் எலிசெபத் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டாள். இந்த மருத்துவமனை உறுப்பு மாற்றீட்டு சிகிச்சைக்கு பெயர் பெற்றது. சர்வதேச நேரப்படி 28 மார்கழி 08.45 அளவில் அவள் தன் மரணத்தை தழுவினாள். ஏன் அவள் இந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட வேண்டும் ?  உறுப்பு மாற்றுக்கு உட்படுத்த இந்தப்பெண் சுமார் மூன்று மாத காலமாவது எடுத்து தனது ரணங்களை ஆற்றியிருக்க வேண்டும். “பேசா மடந்தை” மன் மோகன் சிங் தலைமையில் 26 மார்கழியில் இடம் பெற்ற உயர் மட்ட கூட்டத்திலேயே இம்முடிவு எட்டப்பட்டடிருக்க வேண்டும் என தற்போது பரவலான பேச்சடிபடுகின்றதது. ஏனெனில் டெல்லி வைத்தியசாலை ஒன்றில் அப்பெண் இறந்திருப்பின் போராட்டக்காரர்கள் குறித்த வைத்தியசாலையையும் அரச பொறிமுறையையும் சேர்த்து ஒன்றாக தரைமட்டமாக்கியிருப்பார்கள்.


தேசிய மற்றும் சர்வதேச அழுத்தங்களன் பெயரில் விரைந்த டெல்லி பொலிஸார் ஆறு குற்றவாளிகளையும் மறுநாளே கைது செய்தனர். அவர்களின் பெயர்ப்பட்டியல் பின்வருமாறு

01.வினய் சர்மா
02.பவன் குப்தா
03.முல்லாஷ் குமார்
04.ராம் சிங்
05.அக்சய் தகவன்
06. இளம்பராய குற்றவாளி என்பதால்  பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இவர்கட்கு மரண தண்டனை அளிக்குமாறு டெல்லி பொலிசார் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். பாலியல் வல்லுறவு மற்றும் Eve teasing வழக்குகளை மட்டும் விரைந்து முடிக்க ஐந்தாவது விரைவு நீதிமன்று டெல்லி, சாகித் நீதிமன்ற வளாகத்தில் இந்திய உயர் நீதிமன்ற தலைமை நீதியரசர் அல்டமால் கபீர் திறந்து வைத்து வழக்கு நடைபெற்று வருகின்றது.

இக்குற்றவாளிகள் மீது வல்லுறவு, ஆட்கடத்தல், கொலை ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவை நீரூபிக்கப்படும் இடத்து மரண தண்டனை வழங்க இந்திய தண்டனைச்சட்டம் அனுமதி அளிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.  அரச தரப்பிற்காக வாதாட மூத்த சட்டவல்லுணர் தயன் கிருஸ்ணா அழைக்கப்பட்டுள்ளார். ஆறாவது குற்றவாளியின் பாடசாலை சான்றிதழின் படி அவர் 17 வயது 08 மாதம் மட்டுமே வயது நிரம்பியவர். அவரின் உண்மை வயதை கண்டறிய பொலிசார் என்பு மச்சை பரிசோதனை நடாத்தி வருகின்றனர். அவர்  தற்போது நீதி விசாரணைகட்காக சிறுவர் குற்றவியல் நியாயசபை முன் நிறுத்தப்பட்டுள்ளார்.

இதன் பின்பு 22 மார்கழி 2012 இல் இந்திய பாலியற் கொடுமை சட்டங்களை மறுசீரமைப்பதற்காக நீதி ஆணைக்குழு முன்னாள் இந்திய பிரதம நீதியரசர் ஜே.எஸ்.வர்மா அவர்களை தலைவராக கொண்டு அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட அக்குழு பொதுமக்கள், சட்டவியலாளர்கள், அரசு சாரா அமைப்புக்கள் மற்றும் பெண்ணியல் அமைப்புக்கள் என்பவற்றிடம் இருந்து முதல் நாளே சுமார் 6000 சிபாரிசுகள் மின்னஞ்சல் மூலமாக கிடைக்கப் பெற்றது ---reuters.com

பொதுவாக அரசின் பக்கமே கல்லெறி விழுகின்றது. போராட்டக்காரர்களுடன் இணைந்து போராட வந்த டெல்லி முதலமைச்சர் போராட்டக்காரர்களால் துரத்தி அடிக்கப்பட்டார். அரசாங்கத்திற் கெதிராக  முதல்வரே போராட்டமா ? என்ன ஒரு அரசியல் நாடகம் பின்னீட்டாங்க போங்க பெண் முதல்வர். அதோடு நஸ்ட ஈடு என்ற பெயரில் டெல்லி அரசு சொன்ன 15 இலட்சமும் உத்திர பிரதேச அரசு சொன்ன 20 இலட்சமும் இன்று வரை தமக்கு கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் தமையன் தெரிவித்தார்.

குற்றவியல் வழக்கறிஞர்களின் வழக்கறிஞர் என்று புகழாரம் சூட்டப்பட்ட  ராம் ஜெத்மலானி டெல்லி மாநகர பொலிஸ் அத்தியேட்சகர் நீரஜ் குமாரை மட்டும் பழித்து விட்டு தனது கடமையை முடித்து கொண்டதற்கு ராஜ் சபாவின் உறுப்புரிமை கூட காரணமாய் அமையலாம்.


இந்த நிகழ்ச்சியை வெறும் பெண்ணியலுக்கு எதிரான விடயம் என மட்டும் என்னால் நிறுத்த முடியாது. காரணம் ஒரு மனிதனின் குடலை உருவி எடுப்பது என்பது எமது சினிமாவில் பிரபல்யமான விடயம். ஆனால் அது இன்று எம் கண் முன்னால் யதார்த்தமாவது ஏற்றுக் கொள்ளமுடியாததாகின்றது.

இதை தொடர்வதற்கு  முன்னால் இக்குற்றவாளிகட்கு என்ன விதமான தண்டனைகளை அளிக்கலாம் என முகநுாலில் பரிமாறப்பட்ட விடயங்களை கீழே தெரிவிக்கின்றேன்.

1.   மரண தண்டனை.

2.   ஆயுட்கால சிறைத்தண்டனை

3.   வேதியல் முறையில் ஆண்மையை அகற்றல்

4.   விதைளை விதைப்பையில் இருந்து நீக்கல்

5.   ஆணுறுப்பையும் விதைகளையும் எலி, மூஞ்சூறு போன்ற உயிரிகளை வைத்து கொறித்து அகற்றல்

6.   சித்திரவதை படுத்தி மரணிக்கும் தருவாயில் சிகிச்சை அளித்து மீண்டும் சித்திரவதைக்குட்படுத்தி இதை தொடர்ந்து செய்தல்.

7.   குடியுரிமையை இரத்து செய்தல்.

மேற்குறிப்பிட்டவை எல்லாம் தண்டனைகள், அதாவது குற்றத்தின் பின்னர் குற்றவாளிகட்கு அளிக்கப்படுபவை. ஆனால் மனிதர்களை குற்றவாளிகள் ஆகாமல் தடுப்பதற்கான செயன்முறைகள் அல்ல. இவை பற்றி முகநுாலில் எந்த வித பயனுறு தகவல்களும் இடம் பெற்றது போல எனக்கு தெரியவும் இல்லை. மிக மோசமான தண்டனைகள் உள்ள நாடுகளில் ஐக்கிய அமெரிக்காவும் ஒன்று. ஆனால் அடம் லான்சா என்ற 17 வயது சிறுவன் தனது சகபாடிகள் 21 பேரை சுட்டு சாகடித்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். உயிருக்கு விஞ்சிய தண்டனை எதுவும் இல்லை. ஏன் தீவிரவாதிகட்கு ஒ்வ்வொரு நாட்டு அரசுகளுமே தாங்கொணா சித்திரவதைகளை வழங்கியும் தீவிரவாதத்தின் இயல்போ செயற்பாடுகளோ மாற்றம் அடையவில்லை. மாறாக அவை விஸ்தரிக்கப்பட்டு கொண்டே செல்கின்றது. இங்கு எனக்கு கண்ணதாசனின் வரிகள் தான் நியாபகத்திற்கு வருகின்றது.

