Social Icons

Pages

Saturday, 30 July 2011

சட்ட வினாத்தாள்களை தரவிறக்க........






இணைய பரப்பிலே எண்ணிலடங்கா இணையதளங்களும் தகவற்களஞ்சியங்களும் இறைந்து கிடக்கின்ற போதும் எமக்கு தேவையானவற்றை வடித்தெடுப்பது சற்று சிரமமான விடயமாக தென்படுகின்றது.

கடந்த கால சட்ட வினாத்தாள்களை முன்பெல்லாம் அச்சுப்பதிப்பக்களாகவே சேமித்து வைத்திருப்போம். பின்பு போட்டோ பிரதி முறைமையின் மூலம் எம்மவர்களுக்கிடையே பகிர்ந்து கொண்டோம். ஆனாலும் பல பிரதிகள் காணாமற் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் எம்மவர்களிடையே சர்வசாதாரணம் .

அந்ந காலம் மலையேறி விட்டது. இன்று இணையம் மூலம் யாழ் பல்கலைகழக சட்டத்துறை கடந்த கால வினாத்தாள்களை மட்டுமல்ல கொழும்பு மற்றும் பெரதனிய பல்கலைக்கழக வினாத்தாள்களை கூட இன்று முழுமையான  PDF தரவிறக்க பதிப்பாக ஓர் இணையதளம் தமிழர்கட்காய் தமிழ் வழிகாட்டல்களுடன் தந்தால் எவ்வாறிருக்கும் ? கனவல்ல நிஜம் அந்த இணையதளத்தின் பெயர் www,gatherpage.com . (Picture 01)

இதில் முதன்மையான பல்கலைக்கழகங்களின் பெரும்பான்மையான பீடங்களின் கடந்த கால மற்றும் மாதிரி வினாத்தாள்களை (Picture 02) தரவிறக்க முடியும். அது மட்டுமன்றி சாதாரண தர மற்றும் உயர் தர பாடங்கட்கான வளங்களும் போதுமான வகையில் இற்றைப்படுத்தப்பட்டுள்ளன.

உங்கட்கு வேண்டியது ஓர் இணைய அஞ்சல் முகவரி மட்டுமே ! இதில் கோரப்படும் எளிமையான படிவத்தை நிரப்பி (Picture 03) இலவச உறுப்பினரான பின் வேண்டிய வசதியை பெற்று மகிழலாம் ! ஆங்கில மற்றும் தொழினுட்ப பாடங்கட்கும் வசதிகள் மிகையாக வழங்கப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment

 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது