Social Icons

Pages

Sunday, 7 August 2011

திடீர் கோபமூட்டல் ----PROVOKED

குற்றவியல் சட்டத்தில் மனித உயிரை அழித்தல்
(கொலை செய்தல்) எனும் குற்றத்திற்கு இருவகையான தண்டனைகள் சட்டத்தால் வழங்கப்படலாம். தணிக்கும் பாதுகாப்புக்கள் அற்ற நிலையில் அதற்கான தண்டனை உயிர்பறிப்பாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. உதாரணமாக துாக்கிலிடல், விஷ வாயு செலுத்தல், மின்சார நாற்காலி, விஷ ஊசி ஏற்றல் மற்றும் தலை துண்டிப்பு என்பன மூலம் பரவலாக இடம் பெறுகின்றன.

தணிக்கும் பாதுகாப்புக்கள்  வழங்கப்படின் தண்டனை ஆயுட்சிறையாக மாற்றப்படலாம். இருப்பினும் இன்று பெரும்பாலான நாடுகளில் எக்குற்றத்திற்கும் உயிர் பறிப்பு தண்டனைகள் வழங்கப்படுவது அரிதாகும்.
அவ்வகையான தணிக்கும் பாதுகாப்புக்களில் திடீர் மற்றும் பெரும் கோபமூட்டல் கோட்பாட்டில் மாற்றங்களை புகுத்திய ஒரு வழக்காக Kiranjit Ahluwalia காணப்படுகின்றது.

இவ்வழக்கின் கதையை மையக்கருவாக கொண்டு  Provoked எனும் திரைப்படம் 2007 இல் வெளியிடப்பட்டது. இதில் Kiranjit Ahluwalia ஆக ஐஸ்வர்யா பச்சனும் Deepak ஆக நவீன் அன்றுாஸ் உம் நடித்திருந்தனர். இத்திரைப்படம் உண்டையான Kiranjit Ahluwalia வழக்கின் அச்சு தோற்றப்பாடு எனலாம்.

Kiranjit Ahluwalia வழக்கின் கதைச்சுருக்கம்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சாக்கலை எனுமிடத்தில் 1965 ஆம் வருடம் பிறந்த Kiranjit Ahluwalia தீபக்கை 1979 ஆம் வருடம் மணந்து அவருடன் வாழ்வதற்காக பிரித்தானியா சென்றார். அங்கே கணவன் தீபக் Kiranjit Ahluwalia ஐ மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வன்புணர்ச்சி காரணமாகவும் உணவு வழங்காமை நிலைமை காரணமாகவும் மிகவும் கீழ்த்தரமாக நடாத்த தொடங்கினான்.  இதற்கு இவர்களின் இரு குழந்தைகனான Sandeep மற்றும் Rajeev என்போரே சான்றாகும் .
இக்குற்றங்கள் தொடர்பாக Kiranjit Ahluwalia தன் பெற்றோரிடம் பல தடவை முறையிட்டபோதும் எவ்வித மீட்பு நடவடிக்கைகளும் அவளிற்து கிட்டவில்லை.

இவ்வாறாக நாட்கள் நகர்கையில் Kiranjit Ahluwalia வீட்டை விட்டு தப்பியோட முயற்சிக்கும் போதெல்லாம் கணவன் அவளை விரட்டி பிடித்து கடுமையாக தாக்குவதோடு ஒரு நாள் சித்திரவதையின் உச்ச கட்டமாக ஆடை அழுத்தியால் முகத்தில் சுடவும் முயற்சிக்கின்றான்.
பின் கணவன் துாங்கி விட விழித்திருந்த Kiranjit Ahluwalia தங்கள் களஞ்சிய அறைக்கு சென்று பெற்றோல் மற்றும் எரி சோடாவை எடுத்து வந்து கணவன் துாங்கும் மெத்தை மீது ஊற்றி நெருப்பிடுகிறாள். இச்சம்பவத்தால் கடுமையான தீக்காயங்கட்கு உள்ளாகிய தீபக் 10 நாள் சிகிச்சையின் பின் சிகிச்சை பலனின்றி இறந்துவிட நீதிமன்று 07-DEC-1989 இல் Kiranjit Ahluwalia கொலைக்குற்றவாளியாக தீர்ப்பளித்தது. தீபக்கிற்கு வேறு பெண்களுடன் தொடர்பிருப்பதை அறிந்த Kiranjit Ahluwalia தி்ட்டமிட்டே பழி வாங்கும் நோக்கில் இக்கொலையை புரிந்தார் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் Kiranjit Ahluwalia வின் வாதம் கவனிக்ககூடியது. ”நான் என் கணவரை கொலை செய்வதற்காக நெருப்பு பற்றவைக்கவில்லை மாறாக அவர் என்னை துரத்தி பிடிக்காதிருப்பதற்காக அவரின் கால்களை எரிக்கவும் அதோடு என் திருமண வாழ்க்கையில் 10 வருடங்கள் அவர் மூலமாக அனுபவித்த வலியையும் அவருக்கு காட்டவே அவ்வாறு செய்தேன்.

இருப்பினும் திடீர் கோபமூட்டலில் தன்னிலை மறந்து செயற்பட்டாலே தணிக்கும் பாதுகாப்பு சட்டத்தால் வழங்கப்படும். இங்கு Kiranjit Ahluwalia கணவனால் தாக்கப்பட்டு சில மணி நேர இடைவெளியின் பின்பே கணவனை தாக்கினாள்.  இங்கு COOLOING PERIOD அதாவது துாண்டலுக்கேற்ற துலங்கல் காட்டப்பட்டிருக்க வேண்டும். துாண்டலுக்கும் துலங்கலுக்கும் இடையிலான நேரம் கூடகூட தணிக்கும் பாதுகாப்பின் பிணிக்கும் தன்மை வலுவிழக்கும்.

ஒரு சிறிய உதாரணம் மூலம் இதை விளக்க முனைகின்றேன்.

A , B யும் வாக்குவாத படும் போது A , B யை கேவலமான முறையில் 
( கவனிக்க : சமூகத்தில் வாழும் சாதாரண பகுத்தறிவுள்ள மனிதன் தன்னிலை மறந்து செய்யும் செயற்பாடு – இதையே தணிக்கும் பாதுகாப்பின் கோட்பாட்டு அம்சமாக கருதுகின்றோம். ) திட்டியதாயின் அந்த கணத்திலலேயே தாக்க முற்பட வேண்டும். அதை விடுத்து விலகி வீடு சென்று வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு பின்பு வந்து தாக்கல் செய்யக்கூடாது. அவ்வாறு செய்யின் தணிக்கும் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது. ஏனெனில் B தனது சுய கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தாக்குதல் குற்றத்தை புரியவில்லை.

சுருங்க கூறின் கணிதவியல் முறைப்படி கூறின்  COOLING PERIOD கோட்பாட்டின் படி துாண்டலிற்கும் துலங்கலிற்கும் நேர இடைவெளி கூட கூட குற்றத்திற்கான பாதுகாப்பு குறைவடைந்தே செல்லும். இது எதிர் கணிய தொடர்பை காட்டுகின்றது.

ஆனால்  COOLING PERIOD என்ற கோட்பாட்டை Kiranjit Ahluwalia வழக்கில் கேள்விக்குட்படுத்தப்பட்டது. தொடர்சியான மன அழுத்தம் உடனடி துலங்கலை வெளிக்காட்டா விடினும் திடீரென வெளிப்படலாம். இதற்கும் தனக்கும் தணிக்கும் பாதுகாப்ப அளிக்கப்பட வேண்டும் எனும்  சட்டக்கோட்பாட்டை வருவிக்க இவ்வழக்கு ஆதாரமாகும். பின்பு Kiranjit Ahluwalia தணிக்கும் பாதுகாப்பை பெற்றமை குறிப்பிடக்கூடியது.
இக்கோட்பாடு எமது நீதிமன்றங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் முன்னைய  COOLING PERIOD  கோட்பாட்டை இலங்கை நீதிமன்றங்கள் முழுதாக கைவிடவில்லை என்பது குறிப்பிடகூடியது.

 இதைத் தீர்மானிப்பதில் SUBJECTIVE மற்றும் OBJECTIVE பரீசோதனைகள் என்பதோடு REASONABLE PRUDENT MAN பரீசோதனைகளும்உதவுகின்றது. 

பின் Kiranjit Ahluwalia தன் சுயசரிதை மற்றும் அனுபவங்களை RAHITA GUPTA என்பவரோடு இணைந்து CIRCLE OF LIGHT எனும் புத்தகமாக வெளியிட்டமை குறிப்பிடகூடியது.
 
இவ்வாக்கம் PROVOKED  திரைப்படம் மற்றும் இணைய வழி தகவல் மூலங்களை ஆதாரமாக கொண்டு அமைக்கப்பட்டது


MITIGATARY DEFENCE பகுதியில் சட்ட ஏற்பாடுகள் மற்றும் தொடர்புடைய வழக்குகள் என்பவற்றோடு விரிவாக தரவேற்றப்படும். அடுத்த ஆக்கங்களில் குற்ற மனம் MENS REA  குற்ற செயல் ACTUS REAS என்பவற்றை எதிர்பாருங்கள்.

No comments:

Post a Comment

 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது