குற்றவியல்
சட்டத்தின் இற்றைப்படுத்தல் வேகம் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட வேண்டிய யதார்த பூர்வ
உலகில் இன்று சட்டவாதிகள் காணப்படுகின்றனர். அதில் ஒன்று தான் White Collar Crime எனப்படுவது இது யாதெனில் உயர்
தொழிலாண்மைகளில் காணப்படுகின்றவர்கள் தமது தொழிலில் தமக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களை
பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவதனை குறிக்கும். இக்குற்றச் செயல்கள் யாவும்
ஒரு நாட்டின் சாதாரண குற்றவியல் சட்ட பொறிமுறைகளினுள் உட்பட்டிருப்பினும் (இலங்கையில்
இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவை) கூட இவை குற்றங்கள் என உரைக்க அல்லது இவற்றின் குற்ற உள்ளகைகளை கண்டறிய அதீத கிரயத்தை
கொண்டவையாகும்.
இவ்வாறான
குற்றங்கள் ஒரு தொழிலாண்மையில் உச்ச பதவியிலுள்ள (Executive Range) நபர்களால் மேற்கொள்ளப்படுவதாகும்.
இவை நடுத்தர மட்ட ஊழியர்களால் செய்யப்படும் தொழிலாண்மை குற்றங்களில் இருந்து (Blue
collar crimes) வேறுபட்டவையாகும். இக்குற்றங்கள் மூலம் இறுதியில் குற்றம் புரிபவருக்கு
கிடைப்பது நிதியியல் சார் நன்மைகளே (Financial benefit) ஆகும். இருப்பினும் தற்போது
பாலியல் சார் நலன்கள் (Sexual benefits) கூட இதன் பெறுவனவாக குற்றத்தில் ஈடுபவருக்கு
கிடைக்கின்றது என நடைமுறை உலகில் உணரக்கூடியதாக உள்ளது.
இன்றைய
சூழ்நிலையில் White Collar Crimes ஆனது மரபுசார் குற்றங்களில் (Traditional
offences) தொடங்கி மின்னியல் குற்றங்கள் (Digital offense) வரை பரந்து பட்டு செல்வதாக
அமைகின்றது. அதோடு இவை மேற்சொன்னவற்றை உள்வாங்கி அதன் கனதியை அல்லது பாதிப்பை ஓர் பரந்த
வீச்சில் மிகைப்படுத்துபவையாக அமைவதோடு குறித்த தொழிலாண்மைகளை தரத்தளவில் பாதிப்பதாகவும்
அமைகின்றது.
எது
எவ்வாறிருப்பினும் சமூகத்தில் இவை நீண்டகாலமாக வியாபாரத்தில் அல்லது தொழிலாண்மையில்
ஒரு வெற்றிகரமான எடுத்துக்காட்டிற்கு ஒர் உதாரணமாக உருவகிக்கப்பட்டு வந்துள்ளன. இருப்பினும்
இவ்வாறான நடத்தைகள் மரபுசார் குற்றங்களை விட அதிக மறை விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்துகின்றன.
இதை
ஒரு குற்ற நடவடிக்கையாக குற்றவியலில் (Criminology) முதன் முதலாக 1941 களில் Prof
Edwin Sutherland என்பவரால் உலகிற்கு எடுத்துக் காட்டப்பட்டது.
பின்வரும்
விடயங்கள் White Collar Crime ற்கான ஒவ்வொரு திட்டமிடல்கள் என நாம் வரையறுக்கலாம்.
இது பொதுவாக வியாபார (business) மட்டத்தில் செய்யப்படுகின்ற தந்திரோபாயங்களாகும்.
1)
கூப்பன் எண்கள் (Coupon Redemption)
2)
சாத்திரம் கூறுதல் (Fortune Telling)
3)
வீட்டு மனைகளில் முதலிடல் (Home Investment)
4)
பிரமிட் கட்டமைப்புக்கள் (Pyramid)
5)
ஆபிரிக்க முதலீடுகள் (African Investment)
6)
Rice Pulling
7)
Allaaddin Lamp
8)
நாகரெத்தின கல் (Cobra Stone)
9)
நவபாஷன சிலை (Novabasana Idol)
10) தங்கப்
பதையல்கள் (Gold treasure)
தொழிலாண்மையில்
White collar crime இன் வகிபாங்குகளும் அவற்றுக்கான உதாரணபங்களும் கீழே காட்டப்படுள்ளதுடன்
அவை ஒவ்வொரு தொழிலாண்மைகளில் கீழும் அவற்றின் ஆரம்ப படிநிலைகளுடன் (initial slaqe)
வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1).
மருத்துவ துறை – Medical Profession
இதன் கீழ் மருத்துவ துறையினர் போலியான மருத்துவ
சான்றிதழ்களை வழங்கல், சட்டரீதியற்ற கருக்கலைப்புகளை மேற்கொள்ளல், போலியான விசேட நிபுணத்துவ
சாட்சியமளித்தல் மற்றும் மாதிரி மருத்துகளை விற்றல் என்பன அடங்குகின்றன.
2).
சட்ட தொழிலாண்மை – Legal Profession
இதன் கீழ் சாட்சிகளை தெரிவு படுத்தல்
(Fabricating False Evidenie), சாட்சிகளுடன் உடைறுப்புக்களை மேற்கொள்ளல் ஒழுக்கக் கோட்பாடுகளை
மீறல் தமது கட்சியினருக்கு பங்கம் விளைவிக்குமாறு செயற்படல் என்பன அடங்கும்.
கணக்கெடுப்டிக்களின்
படி சட்டத்தொழிலில் ஈடுபடுவர்களே அதிகளவில் white collar crime செயற்பாடுகளில் ஈடுபடுவதாக
தெரிவிக்கப்படுகின்றது.
3).
பொறியியற்றுறை – Engineering
இதன் கீழ் பொதுவாக நியமத்திற்கு குறைந்த
மூலப்பொருட்களை பாவித்தல் உப ஒப்பந்தத்திற்கு நியமங்களை மீறி இனங்குதல் மற்றும் தவறான
தகவல்களை பேணல் என்பவற்றை குறிப்பிடலாம்.
4).
கணனித் துறை – IT Profission
இன்று உலகத்தையே கிராமமாக மாற்றி விட்ட தகவல்
தொழினுட்பமானது குற்றங்களின் தன்மையை அல்லது செயன்முறையை மாற்றிவிடினும் கூட அதன் விளைவுகளை
பொறுத்த மட்டில் அவை விரிவடைந்தே செல்கின்றன. ஏனெனில் இணைய இடைவெளியின் (Internet space)
ஊடாக செய்யப்படும் குற்றங்களுக்கோ அல்லது அவற்றின் உடைறுப்புகளுக்கோ அதிகபட்ச ஆளகி
வளமோ (labour force) அல்லது ஏனைண பௌதீக வளங்களோ (Physical Resources) அவசியமில்லை அத்துடன்
இணையக் குற்றவாளிகள் (Cyber Criminals) தகவல் தொழினுட்பத்தினுாடாக செயற்படும் போது
தாம் பிடிக்கபடும் சூழ்நிலைகளில் இருந்து தப்பி விடுகின்றனர் என்பதோடு இக்குற்றங்கள்
மிக இலகுவாக நாடுகளின் தேசிய எல்லையை கடந்து மேற்கொள்ள கூடியதாக இன்று சாத்தியப்படுள்ளது.
இதன்
கீழ் புரியப்படும் குற்றங்களை நாம் பொதுவாக நோக்குகையில் அவை பின்வருமாறு வகைப்படுத்தப்படலாம்.
1) Phishing
2) Internet Frauds
3) Hackers
4)
Stalking
5) Email Scam invasion
6)
Money Laundering
7) Data Diddling
இலங்கை
சட்டப்பரப்பு (Sri Lankan legal Structure) ஆனது White collar crimes ஐ தடுக்கக் கூடிய
அல்லது கண்டிக்கக் கூடிய ஏற்பாடுகளை கொண்டுள்ளதா?
13ம்
நுாற்றாண்டுகளில் சட்டத்தின் வளர்ச்சி சமூக வளர்ச்சியை விட மேலோங்கியிருந்ததாக ஆங்கில
சட்ட மேதைகள் சிலாகித்ததுண்டு. ஆனால் 21ம் நுாற்றாண்டில் தொழினுட்ப வளர்ச்சியின் பால்
ஏற்பட்ட மாற்றங்கள் சட்டத்தின் வளர்ச்சி வேகத்தை மிஞ்சி விட்டன. இதன் விளைவே நீதியியலில்
முன்னோக்கி ஆளும் (Retrospective) சட்டத்தின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் ஆகும்.
அவ்வகையில்
இலங்கை White collar crimes ஐ பொறுத்த மட்டில் மரபு ரீதியான சட்டங்களில் அமுலாக்கத்தையே
பெருமளவில் கொண்டுள்ளது. அவையாவன:
இலங்கையின்
சட்ட நிலைமையை கருத்தில் கொண்டு White Collar Crimes ஐ கணிப்பிடும் போது அவை பெரும்பாலும்
பொருளாதாரம் சார் தோற்றத்தையே பெறுகின்றன. அவை பெரும்பாலும் ஒரு வணிக நிறுவனத்திற்கோ
(அதன் வாடிக்கையாளர்கள் உட்பட) அல்லது நாட்டின் பொருளாதார கட்டமைப்பிற்கோ எதிராக செய்யப்படுபவையாகவே
காணப்படுகின்றன.
முன்னர்
குறிப்பிட்ட தொழிலாண்மை சார் ரீதியில் (Professionalism) இழைக்கப்படும் தவறுகள் யாவும்
இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் ( Penal
Code of Srilanka) கீழேயே தற்போது தண்டிக்கப்படுவது வழமையான ஒர் நடைமுறைச் செயற்பாடாகவே
உள்ளது. இதற்கு மேலதிகமாக அவ்அவ் தொழிற்துறைகளின் கூட்டமைப்புக்கள் அல்லது அது ஆக்கப்பட்டுள்ள
ஒழுங்கு விதிகளின் ஒழுக்கக் கோட்பாடுகளின் கீழ் சில இறுக்க நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதுண்டு.
இலங்கையில் பின்வரும் இரு வழக்குகள் White
Collar Crime தொடர்பில் முக்கியமானவை ஆகும்.
1)
The Attorney
General V. Mendis
2)
The Attorney
General V. Jinak Sri Uluwaduge
இந்த
இரு வழக்குகளில் முதல் வழக்கு மக்கள் வங்கி (Peoples bank) மற்றும் இரண்டாவது வழக்கு
மத்திய வங்கி (Central bank) என்பவற்றிற்கு எதிராக செய்யப்பட்ட குற்றங்கள் தொடர்பானதாகும்.
இவ்விரு
வழக்குகளிலும் வெளிநபர்களுடன் குறித்த நிதிநிறுவனங்களில் உத்தியோகத்தர்களாக கடமையாற்றிய
உதத்தியோகத்தர்களும் குற்றவாளியாக இணைத்து கொள்ளப்பட்டு பின்னர் தாமே குற்ற ஒப்புதல்களையும்
வழங்கியிருந்தனர் . எனவே இவ்வகை செயற்பாடுகளை ஊழியர்கள் எனும் ரீதியில் அவர்கள்
White Collar Crimes இன் கீழ் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் எனும் ரீதியில் பார்க்கப்பட்டடாலும் அலங்கையின் சட்டமுறைமை அவர்களை
மோசடியாக ஏமாற்றுதல் (Cheating) எனும் குற்ற வகைப்படுத்தலின் கீழ் மட்டுமே அடக்க இடமளித்தது.
இவ்வாறாக
பாரதுாரமான நிதியியல் குற்றத்தில் ஈடுபட்டு அக்குற்றத்தை ஏற்றுக்கொண்ட குற்றவாளிகளுக்கு
முதனிலை நீதிமன்றம் ஒத்திகவைக்கப்பட்ட சிறைத்தண்டனையையே வழங்கியிருந்தது. பின்னர் அது
சட்டமா அதிபரின் (Attorney-General) தலையீட்டாலும் முயற்சியினாலும பின்னர் மேன்முறையீட்டு
நீதிமன்றால் சிறைத்தண்டனையாக மாற்றம் கண்டது.
அதற்கு
மேலதிகமாக கீழ்வரும் வழக்குகள் White Collar Crimes தொடர்பில் வெளிநாட்டு நியாயாதிக்கங்களில்
தீர்க்கப்பட்டவையாகும் .
1)
Director of Public Prosecution V.Murdoch
(1993)
2)
Rey V.Belkig (1990)
3)
Oxford V.Moss (1978)
ஒரு
நாட்டின் சட்டநிலைகள் எவ்வாறு காணப்படினும் இன்று வரை துறையியல் சார் குற்றங்களில்
நிதியியல் சார் குற்றங்களே இவ்வாறு White Collar Crime எனும் வகுதிக்குள் பெரும்பாலும்
உள்ளடக்கப்படுகின்றன. அதற்கு இலங்கையும் விதிவிலக்கான காணப்படவில்லை. இருந்தாலும் இக்குற்றங்களை
சிறப்பு குற்றங்களாக அதன் பாரதுாரத்தன்மை கருதி வெளிநாட்டு சட்ட நியாயாதிக்கங்கள் சிறப்பு
சட்டங்கள் மூலம் குற்றங்களாக வகைப்படுத்தியுள்ள போதும் இலங்கையை பொறுத்தளவில் அது பெரும்பாலும்
தண்டனைச்சட்டக் கோவையுடன் அல்லது கணணிக்குற்றங்கள் சட்டம் (Computer Crimes
Act) மூலம் மிக மட்டுப்படுத்தப்பட்ட அளவில்
மாத்திரமே குற்றங்களாக வகைப்படுத்தப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. எதுஎவ்வாறிருப்பினும்
மிக உயர்ந்த சுட்டெண்ணை உடைய அபிவிருத்தி அடைந்து வரும் நாடான இலங்கையில் நவீன குற்றங்கள்
யாவும் அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்படுகின்ற நியதிச்சட்டங்கள் ஊடாக கட்டுப்படுத்தப்பட
வேண்டும். அவற்றை விட குறித்த சட்ட அமுலாக்கத்திற்கு
தேவையான மனித வளம் உள்ளிட்ட அனைத்து பௌதீக வளங்களும் சட்டம் மற்றும் ஒழுங்கு காப்பாளர்களுக்கு
உட்பாய்ச்சப்பட வேண்டும். அவ்வாறான ஒரு நிகழளளவிலேயே குறித்த குற்றங்கள் யாவும் பாரம்பரிய
குற்றவகைப்படுத்தலிலிருந்து நவீன தடுப்பிற்கு பயனுள்ள வகையில் அமையும்.
அ.வி.அர்ஜின்
சட்டமானி
சட்டத்தரணி
மன்னார்.
No comments:
Post a Comment