 “ எங்கெல்லாம் உயரமான சுவர்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அதை தாண்டி குதிக்கும் கால்களும் உறுதியாக இருக்கின்றன.” ஆனால் 1974 இல் இடம் பெற்ற மதுரா வல்லுறவு வழக்கினை விட எத்தனையோ மடங்கு பெண்ணியலுக்காக நீதித்துறையின் மனப்போக்கு விருத்தியடைந்து இருப்பதை ஓர் பாரிய நிகர்சரி விசாரணைகளின் மாற்றங்கள் ஊடாக நாம் அறியக்கூடியதாக உள்ளது.


முடிவுப்பகுதி எழுத வேண்டிய நேரம் இது, சட்டப்பரீட்சை தாள் எனில் சட்டப்படி ஆனால் நடைமுறையில் சாத்தியமாகா விடிமான விடயங்களை சிபாரிசுகள் என நாமமிட்டு வரிசைப்படுத்தியிருப்பேன் புள்ளிகளுக்காய். ஆனால் இங்கு சட்டங்கள் சமூகத்தை கட்டுப்படுத்தாது சமூகமே சட்டங்களை ஏற்கும் வரை ( Vice Versa ) என்ன முடிவு ? மனிதனில் உள்ள மிருகம், மிகமிக வேகமாக கடவுளை பின்தள்ளி முன்னேறி வருகின்றது என்பதை தவிர வேறு எதையும் தீர்வாக என்னால் முன்வைக்க முடியவில்லை.

இப்பதிவு சமூகத்தளத்தில் இருந்து வரையப்பட்டது. பரீட்சை நோக்கிற்கு பயனற்றது. ஆனால் சட்டவாளர்கட்கு தவிர்க்க இயலாதது. விரைவில் சட்டத்தளத்தல் இருந்து வெளியிடப்படும்.

Monday, 31 December 2012

Contract Law Exemption Clauses-- A Short Review



Exemption Clauses

An exemption clause is a term of contract by which one of the parties to the party attempts to avoid his liability when there is a breach of contract or negligence of his part.

Exemption clause can be incorporated with a contract is any method. However other party to the contract must notify that clauses before or at the time of making contract.

வெளித்தள்ளுகை பதங்கள் என்பது ஒப்பந்தத்தில் ஈடுபடும் இருபகுதியினரில் ஒரு பகுதியினர் தொடர் செயற்பாடுகளின் போது ஏற்படும் ஒப்பந்த மீறுகைகளின் போதும் கவனக்குறைவு நடவடிக்கைகளின் போதும் ஏற்படும் பொறுப்புக்களிலிருந்து தம்மை விடுவித்து கொள்வதற்காக ஒப்பந்த சரத்துக்களில் உட்புகுத்தும் ஓர் பாதுகாப்பு வாசகங்களாகும்.

+ம் கடைநிலை உற்பத்தி ஊழியரின் கவனக்குறைபாட்டு இயந்திர தாமதத்திற்கு தாம் பொறுப்பல்ல.
+ம்  வெள்ள , நெருப்பு அபாயங்கட்கு தாம் பொறுப்பாளி அல்ல .
இந்த வெளித்தள்ளுகை பதங்கள் எவ்வாறா முறைமையினாலும் ஒப்பந்தத்தினுள் உள்ளடக்கப்படலாம். ஆனால் மற்றைய ஒப்பந்த பகுதி அத்தகைய பதங்களை ஒப்பந்தத்தை ஏற்க முன்னரோ அல்லது ஏற்கும் அந்த நேரத்திலோ கட்டயமாக அறிந்திருக்க வேண்டும்.




There are certain rules to apply Exemption clauses

01.If a person sign an exemption clause contain document, therefore he will be binding from such clauses even he had not read it at the time of sign it.
L’Estrange V Graucob Ltd

02.If the document singed, however the sign by a result of a oral misrepresentation or made fraud regarding the matter, then the signed party not bound by the sign( Document)
Curtis V Chemical clearing & Dying company

03.No exemption clauses introduced to one party after enter unilateral contract.
Olley V Marlborough  Court Ltd.

04.Receipts and tickets which contain exemption clauses given after made of contract , will not have a contractual effect.
Chepelton V Barry UDC

05.An exemption clause could protect a party from liable even for a fundamental breach
Photo Productions Ltd V Securicor Transport Ltd.

But in Sri Lanka , highest court of the land pronounced that in Devabalan V Town Council Chavakacheri , fundamental obligation of a contract cannot be excluded by a exemption clause.

06.An exemption clause must be contemporaneous with the contract.
Olley V Marlborough Court Ltd.

07.A party imposing an exemption clause in a contract must be reasonably sufficient. The test is highly objective.
Parker v South – Eastern Rail Co

08.In vouchers receipts or tickets which contain exemption clauses are not vailed because a reasonable person couldn’t expect this
Chapelton V Barry U.D.C


Exemption Clauses regarding third parties
 Normally according to the court rule who are not a parties ( Third parties) of a contract cannot claim any benefit from an exemption clause in that contract. Cosgrove V Horsfall. But this case decision departed Elder, Dempster & Co V Paterson Zochonis & Co. but former case departed by House Of Lords in Scruttons, Ltd V Midland Silicins Ltd. Finally  the standing decision in  nowadays is Cosgrove case.


வெளித்தள்ளுகை வாசகங்களில் மூன்றாம்  பகுதியினரின் நிலைப்பாடு

அதாவது வெளித்தள்ளுகை வாசகங்களை வைத்து ஒப்பந்தத்தில் ஈடுபடாத எந்த ஒரு மூன்றாம் நபரும் ஓர் வகிபாகத்தை ஒப்பந்த தரப்பினரிடைய வகிக்க முடியாது என Cosgrove V Horsfull வழக்கில் தீர்க்கப்பட்டது. ஆனால் பின்னைய வழக்கான Elder,Dempster & Co V Paterson Zochonis & Co இதை புறத்தொதுக்கி மூன்றாம் தரப்பினர் வெளித்தள்ளுகை வாசகங்கள் ஊடாக நன்மையை அனுபவிக்கலாம் என்றது. ஆனாலும் இன்றைய பிணிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் பிரபுக்கள் சபையால் வழங்கப்பட்ட தீர்ப்பான Scrottons, Ltd V Midland silicons அமைகின்றது. இது மூன்றாம் திறத்தவரின் தலையீட்டை முற்றாக நிராகரித்ததுடன் திரும்பவும் நீதித்துறை படிமுறையை Cosgrove வழக்கின் நியாயத்திற்கு இட்டுச் சென்றது போல தோற்றமளிக்க வைத்தது. ஆனாலும் பரீட்சை நோக்கின் போது Elder வழக்க சுட்டி குறிப்புக்கள அளிப்பது உங்கள் பக்க நியாயத்தை மேலும் வலுவுள்ளதாகும்

ஏனெனில் சட்டத்தை பொறுத்த மட்டில் எந்த அதி திறமைசாலியாலும் இதற்கு இது தான் தீர்வு அல்லது விடை என அறுதியிடமுடியாது. ஏனெனில் அவ்வாறு அறுதியிட அனுமதி அளிக்கப்படின் சட்டம் சீர்தன்மை என்ற கோட்டில் விரைவாக நீண்டிருக்கும் ஆனால் சட்ட வளர்ச்சி என்ற கோட்டின் நிலை பரிதாமமாக பின்தங்கி சிறுத்திருக்கும். இரு கோடுகளும் சமாந்தரமாக நீண்டிருந்தால் மட்டுமே சமூகம் என்ற வண்டில் தொடர்ந்து பயணிக்க முடியும் . அல்லாது விடின் ஒரு கோடு முடியும் இடத்தோடு வண்டியும் நிற்பது தவிர்க்க இயலாதது.

