வரைவிலக்கணம் மற்றும் குற்றத்தின் உட்கூறுகள் என்பனவற்றில் theory questions அதிகளவு வரும் வாய்ப்பை உடையது. ஆனால் அவ்வகையான வினாக்கள் அதிகளவு பரந்துபட்ட சட்ட கோட்பாடுகளை வேண்டி நிற்பதுடன் தங்களிடம் காலத்திற்கு ஏற்ற மாற்றங்களையும் வேண்டி நிற்கும் எனவே இவ்வகை வினாக்களை தெரிவோர் வெறும் வழக்கு தீர்ப்புகளை மட்டும் மேற்கோளிட்டு விலக இயலாது மாறாக சட்ட கோட்பாட்டின்
1.ஆரம்ப வரலாறு
2.வளர்ச்சி படிமுறைகள்
3.ஆங்கில சட்டத்திலும் எமது சட்டத்திலும் கோட்பாட்டிற்கான மூலகங்கள்
4.ஆங்கில சட்டத்திற்கும் எமது சட்டத்திற்கும் உள்ள ஒற்றமைகள் மற்றும் வேற்றுமைகள்
5.கோட்பாடு சம்மந்தமான வழக்கு தீர்ப்புக்கள்
6.கோட்பாடு சம்மந்தமான நியதிச்சட்ட ஏற்பாடுகள்
7. கோட்பாடு சம்மந்தமான சட்டவியலாளர்களின் கூற்றுக்கள் மற்றும் பொதுச்சட்டத்தில் நீதிபதிகளின் தீர்மானத்திற்கான காரணிகள்.
8.தற்போது மாற்றத்திற்குட்பட்டு வரும் சமூக பொருளாதார மற்றும் கலாச்சார மாற்றங்கட்கு ஏற்ற வகையில் எவ்வாறு நியதிச்சட்ட ஏற்பாடுகள் அமைய வேண்டும் என்ற ஆலோசனைகள் உங்களால் முன்வைக்கப்பட வேண்டும்.
ஏனைய குற்றங்களும் அவற்றிற்கான தணிக்கும் பாதுகாப்புகள் மற்றும் முழுமை பாதுகாப்புக்கள் என்பன ஒன்றுடன் இன்னொன்றுடன் பின்னி பிணைந்து காணப்படுவதால் குறிப்பிட்ட பாடப்பரப்பை மட்டும் தெரிவு செய்து கற்றல் என்பது எவ்வளவு துாரம் பயனளிக்கும் என்பது தங்கள் தெரிவிற்கான வினாவாகும் ?
பொதுவாக குற்றச்சட்டத்தை பொறுத்த மட்டில் ஆங்கில சட்டக்கோட்பாடுகளையே நாம் அதிகம் பின்பற்றுவதால் எமது சட்டக்கோட்பாடுகள் ஆங்கில கோட்பாடுகளை பின்பற்றியே அமைந்திருக்கும் சில கோட்பாடுகள் எமது நியதிச்சட்ங்கள் மூலம் மாற்றம் கண்டிருக்கும் அவ்வேளைகளில் இரு சட்டங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை நியதிச்சட்ட மூலமும் வழக்கு தீர்ப்புகளின் மூலமும் பிரிவு படுத்த அறிந்திருத்தல் அவசியமானது. அத்தோடு எந்த கோட்பாட்டையும் தக்க ஆதாரமின்றி மேற்கோளிடல் விரும்பத்தக்கதன்று. தங்களின் ஆதார தேவைக்காக வழக்கு தீர்ப்புக்களையோ நீதிபதிகளின் அவதானிப்புக்களையோ அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டவியலறிஞர்களின் கூற்றுக்களையோ மேற்கோளிட முடியும்.
அதோடு பரீட்சையை ஆங்கில மொழி மூலம் எய்த வேண்டி இருப்பதால் ஒரு குற்றங்கட்கான பல வேறுபட்ட ஆங்கில சொற்களை மனதில் பதிய வைக்க வேண்டியது அவசியமாகும். இல்லாவிடின் கோட்பாடுகள் அறிந்திருந்தும் ஒரு சொல் வழுவினால் முழு வினாவையும் கைவிட நேரலாம். உதாரணமாக நாம் கற்பளிப்பு என்பதற்கு RAPE எனும் பதத்தை பாவிக்கின்றோம் ஆனால் சில வழக்குகளில் RAVISH எனும் பதம் கூட வழங்கப்பட்டுள்ளது.
இங்கு என்னால் தரவேற்றப்பட்டவை அதிகபட்ச சரி நிகர் தன்மைக்கு பரீட்சிக்கப்பட்டவை இருப்பினும் 100% உத்தரவாத படுத்தப்பட்டவை அன்று என்பதை கவனிக்க ஆனாலும் தொடர்ந்து சரியான தரவுகளை தரவேற்ற முடியும் என நம்புகின்றேன்.
No comments:
Post a Comment