இன்று
இலங்கை சர்வதேச ரீதியில் மிக நெருக்கடியான அழுத்தங்களை
எதிர்கொண்டு வருகின்றது. அவை
பெரும்பாலும் யுத்தக்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலேயே தங்கியுள்ளது.
இவற்றின் உச்சமாக சுயாதீன மற்றும் பொறுப்புக்கூறலுடன் கூடிய உள்ளக விசாரணைகணை யுத்தக்குற்றங்கள் தொடர்பாக இலங்கை
அரசாங்கம் நடாத்தாதன் காரணமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை (UNHRC) மார்ச்-2014
திகதியிடப்பட்ட பிரேரணை A/HRC/25/1 மூலமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கையில்
நடந்த யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை
நடாத்த பணிப்புரை விடுத்தது. இப்பணிப்புரை ஆனது இலங்கையில் மனித உரிமைகட்கான பொறுப்புக்கூறல்
மற்றும் மீளிணக்க செயற்பாடுகளை மேம்படுத்தல் (Promoting Reconciliation, accountability
and human rights in Sri Lanka) எனும் அம்சத்தின் ஓர் பகுதியாகும்.
இலங்கை அரசாங்கம்
இவ்விசாரணைக்கு எதிர்ப்பலையாக பாராளுமன்றம் மூலம் விசாரணைகுழு இலங்கையினுள் நுழைய தடையை
ஏற்படுத்தியதோடு இராஐ தந்திர ரீதியில் “காணாமல் போனோர் பற்றிய ஐனாதிபதி ஆணைக்குழு”
ஒன்றையும் முன்னாள் நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையில் அமைத்ததோடு அதற்கு தேவைப்பட்டால்
ஆலோசனை வழங்க அமெரிக்கா மற்றும் பிரித்தானிய நாடுகளை சேர்ந்த சட்ட நிபுணர்களையும் நியமித்திருந்தது.
ஆனாலும் இச்செயற்பாடுகள் எவையும் ஐ.நா விசாரணை குழுவையோ அல்லது அதன் செயற்பாட்டு வீச்சையோ
பாதிக்கவில்லை.
இவ்விசாரணைக்குழு
(OHCHR Investigation on Sri Lanka – OISL) ஜெனீவாவை தளமாக கொண்டு இயங்குவதுடன் தனது
விசாரணைகளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) விசாரணை
காலப்பகுதிக்கு (21-02-2002 முதல் 15-11-2011) என வரையறுத்துக் கொண்டிருப்பினும் அது
அக்காலப்பகுதிக்கு பின்னாரான காலப்பகுதியிலும் முன்னைய காலப்பகுதியின் தொடர்ச்சியான
உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க தத்துவம் பெற்றுள்ளது.
இவ்விசாரணைகட்கு
ஆலோசனை அளிக்கவும், விசாரணைகளின் சுயாதீன தன்மையை உறுதிப்படுத்தவும் ஐ.நா மனித உரிமை
ஆணையாளர் யூன்-2013 இல் மூன்று வேறுபட்ட திறனுடைய நிபுணர்களை நியமித்தார். அவர்களில்
முன்னாள் பின்லாந்தின் ஜனாதிபதி Martti Ahtisaari, நியூசிலாந்தின் முன்னாள் மேல்நீதிமன்ற
நீதிபதி Silvia Cartwright மற்றும் பாக்கிஸ்தானிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள்
தலைவர் Asma Jahangir என்போர் உள்ளடங்கி இருக்கின்றனர்.
விசாரணைகட்கான சட்டத்தளம்
(Legal Framework for the Investigations)
இவ்விசாரணைக்குழு
யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகம்
என்பன பற்றி விசாரிக்க தத்துவார்த்தம் கொண்டுள்ளது். இது இலங்கை அரசாங்கம் ஓர் தரப்பாக
உள்ள சர்வதேவ மனித உரிமைகள் பொருந்தனைகள் (International Human Rights Treaties) மற்றும்
சர்வதேச வழக்காற்று சட்டங்கள் (Customary International Law) என்பனவற்றின் கீழ் இலங்கைக்கு
உரித்தான கடப்பாடுகள் தொடர்பிலான பின்பற்றல்களும் அத்துடன் கூடிய மீறல்களும் ஆராயப்படும்.
அத்தோடு OISL ஆனது சர்வதேச குற்றவியல் சட்டத்தின் (International Criminal Law) பிரகாரமும்
விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை இனம் காணும் தத்துவார்த்தம் உடையது.
இது
அரசாங்கம் தவிர விடுதலைப்புலிகள் புரிந்த யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள்
தொடர்பிலும் தனது கவனத்தை செலுத்துகின்றது. சர்வதேச மனிதாபிமான சட்டப்படியும் (International Humanitarian Law) அதன் அமுலாக்கற்
பொறிமுறையில் ஒன்றான Geneva Convention relevant to non-international armed
conflicts இன் அமுலாக்கற் தொழிற்பாடுகளின் படியும் அரசு சாரா தரப்பு (Non-State
Actor) மனித உரிமை பொருந்தனைகளின் தரப்பாக இனங்காணப்படா முடியாவிடினும் அரசின் ஆட்புல
எல்லைக்குள் குறிப்பிடத்தக்க அளவு பரப்பை தமது முழுமையான கட்டுப்பாட்டினுள் De Facto ஆக வைத்திருப்பின் அவர்களும் மனித
உரிமைகளை மதித்து செயற்பட வேண்டிய கடமைப்பாட்டிற்கு உள்ளாகின்றார்கள். இந்த வகுதிக்குள்
விடுதலைப்புலிகளும் அடக்கப்படுவார்கள்.
OISL
குறிப்பாக கீழ்வரும் விடயங்கள் குறித்து விசாரிப்பதற்கு விஷேட பொறிமுறையுடன் கூடிய
தத்துவார்த்தத்தை கொண்டுள்ளது.
01.சட்டத்திற்கு
புறம்பான படுகொலைகள் (Extrajudicial Executions)
02.பலவந்த
காணாமற் போதல்கள் (Enforced Disappearances)
03.உள்ளக
இடப்பெயர்விற்கு உட்பட்டோர் (Internally Displaced People)
04.எதேச்சைதிகாரமான கைதுகள் மற்றும் தடுப்பு
வைப்புக்கள் (Arbitrary Arrest)
05.பெண்கட்கு
எதிரான வன்முறை (Violence against Women)
06.சித்திரவதை
(Torture)
அத்தோடு
OISL ஆனது விசாரணைகளின் போது நேரடி தகவல் அறிக்கைகள், அரச மற்றும் சிவில் சமூக அறிக்கைகள்
என்பவற்றோடு செய்மதிப்படங்கள் (Satellite Images), மற்றும் ஏற்கப்பட்ட கானொளி மற்றும்
புகைப்படங்கள் (Authenticated Video and Photographic) என்பவற்றையும் பயன்படுத்த முனைகின்றது.
இருப்பினும்
சாட்சி பாதுகாப்பு (Witness Protection) எனும் அம்சம் இவ்விவாரணை செயன்முறையை பொறுத்த
மட்டில் மிகவும் தொய்வான நிலையிலேயே உள்ளதை யாரும் மறுக்க முடியாது. ஏனெனில் உள்நாட்டு
சாட்சிகளை பாதுகாக்க நம்பகரமான உள்நாட்டு பொறிமுறைகள் இல்லாதவிடத்து சாட்சிகளின் பாதுகாப்பு
என்பது சர்வதேச விசாரணையை பொறுத்த மட்டில் கேள்விக்குறியே. இவ்விடத்தில் OISL ஆனது
இலங்கை அரசிடம் இலங்கையில் இருந்து சாட்சியமளிக்கும் நபர்கள் சாட்சியமளித்தன் விளைவாக
சுரண்டல், அச்சுறுத்தல், கீழ்த்தரமான நடத்தை மற்றும் பழிவாங்கல் உட்பட்ட எந்தவொரு துலங்கல்கட்கும்
உள்ளாக்கப்படக்கூடாது என்ற கோரிக்கையை விடுத்துள்ள போதிலும் அது உள்நாட்டு பொறிமுறை
ஒன்றினுாடாக உறுதிப்படுத்தப்படும் வரை கேள்விக்குறியாகவே அமையும்.
OISL
ஆனது உயர் இரகசியத்தன்மையை பாதுகாக்கும் பொருட்டு சாட்சிகளின் பெயர் மற்றும் அடையாள
விபரங்களை எந்த ஒரு அறிக்கையிலும் வெளியிட மாட்டாது. அத்தோடு இறுதிக்கட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட
பின்னரும் சாட்சியங்களின் விபரங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு தரவுகள் பொறிமுறைக்கேற்ப
(UN procedures for strictly confidential material) தொடர்ச்சியாக பாதுகாக்கப்படும்.
மனித
உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் மற்றும் மானிடத்திற்கெதிரான குற்றச் செயல்கள் தொடர்பாக
புகார்களை 31-10-2014 அன்று வரை OISL இடம் சமர்ப்பிக்க முடியும். புகார்களை தமிழ் மொழியில்
அனுப்ப முடியும் என்பதுடன் அவை 10 பக்கங்கட்கு மேற்படாது இருக்க வேண்டும். ஆதாரங்களை
கானொளி, புகைப்படம் மற்றும் ஒலி வடிவில் அனுப்ப விரும்புபவர்கள் ஐ.நா மனித உரிமையாளர்
அலுவலகத்தை தொடர்பு கொள்ளின் அவ்வலுவலகம் அவ்வாதாரங்களை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ளும்.
மேலதிக
தகவல்கட்கு இங்கு சொடுக்குங்கள்.
No comments:
Post a Comment