Contra proferentum Rule, this mean the words in written document used against the party who include the words in particular contract. But this rule only applicable when in case of ambiguity or other rules construction fail. Jhone Lee ( Grantham ) Ltd V Railway Executive.

அதாவவது Contra Proferentum Rule, என்பது எழுத்திலான ஓர் ஒப்பந்த சரத்தில் அவ்வாப்பந்தத்தை அமுலாக்கும் போது தீர்க்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் அவ்வாசகங்கள் ஓர் தெளிவின்மையை ஏற்படுத்தின் அவ்வாசகம் எத்தரப்பினால் இடப்பட்டதோ அத்தரப்பிற்கு எதிராகவே நீதிமன்றால் பயன்படுத்த பட வண்டும். இவ்விதி Jhone Lee ( Grantham ) Ltd V Railway Executive எனும் வழக்கில் தீர்ப்பு பிணிப்பாக்கப்பட்டது.

When an exemption clause indicates “ALL” damages this would exclude liability for negligence. But the word “ANY LOSS” does not cover negligence loss but “However arising” or “Any Cause whatever” covers whole liability.

Fundamental Breachஅடிப்படைவாத மீறல்
It means certain types of breaches that totally destructive the obligations of the defaulting party in a contract in a contract, that time they cannot exclude their liability by an exemption clause. Guilty for fundamental breach of contract or a breach of a fundamental term, cannot exclude defaulting party’s liability by exemption clause. The clauses fundamental breach of contract or a breach of a fundamental term used often interchangeable a rule of law. The view was taken by some courts, which some breaches of contract are so serious that no exclusion clauses can cover them. In sea contracts the “Deviation” also consider as a fundamental breach ( Joseph Thorley Ltd V Orchis ss Co Ltd )

அதாவது ஓர் ஒப்பந்த்தின் அடிப்படையை மீறுவது அந்த மீறலால் அவ்வாப்பந்தம் வறிதாகுமா அந்த மீறல புரிகின்ற ஒப்பந்த தரப்பிற்கு வெளித்தள்ளுக வாசகங்கள் பாதுகாப்ப அளிக்குமா அல்லது அளிக்காதா என்பத பற்றி இப்பந்தி ஆராய்கின்றது. ஆனால் எனது தேடலை பொறுத்த மட்டில் இன்று வரை நீதிமன்ற பிணிக்கும் தீர்ப்புகளில் ஒரு சீர்தன்மையை என்னால் இவ்விடயத்தில் காண முடியவில்ல. எமது நாட்டில் ஒப்பந்த சட்டத்தை அமுலாக்க என்று எந்த சட்ட மூலமும் இல்லை. எனவே நீதிமன்றுகள் ஆங்கில வழக்கு தீர்ப்புகளை வைத்தே முடிவுகட்கு வர வேண்டியுள்ளது. ஆனால் வெளிநாட்டு தீர்ப்புக்கள் எமது மன்றுகளை பிணிக்கும் தீர்ப்புகளாக இன்றி வெறும் ஊக்கி தீர்ப்பக்களாகவே கருதப்படும் என்பதை இப்பொழுதில் உங்களிடம் நினைவூட்ட விரும்புகின்றேன்.


Fundamental Breach happens in two varies ways

01. Breach of Particular important term.

02.Brach , which had the consequences of destroying the whole basis of the contract.

அடிப்படை மீறல் இரு வகுதிகள் ஊடாக இடம் பெறலாம்.

01.ஒரு குறிப்பிட்ட வாசகத்தை மீறல்.

02.ஒட்டு மொத்த ஒப்பந்தத்தையே அழிக்கும் பின்விளைவு கொண்ட மீறல்கள்.

இதற்காக இரண்டு வழக்குகளை உதாரணமாக காட்டலாம்

01. Karsales V Wallis (1956)
A buyer ( plaintiff ) inspect a car in good condition and make order ( Buick Car ) , but when defendant ( Seller ) delivered in night it was towed because is incapable of self-propulsion.  Almost other defects also there,
(a)    Cylinder head had been removed
(b)   The valves had been burned out
(c)     Two of the pistons were broken

But in the agreement paper contain following clause,

“NO condition or warranty that the vehicle is roadworthy or as to its age, condition or fitness for the purpose is given by the owner or implied here in”

HELD, here plaintiff expect a good (Working) condition car, but defendant gave a totally different one. It is a BREACH OF FUNDEMENTAL TERM So exemption clause cannot prevent from the liability.

02. Harbutts’ Plasticine ( 1970)
Here defendant makes a contract with plaintiff to make piping in plaintiff’s factory. But he made a unsuitable piping. In the course of action a fire accident held hence the fire destroyed plaintiff’s whole premises. It was held as a FUNDEMENTAL BREACH OF A CONTRACT. A principle derived from this case was A breach never in itself brings a contract to an end.

In above situations the injured innocent party can repudiate the whole contract or continue with the contract with damages and further expenses.

மேற்கூறிய இரு வழக்குகளிலும் நீதிமன்றமானது அடிப்படை மீறல் ஒன்று ஏற்பட்டு அதன் விளைவாக ஏற்படும் பொறுப்பிலிருந்து பொறுப்பாக வேண்டிய தரப்பை ஒப்பந்தத்தில் காணப்படும் ஒரு வெளித்தள்ளுகை வாசகம் காப்பாற்றாது எனும் நிலைப்பாட்டை எடுத்தது. அதாவது சுருங்க கூறின் என்ன வகையான பாதுகாப்பை அளிக்க கூடிய வாசகங்கள் ஒப்பந்த சரத்துகளில் காணப்பட்டாலும் அவை ஓர் ஒப்பந்த அடிப்படை மீறலின் போது எவ்வகையான பாதுகாப்பையும் அளிக்க மாட்டாது என்பதாகும்.


ஆனால் இவ்விதி காலத்தின் தேவை கருதி நேரெதிராக மாற்றப்பட்டது. அதற்கு உதாரணமாக Photo Production Ltd V Securicor transport Ltd (1980) எனும் வழக்கில் பிரபுக்கள் சபையால் மாற்றி அமைக்கப்பட்டதன் காரணம் சமூக, பொருளாதார மாற்றமும் வளர்ச்சியும் தான். அதாவது ஒப்பந்த தரப்பினர் சுமூகமாக தமது தற்றுணிபின் பேரில் பணியாற்றுவதற்காகவும் பொருளாதார நலன்களின் அபிவிருத்தி மற்றும் நலன் தொடர்பாகவும் நீதிமன்றிற்கு உள்ளதாக கருதப்பட்ட இடையீட்டாளர் பதவியை அகற்றுவதற்காகவுமே இத்தீர்ப்பானது கருத பட வேண்டியுள்ளது. இதன் போது மன்றானது எந்த வகையான மீறலும் அது அடிப்படை மீறலாக அமையினும் கூட ஓர் தெளிவான வெளித்தள்ளகை வாசகம் தவறிழைத்த தரப்பிற்கு வாசக அளவிற்கு பாதுகாப்பை வழங்கும் என வெளிப்படையாக தீர்த்தது.

Court held in Photo Production Ltd V Securicor Transport Ltd, Certain type of fundamental breach could never be covered by an exemption clause. And affirm that, Freedom of contract approach to commercial agreement and rejection of an interventionist role of the courts.

இவ்வாறாக வழக்கு தீர்ப்பு அமைந்த போதும் தொடர் வழக்குகள் பிணிக்கும் தகைமையிலிருந்து பிழைக்கும் நுட்பங்கள் மூலம் வெவ்வேறு அபிப்பிராயங்களை வெளிப்படுத்தி உள்ளன. அவற்றை கீழே தொகுத்துள்ளேன். ஆனால் மேற்படி காட்டப்பட்ட வழக்குகளே இன்று வரை புலமைத்துவ ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் தொடர்ந்து அலசப்பட்டு வருவதை சுட்ட விரும்புகின்றேன்.


01.Pinnock Bros V Lewis and peat Ltd ( 1923)
02.Glynn V Margetson & Co (1893)
03.Gibaud V Great Eastern Railway Co (1881)
04.Lilley V Doubleday (1921)
05. Hai Tong Bank Ltd V Rambler Cycle Co Ltd (1959)

இனி இன்றைய ஆங்கில சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளின் படி இந்த வெளித்தள்ளுகை வாசகங்கள் பொதுச்சட்டம் மூலமும் நியதிச்சட்ட மூலமும் நிர்வகிக்கப்படுகின்றன.

Common Law -- பொதுச்சட்டம்
பொதுச்சட்டம் இரு விடயங்களை முதன்மையாக கையாள்கின்றது.
01.       Rule of Incorporation

L’Estrange V. Graucob, இவ்வழக்கில் அச்சாக்கப்ட்ட ஒப்பந்த பத்திரம் மிகச்சிறிய எழுத்துக்களை கொண்டிருந்ததால் அவை incorporation ஆகவில்லை. பாதுகாப்பு மறுக்கப்பட்டது.

 Does the clause part of the contract? Was appropriate notice of it given to other party?
This can be divided as five elements
(a)    Time
(b)    Previous course of dealings
(c)     Unusual Exclusions
(d)    Reasonable Notice
(e)   Contractual Document

வெளித்தள்ளுகை வாசகம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியா ? சரியான விதத்தில் இவ்வறிவித்தல் இங்கு வழங்கப்பட்டுள்ளதா ?
02.     Rule of construction
03.     Does the wording of the clause make it clear that?  It covers the breach that has occurred?
உறுப்புரையின் வசனவாக்க தெளிவு ஏற்பட்ட ஒப்பந்த மீறுகையை விலக்களிக்குமா பொறுப்பிலிருந்து என வரையறுத்து காட்ட வேண்டும்.
02. Statute ---நியதிச்சட்டங்கள்
இன்று பிரித்தானியாவில் இரண்டு முக்கிய  நியதிச்சட்டங்கள் ஒப்பந்த விடயங்கள் தொடர்பில் முக்கியத்துவம் பெறுகின்றன.
01.Unfair contract Terms Act [ UCTA  1977 ]

 This statute makes some exclusion clauses void
Eg: Exclude liability for death or personal injury caused by negligence.
Many other clauses are subject to a test of reasonableness.

Case laws give a trend to make more freedom to make exclude liability within business contract rather than with customers.

02. Unfair Terms in Consumer contracts Regulations ( UTCCR 1999 )

These regulations derive from European Directive.
They impose a requirement “Fairness” on most of the consumer protection “Good Faith” is part of the test of fairness.

UCTA 1997

UTCCR 1999

Apply business and consumer matter made a difference between them.

Applies to consumer contracts only

Covers exclusion and limitation clauses

All standard form of contracts and all Unfair terms

Test of Resonableness Sec 11

Test of Unfairness Reg-5(1)



இப்பகுதியை எழுதும் போது ஆங்கில உட்புகுத்தல் தவிர்க்க முடியாததாயிற்கு தாய் மொழியில் நேரடி உறுதிப்படுத்தப்பட்ட மொழி பெயர்ப்புக்கள் இன்மையும் புலமைத்துவ வேற்று கருத்துக்ளும் இவ்வாறு என்னை இவ்வாறு செய்ய உந்தின. கீழுள்ள Comment பெட்டியிலா அல்லது முகநுாலிலா உங்களது கருத்துக்கள பகிர்வதன் மூலம் நான் எனது தவறுகளை திருத்தி கொள்ளவும் எது தேவை எந்த மாற்றம் அவசியம் என்பதையும் உணரவும் வாய்ப்பாக அமையும் என எண்ணுகின்றேன். மேலதிக விபரங்கட்காக இணைய அஞ்சல் மூலமா அல்லது கருத்து பகிர்வு மூலமா பின்னுாட்டுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது