Social Icons

Pages

Monday, 11 August 2014

ஐ.நா வின் இலங்கைக்கெதிரான யுத்தக்குற்ற விசாரணை ஓர் சுருக்கப்பார்வை-OISL


இன்று இலங்கை சர்வதேச ரீதியில் மிக நெருக்கடியான அழுத்தங்களை
எதிர்கொண்டு வருகின்றது. அவை பெரும்பாலும் யுத்தக்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலேயே தங்கியுள்ளது. இவற்றின் உச்சமாக சுயாதீன மற்றும் பொறுப்புக்கூறலுடன் கூடிய  உள்ளக விசாரணைகணை யுத்தக்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் நடாத்தாதன் காரணமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை (UNHRC) மார்ச்-2014 திகதியிடப்பட்ட பிரேரணை A/HRC/25/1 மூலமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கையில் நடந்த யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடாத்த பணிப்புரை விடுத்தது. இப்பணிப்புரை ஆனது இலங்கையில் மனித உரிமைகட்கான பொறுப்புக்கூறல் மற்றும் மீளிணக்க செயற்பாடுகளை மேம்படுத்தல் (Promoting Reconciliation, accountability and human rights in Sri Lanka) எனும் அம்சத்தின் ஓர் பகுதியாகும்.

இலங்கை அரசாங்கம் இவ்விசாரணைக்கு எதிர்ப்பலையாக பாராளுமன்றம் மூலம் விசாரணைகுழு இலங்கையினுள் நுழைய தடையை ஏற்படுத்தியதோடு இராஐ தந்திர ரீதியில் “காணாமல் போனோர் பற்றிய ஐனாதிபதி ஆணைக்குழு” ஒன்றையும் முன்னாள் நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையில் அமைத்ததோடு அதற்கு தேவைப்பட்டால் ஆலோசனை வழங்க அமெரிக்கா மற்றும் பிரித்தானிய நாடுகளை சேர்ந்த சட்ட நிபுணர்களையும் நியமித்திருந்தது. ஆனாலும் இச்செயற்பாடுகள் எவையும் ஐ.நா விசாரணை குழுவையோ அல்லது அதன் செயற்பாட்டு வீச்சையோ பாதிக்கவில்லை.

இவ்விசாரணைக்குழு (OHCHR Investigation on Sri Lanka – OISL) ஜெனீவாவை தளமாக கொண்டு இயங்குவதுடன் தனது விசாரணைகளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) விசாரணை காலப்பகுதிக்கு (21-02-2002 முதல் 15-11-2011) என வரையறுத்துக் கொண்டிருப்பினும் அது அக்காலப்பகுதிக்கு பின்னாரான காலப்பகுதியிலும் முன்னைய காலப்பகுதியின் தொடர்ச்சியான உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க தத்துவம் பெற்றுள்ளது.

இவ்விசாரணைகட்கு ஆலோசனை அளிக்கவும், விசாரணைகளின் சுயாதீன தன்மையை உறுதிப்படுத்தவும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் யூன்-2013 இல் மூன்று வேறுபட்ட திறனுடைய நிபுணர்களை நியமித்தார். அவர்களில் முன்னாள் பின்லாந்தின் ஜனாதிபதி Martti Ahtisaari, நியூசிலாந்தின் முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி Silvia Cartwright மற்றும் பாக்கிஸ்தானிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் Asma Jahangir என்போர் உள்ளடங்கி இருக்கின்றனர்.

விசாரணைகட்கான சட்டத்தளம் (Legal Framework for the Investigations)

இவ்விசாரணைக்குழு யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகம் என்பன பற்றி விசாரிக்க தத்துவார்த்தம் கொண்டுள்ளது். இது இலங்கை அரசாங்கம் ஓர் தரப்பாக உள்ள சர்வதேவ மனித உரிமைகள் பொருந்தனைகள் (International Human Rights Treaties) மற்றும் சர்வதேச வழக்காற்று சட்டங்கள் (Customary International Law) என்பனவற்றின் கீழ் இலங்கைக்கு உரித்தான கடப்பாடுகள் தொடர்பிலான பின்பற்றல்களும் அத்துடன் கூடிய மீறல்களும் ஆராயப்படும். அத்தோடு OISL ஆனது சர்வதேச குற்றவியல் சட்டத்தின் (International Criminal Law) பிரகாரமும் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை இனம் காணும் தத்துவார்த்தம் உடையது.

இது அரசாங்கம் தவிர விடுதலைப்புலிகள் புரிந்த யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் தனது கவனத்தை செலுத்துகின்றது. சர்வதேச மனிதாபிமான சட்டப்படியும்  (International Humanitarian Law) அதன் அமுலாக்கற் பொறிமுறையில் ஒன்றான Geneva Convention relevant to non-international armed conflicts இன் அமுலாக்கற் தொழிற்பாடுகளின் படியும் அரசு சாரா தரப்பு (Non-State Actor) மனித உரிமை பொருந்தனைகளின் தரப்பாக இனங்காணப்படா முடியாவிடினும் அரசின் ஆட்புல எல்லைக்குள் குறிப்பிடத்தக்க அளவு பரப்பை தமது முழுமையான கட்டுப்பாட்டினுள் De Facto ஆக வைத்திருப்பின் அவர்களும் மனித உரிமைகளை மதித்து செயற்பட வேண்டிய கடமைப்பாட்டிற்கு உள்ளாகின்றார்கள். இந்த வகுதிக்குள் விடுதலைப்புலிகளும் அடக்கப்படுவார்கள்.

OISL குறிப்பாக கீழ்வரும் விடயங்கள் குறித்து விசாரிப்பதற்கு விஷேட பொறிமுறையுடன் கூடிய தத்துவார்த்தத்தை கொண்டுள்ளது.

01.சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் (Extrajudicial Executions)
02.பலவந்த காணாமற் போதல்கள் (Enforced Disappearances)
03.உள்ளக இடப்பெயர்விற்கு உட்பட்டோர் (Internally Displaced People)
04.எதேச்சைதிகாரமான கைதுகள் மற்றும் தடுப்பு வைப்புக்கள் (Arbitrary Arrest)
05.பெண்கட்கு எதிரான வன்முறை (Violence against Women)
06.சித்திரவதை (Torture)

அத்தோடு OISL ஆனது விசாரணைகளின் போது நேரடி தகவல் அறிக்கைகள், அரச மற்றும் சிவில் சமூக அறிக்கைகள் என்பவற்றோடு செய்மதிப்படங்கள் (Satellite Images), மற்றும் ஏற்கப்பட்ட கானொளி மற்றும் புகைப்படங்கள் (Authenticated Video and Photographic) என்பவற்றையும் பயன்படுத்த முனைகின்றது.

இருப்பினும் சாட்சி பாதுகாப்பு (Witness Protection) எனும் அம்சம் இவ்விவாரணை செயன்முறையை பொறுத்த மட்டில் மிகவும் தொய்வான நிலையிலேயே உள்ளதை யாரும் மறுக்க முடியாது. ஏனெனில் உள்நாட்டு சாட்சிகளை பாதுகாக்க நம்பகரமான உள்நாட்டு பொறிமுறைகள் இல்லாதவிடத்து சாட்சிகளின் பாதுகாப்பு என்பது சர்வதேச விசாரணையை பொறுத்த மட்டில் கேள்விக்குறியே. இவ்விடத்தில் OISL ஆனது இலங்கை அரசிடம் இலங்கையில் இருந்து சாட்சியமளிக்கும் நபர்கள் சாட்சியமளித்தன் விளைவாக சுரண்டல், அச்சுறுத்தல், கீழ்த்தரமான நடத்தை மற்றும் பழிவாங்கல் உட்பட்ட எந்தவொரு துலங்கல்கட்கும் உள்ளாக்கப்படக்கூடாது என்ற கோரிக்கையை விடுத்துள்ள போதிலும் அது உள்நாட்டு பொறிமுறை ஒன்றினுாடாக உறுதிப்படுத்தப்படும் வரை கேள்விக்குறியாகவே அமையும்.


OISL ஆனது உயர் இரகசியத்தன்மையை பாதுகாக்கும் பொருட்டு சாட்சிகளின் பெயர் மற்றும் அடையாள விபரங்களை எந்த ஒரு அறிக்கையிலும் வெளியிட மாட்டாது. அத்தோடு இறுதிக்கட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னரும் சாட்சியங்களின் விபரங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு தரவுகள் பொறிமுறைக்கேற்ப (UN procedures for strictly confidential material) தொடர்ச்சியாக பாதுகாக்கப்படும்.

மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் மற்றும் மானிடத்திற்கெதிரான குற்றச் செயல்கள் தொடர்பாக புகார்களை 31-10-2014 அன்று வரை OISL இடம் சமர்ப்பிக்க முடியும். புகார்களை தமிழ் மொழியில் அனுப்ப முடியும் என்பதுடன் அவை 10 பக்கங்கட்கு மேற்படாது இருக்க வேண்டும். ஆதாரங்களை கானொளி, புகைப்படம் மற்றும் ஒலி வடிவில் அனுப்ப விரும்புபவர்கள் ஐ.நா மனித உரிமையாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளின் அவ்வலுவலகம் அவ்வாதாரங்களை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: OISL_submissions@ohchr.org

மேலதிக தகவல்கட்கு இங்கு சொடுக்குங்கள்.


Tuesday, 3 June 2014

புலமைச் சொத்து சட்டம் (Intellectual Property Law)


cyfpd; Vida mgptpUj;jp mile;j ehLfNshL xg;gpLk; NghJ ,yq;ifahdJ kpff;Fiwtsthd Mf;fG+u;t/tpQ;Qhd ntspaPLfisf;nfhz;l mgptpUj;jp mile;J tUk; ehlhFk;. Mf;fq;fSf;F Gyikr;nrhj;J Nghd;w rl;l mq;fPfhuk; kw;Wk; ghJfhg;G toq;FjyhdJ mgptpUj;jp Fd;wpa> mgptpUj;jp mile;J tUk; ehLfSf;F kw;Wk; nghJtpy; kdpj Fyj;jpw;Nf cjTtjpy;iy. ,j;jifa epiyapy; gy;NtW Gyikr;nrhj;J cupikfis KOikahd rl;l gug;ngy;iyia epWtp eilKiwg;gLj;Jtjd; %yk; ghJfhj;jYk; tpUj;jp nra;jYk; NghJkhd epahag;gLj;jy;fis nfhz;bUf;ftpy;iy vd;w $w;iw Gyikr;nrhj;J rl;lj;jpd; jhu;g;gupaj;ij mbg;gilahf itj;J Muha;tNj ,f;fl;Liuapd; Nehf;fkhf mikfpwJ.

Gyikr;nrhj;J rl;lkhdJ cs my;yJ Mf;fG+u;t Copaj;jpd; (Mental Labour) cUthf;fk;> gad;ghL kw;Wk; Kfhikj;Jtj;ij newpg;gLj;jp MSk; rl;lk; vdyhk;. ,jpy; Mf;fTupik (Patent) ifj;njhopy; tbtikg;Gfs; (Industrial Design),  tu;j;jf FwpaPLfs; (Trade mark)> gjpg;Gupik (copy right)> ntspg;gLj;jg;glhj jfty;fs; (Undisclosed information) vd;gd nghJtpy; cs;slq;Ffpd;wd. ,r;rl;lj;jpw;fhd mbg;gil Njitg;ghLfshf nghJtpy; GjpaJ Gidjy; (novelty)> fz;Lgpbg;G gbKiw (inventive step), mryhd jd;ik (originality), jdpj;Jtj;jd;ik Nghd;wd fhzg;gLfpd;wd vdyhk;.


Gyikr;nrhj;J rl;lj;jpd; epahag;gLj;jy;fspd; Muha;T
xU jug;gpdu; jw;NghjpUf;Fk; rl;lq;fs; Gyikr;nrhj;Jf;fis ghJfhf;f NghJkhdit my;y vd Mu;g;gupj;Jf;nfhz;bUf;f cjhuzkhf gjpg;Gupik kw;Wk; fhg;Gupik vd;gd ntspg;gilahf gy;Y}lf Mf;fq;fs; kw;Wk; nkd;nghUl;fSf;Fk; tpupTgLj;jg;glNtz;Lk; vd;w Nfhupf;if tYj;J tUjiy Fwpg;gplyhk;. kWGwj;jpy; tYthd Gyikr;nrhj;J ghJfhg;gpw;F vjpu;g;G njuptpg;Nghuhd mgptpUj;jp mile;J tUk; ehLfspd; gpujpepjpfs;> Efu;Nthh;> Gyikr;nrhj;Jf;fis gad;gLj;JNthh;> kuGuPjpahd jhuhs nghUspay; nfhs;ifahsu;fs;> gpd;etPdj;Jt nfhs;ifahsu;fs;> #oypashsu;fs; my;yJ kjk; rhu; FOf;fs; vd ePz;l gl;baypy; cs;slq;FNthu; njhifAk; Fwpg;gplj;jf;fJ.

