சட்டம் சார் பதிவுகள்
சார்ந்து வலைப்பூவை பேணிணும் சட்டம் வெறும் பாடப்புத்தகங்களுடன் சம்மந்தப்பட்டது என
என்றுமே ஏற்காதவன் நான் எனவே பன்முக வாசிப்பின் ஆளுமையின் தகமைக்காகவே இதை பதிவிடுகின்றேன்.
நண்பர்களே இன்று
இலங்கையில் தரமான தமிழ் நாவல்களின் வெளியீடு என்பது அரிது என்பதாலும் இந்திய தமிழ்
நாவல்கள் மற்றும் சஞ்சிகைகள் நாணயமாற்று விகிதாசாரத்தை விட ( சுமார் 4 மடங்கு இலங்கைப்பெறுமதி)
அதிகமாக பணம் செலவழித்தே கொள்வனவு செய்ய முடிகின்றது. ஆயினும் முடியாதவற்றை முடிக்கும்
திறனுள்ள கட்டற்ற இணையம் இந்த பிரச்சினைக்கும் தீர்வளிக்கின்றது. தமிழ்நாட்டில் இருந்து
வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து தொடர் வார, மாத இதழ்கள், கவிதை தொகுப்புக்கள்,
தொழினுட்ப சஞ்சிகைகள், மற்றும் அனைத்து நாவல்களையும் மின் புத்தகங்களாக தரவிறக்கி வன்தட்டுக்களில்
சேமிக்கமுடியும். செலவு மிக மிக சொற்பம். உதாரணமாக ஆனந்த விகடன் வார இதழ் இலங்கையில்
சுமார் 150 ரூபா வரை விற்பனையாகும் போது அச்சுத்தரம் குன்றாத வகையில் நீங்கள் தரவிறக்குவதற்கான
செலவு வெறும் ரூ 05.00 மட்டுமே.
உதாரணமாக வைரமுத்துவின்
கள்ளிக்காட்டு இதிகாசத்தின் மூன்று பகுதிகள் எனவே ( ஒன்றின் விலை ரூ.120*3*4=1240)
ஆனால் உங்களுடைய தரவிறக்க செலவு வெறும் 20.00 ரூபா தான் உங்கள் சேமிப்பு ஓர் தொகுதி
நாவலில் 1000 ரூபாவை விட அதிகம். PDF ஆக கிடைப்பதால் சேமிப்பதோ நகலெடுப்பதோ அச்சிடுவதோ
மிக மிக இலகு . துலங்கலடயக்கூடிய இணைய பக்கத்தின்
இணைப்பியை இங்கு சொடுக்குவதன் மூலம் அணுகி விரும்பிய நாவலை படித்து, தரவிறக்கி மகிழ்ந்திடுங்கள்.
ஆனால் சட்டமாணவர்கள் என்ற வகையில் இவ்வாறான தரவிறக்கங்கள் பதிப்புரிமை சட்டத்தின் கீழ்
குடியியல் மற்றும் குற்றவியல் நியாயாதிக்கங்களால் தடைசெய்யப்பட்டவை என்பதை வலியுறுத்த
விரும்புகின்றேன்.
No comments:
Post a Comment