Gyikr;nrhj;Jf;fhd epahag;gLj;jy;fs; ,Utpjkhf tifg;gLj;jg;gLfpwJ. xOf;ftpay;> ed;ndwp rhu; tplaq;fs; KjyhtjhFk;. mLj;jJ Gyikr;nrhj;Jupik tpUk;gj;jF nraw;ghLfis Cf;Ftpg;gjha; mikAk; vd;Wk; Fwpg;ghf Mf;fTupik Gjpa Ma;TfSf;Fk; Gjpa fz;Lgpbg;GfSf;Fk; tpj;jpLtJk; tu;jjf FwpaPLfs; cau; ju cw;gj;jp nghUl;fis cw;gj;jp nra;;a tu;j;jfu;fis Cf;Ftpg;gJk; vLj;Jf;fhl;lj;jf;fJ. ,jw;fhd epahag;gLj;jy;fis EZf;fkhf Nehf;fpd;

gjpg;Gupikf;fhd epahag;gLj;jy;fs;
gjpg;Gupik vd;gJ xU egu; jdJ Gyikj;Jt jpwikfisAk; kw;Wk; vz;zq;fspd; ntspg;ghl;bidAk; Mf;FjpwidAk; ghJfhg;gjw;Fk; mjpypUe;J epjp %ykhd ed;ikia gpwu; miltjid jLf;fTk; cs;s kPwg;gl Kbahj nrhj;J njhlu;ghd cupik vdyhk;. ,J ntspaplg;gl;l vOj;jhf;fq;fis mjpfhukpd;wp ntspapLtij jLf;Fk; KiwahFk;.

Kjyhtjhf ,aw;ifr;rl;lj;jpd; gb jdpegu; xUtupd; cs Copak; mtuJ MjdkhfNt fUjg;glNtz;Lk;. ,jd; gb Fwpj;j Mf;fk; me;j jdpegupd; jdpj;j ,ay;ig gpujpgypf;Fk; vd;w fUJNfhshy; ,aw;ifr;rl;lk; mij ghJfhf;f Ntz;LfpwJ. mNjNeuk; ,aw;ifr;rl;lj;jpd; ,d;ndhU fUj;jhf miktJ (N[hd; nyhf;fpd; fUj;jpd; gb) egu;fs; mtu;fsJ Copaj;jpdhyhd cw;gj;jp kPJ ,aw;if cupikfis nfhz;bUg;gu; vDk; uPjpapy; cs Copaj;jpd; ntspg;ghLfSf;Fk; ,J gpuNahfKilajhFk; vd $wg;gLfpwJ.

Mf;FdUf;F Mf;fG+u;t Ntiyapy; <Lgl;L nghJkf;fSf;nfd ntspapl;likf;fhf toq;fg;gLk; ntFkjpNa ,j;jifa ghJfhg;G vd thjplg;gLtJKz;L. ,t;ntFkjpapd; rl;l ntspg;gLj;JifNa gjpg;Gupikr;rl;lkhFk; vd;gNj mLj;j epahag;gLj;jyhFk;. NkYk; ,j;jifa ghJfhg;G ,Ug;gpNd r%fj;jpd; VidNahiuAk; Cf;Ftpf;Fk;; fhuzpahFk; vd;gJ ,d;DnkhU epahag;gLj;jyhFk;. ,jdhy; gy ntspaPLfSk; Mf;fq;fSk; r%fj;jpw;F fpilf;Fk; vd;gJ Fwpg;gplj;jf;fJ.

Mf;fTupikf;fhd epahag;gLj;jy;fs;
ifj;njhopy; gpuNahfKilajhd Gjpa fz;Lgpbg;nghd;iw my;yJ vz;zf;fUit Mf;fpa egUf;F tiuaWf;fg;gl;l fhyj;jpw;F gpuj;jpNaf cupik toq;Fjiy Mf;fTupik vdyhk;. nghJkf;fs; gjpyPlhf ed;ikfis ngWtjpdhy; Mf;fTupik toq;fg;gLjypyhd tpisTfis  rfpj;Jf; nfhs;s Ntz;Lk; vd;W epahak; fw;gpf;fg;gLfpwJ.

KjyhtJ rhjfkhd fhuzpahf Mf;fTupik jdpegu;fspd; my;yJ epWtdq;fspd; jfty;fis ,ufrpakha; kiwe;J Nghfhky; eilKiwapy; gad;gLj;Jtjw;F Vw;wtpjj;jpy; ntspg;gLj;Jtij Cf;Ftpf;fpwJ vd;gij nfhs;syhk;. mLj;jjhf Gjpa fz;Lgpbg;GfSf;Fk; Gidjy;fSf;Fk; Mf;fTupik toq;Fjy; Cf;Ftpg;Gf; fhuzpahf
அமையும். Lord Oliver Asahi tof;fpy; “Underlying purpose of the patent system is the encouragement of improvements and innovation. In return for making known his improvement to the public the inventor receives the benefit of a period of monopoly during which he becomes entitled to prevent other from performing his invention except by his license” vd;w $w;W Mf;fTupikapd; Nehf;fj;ij njspthf vLj;Jf;fhl;LfpwJ.

tpahghu FwpaPLfSf;;Fupa epahag;gLj;jy;fs;
tpahghu FwpaPL vd;gJ xU njhopy; Kaw;rpapy; gz;lq;fis NtW njhopy; Kaw;rpapypUe;J gpupj;jwpa cjTk; VNjDk; irif vdyhk;. xU FwpaPl;bw;F Gjpa mu;j;jj;ij nfhLj;jy; ,q;F epfo;fpwJ. ,jd; rhjfkhd tplaq;fshf Efu;Nthu; xNu khjpupahd gz;lq;fis xd;wpypUe;J xd;iw NtWgLj;jp ghu;f;f cjTjy;> juj;ij Nkk;gLj;j cjTjy;> cyfshtpa tu;j;jfj;jpy; nghJthd rPu;jd;ikiaAk; epahakhd tu;j;jf Nghl;bapidAk; cUthf;Fjy;> nghUl;fspd; tpsk;guk;> tpw;gidf;F ,yFthd cj;jpia toq;Fjy; Nghd;wtw;iw Fwpg;gplyhk;. gpujhd ed;ndwp rhu; fhuzkhf miktJ tpijf;fhj xUtu; Fwpj;j mWtilia ngwf;$lhJ vd;gjhFk;. mjhtJ Kiwaw;w nry;tr; Nru;f;if kw;Wk; rl;l Kuzhd Nghl;b vd;gtw;wpw;F vjpuhd ghJfhg;ig mspf;fpwJ.

,j;jifa epahag;gLj;jy; midj;Jk; Nru;e;jjhfNt Vida Gjpjhf cs;thq;fg;gLk; Gyikr;nrhj;J rl;l gpupTfSf;Fk; mbg;gilahf mikfpd;wd. ,t;tidj;J epahag;gLj;jy;fSf;Fk; nghJthd tpku;rdkhf mikgtw;iw Nehf;fpd; Gyikr;nrhj;J rl;lj;jpd; gy;NtW gpupTfSf;Fs; gy Kf;fpakhd tpj;jpahrq;fs; ,Ug;gpDk; nghJtpy; ,it midj;Jk; nfhz;Ls;s mk;rk; vz;zq;fs;> fz;Lgpbg;Gfs;> FwpaPLfs; kw;Wk; jfty;fs; Nghd;w njhl;Lzu Kbahjit kPjhd nrhj;J ghJfhg;ig mspg;gjhFk;.

fhzp Nghd;w njhl;Lzuf;$ba tsq;fSf;F jdpahu; Mjd cupikfs; toq;FjYf;fhd epahag;gLj;jyhf fhzg;gLtJ Fwpj;j tsq;fs; mUfpr; nry;yf;$baJ my;yJ vy;iyg;gLj;jg;gl;lit  vd;gJTk; mtw;iw gfpu;jy; fbdk; vd;gjhyhFk;. ,jNdhL xg;gpLifapy; vz;zq;fs; kw;Wk; jfty;fs; mUfpr; nry;yhJ vd;gJld; %y cupj;jhsupd; gad;gLj;jYf;fhd cupikia ghjpf;fhj tz;zNk VidNahu; ,tw;iw gad;gLj;jf;$bajhf ,Uf;fpwJ. MapDk; Gyikr;nrhj;J rl;lkhdJ nraw;ifahd gw;whf;Fiwia my;yJ mUfpa jd;ikia cUthf;FfpwJ vd;W tpku;rpf;fg;gLfpwJ.

Mf vj;jifa tpku;rdq;fs; Kd;itf;fg;gbDk; jdpegu; mf;fiw kw;Wk; nghJ kf;fs; mf;fiw vd;gtw;Wf;fpilapyhd rkg;gLj;jYf;Fk; NkYk; Kd;djhfNt $wg;gl;l epahag;gLj;jy;fs; fhuzkhfTk; Gyikr;nrhj;J rl;lk;  mtrpak; vd;gJ GydhfpwJ. Gyikr;nrhj;J rl;lj;jpd mtrpak; kWf;fg;gl Kbahj xd;whfp tpl;l epiyapy; ,dp mgptpUj;jp mile;j ehLfSf;Fk; mgptpUj;jp mile;J tUk; ehLfSf;Fk; Gyikr;nrhj;J rl;lj;jpd; Njitapd; tpfpjhrhuj;ij mtjhdpj;jy; Ma;tpy; Njitg;gLj;jg;gl;Ls;sJ.

Nghf;Ftuj;jpdJk; njhlu;ghlypdJk; ghupastpyhd njhopDl;g mgptpUj;jp  tu;j;jfj;jpdJk; tpahghuj;jpdJk; cyfkakhf;fiy tpistpj;Js;sJ. ,J Gyikr; nrhj;Jf;fspYk; ghupa nry;thf;if nrYj;jpAs;sJ vd;gNjhL Gyikr;nrhj;Jf;fs; ru;tNjr kag;gLj;jg;gl;L tUtij mtjhdpf;fyhk;. Gyikr;nrhj;J nghUshjhu epiyikfNshL neUq;fpa njhlu;Gilait vDk; tifapy; ru;tNjr juhjuk; xd;W nfhz;Ltug;gLifapy; midj;J ehLfspdJk; midj;J tplaq;fSk; ftdj;jpw; nfhs;sg;gl Ntz;Lk; vd;gJ njspT.

TRIPS cld;gbf;if cUthfpa tuyhw;iw Nehf;Fk; NghJ cau; njhopDl;gKk; mjpf Mf;f gilg;Gfspd; ntspaPLk; fhzg;gl;l mgptpUj;jp mile;j ehLfNs ,j;jifa cupikfis ghJfhg;gjpy; Kidg;gha; ,Ue;Js;sd vd;gij mtjhdpf;fyhk;. "Developing countries participate in global intellectual property systems as 'second comers' in a world that has been shaped by 'first comers,'  vd;w $w;W ,q;F vLj;Jf;fhl;lj;jf;fJ. If;fpa mnkupf;fh> Nkw;F INuhg;gh> [g;ghd; Mfpa ehLfs; ,tw;wpy; Fwpg;gplj;jf;fd.

mgptpUj;jp mile;J tUk; ehLfisg; nghWj;jtiu Gyikr;nrhj;Jf;fhd ,Wf;fkhdJk; ghupastpyhdJkhd ghJfhg;G rpwe;jjhf mikahJ vd;gJ fPo;tUk; fhuzq;fshy; epahag;gLj;jg;gLfpwJ.

,e;ehLfisg; nghWj;jtiu nghUshjhu ,lu;ghLfs; fhuzkhf njhopDl;g Mf;fq;fs; kw;Wk; Gj;jhf;fq;fs; kpff;FiwthfNt fhzg;gLfpd;wd. ,q;F Rfhjhuk;> tptrhak;> fy;tp kw;Wk; jfty; njhlu;ghly; tsu;r;rpf;F> Gyikr;rhu; tplaq;fs; xU jdpegupd; cupikahf kl;Lg;gLj;jg;gLk; NghJ jilf;fy;yha; miktNjhL ,j;jifa Kiwik mgptpUj;jp mile;J tUk; ehLfSf;F Njitahd cw;gj;jp nghUl;fs; kw;Wk; njhopDl;gq;fSf;fhd mZFjYf;fhd fpuaj;ijAk; mjpfupf;fpwJ. ,e;epiyapy; mgtpUj;jp mile;J tUk; ehLfs; cau; njhopDl;gq;fis ngWtjw;F mgptpUj;jpaile;j ehLfspd; gy;Njrpa fk;gdpfspy; ghupastpw;F jq;fpAs;sik Fwpg;gplj;jf;fJ.

Gyikr;nrhj;J rl;l Kiwik tpUj;jpaile;j nghUshjhuj;jpw;Nf kpfTk; nghUj;jkhdjhf cs;sJ vd;gJ gutyhd Fw;wr;rhl;lhFk;. ,J mgptpUj;jp mile;j ehLfSf;F Nkyjpf ,yhgq;fis ngw;Wj;jUk;; mNjNeuk; mgptpUj;jp mile;J tUk; ehLfspy; cs;s epWtdq;fs; njhopDl;g mDkjpfs; kw;Wk; cw;gj;jp cupikfSf;fhf caupa nfhLg;gdTfis nra;a Ntz;b Vw;gLfpwJ. ,J tsu;Kf ehLfspy; gpujhd gpur;rpidahf cs;s tWikia Xopj;jiy NkYk; jhkjg;gLj;JfpwJ.

nghJtpy; Gyikr;nrhj;J rl;lg;gpupTfspy; mjpfk; mgptpUj;jp mile;j ehLfSf;F ghjpg;gha; miktJ Mf;fTupikahFk;. xUtUf;F xU fz;Lgpbg;gpw;fhd Mf;fTupik toq;fg;gLkplj;J ,j;jifa Mf;fk; kPJ mtUf;F Fwpg;gplj;jf;f fhyj;jpw;F mJ njhlu;gpyhd midj;J nraw;ghl;bw;Fk; gpuj;jpNaf cupik toq;fg;gLfpwJ. Fwpg;ghf ,jid Kjd;ikahf gad;Lj;Jk; Jiwahf kUe;Jfs; jahupf;Fk; njhopy; (pharmaceutical) fhzg;gLfpwJ. vapl;]; kw;Wk; kNyupah Nghd;w Neha;fSf;fhd kUe;Jfs; mgptpUj;jp mile;J tUk; ehLfisg; nghWj;jtiu ghupa Njitahf fhzg;gbDk; ,j;jifa Mf;fTupik Kiw ,tw;wpw;Fk; nra;ag;gLkplj;J mij ,j;jifa ehLfs; mZfpg; gad;ngWjy; eilKiwr; rhj;jpakw;wjhfNt fhzg;gLk;.

cyf njhopDl;g Kiw vd;Wkpy;yhjthW vy;yh JiwfspYk; nry;thf;F nrYj;jpathW tsu;r;rpaile;J tUfpwJ. ,jw;F <LnfhLf;Fk; tifapy; Kd;Ndw mgptpUj;jp mile;J tUk; kw;Wk; mgptpUj;jp Fd;wpa ehLfSf;F ,ayhjjhf cs;sJ vd;gNjhL ,jw;F tsg;ghw;whf;Fiw gpujhd fhuzkhf cs;sJ. ,d;W R&D vdg;gLk; Research and Development  vd;gjw;F mjpf Kf;fpaj;Jtk; nfhLf;fg;gLk; epyik midj;J JiwfspYk; mjpfupj;J tUfpwJ. ,j;jifa nraw;ghLfs; %yk; mgptpUj;jp mile;j ehLfSf;F epfuhf njhopDl;g tpisTfis ngw mgptpUj;jp mile;J tUk; ehLfSf;F Fwpg;ghf Fiw mgptpUj;jp ehLfSf;F r%f nghUshjhu> murpay; fhuzpfs; fhuzkha; cs. ,jdhy; ,U jug;G ehLfSf;fpilNaAk; njhopDl;g ,ilntsp mjpfupj;Nj fhzg;gLfpwJ vd;gNjhL ,Wf;fkhd Gyikr;nrhj;J rl;l ghJfhg;Gf;fs; NkYk; ,t; ,ilntspia tp];jupf;fty;yJ.

mgptpUj;jp mile;j ehLfs; jk; Ra tzpf mf;fiwfSf;F mjpfk; Kf;fpak; nfhLj;jy; toikahd tplakhFk;. Fwpg;ghf TRIPS jhtu tpyq;Ffs; kPJ Mf;fTupik nra;tijAk; mDkjpf;Fk; epiyapy; ,t;Ntw;ghL twpa ehLfspd; tptrha eltbf;iffis ghjpf;fyhk;. kw;Wk; mgptpUj;jp mile;J tUk; ehLfspy; gy ghuk;gupa mwpT nghJtpy; tof;fj;jpy; ,Uj;jYk; mit FWfpa ,Wf;fkhd Gyikr;nrhj;J rl;lk; %yk; nry;te;j ehLfshy; J\;gpuNahfk; gz;zg;glyhk; vd;gJk; mtjhdpf;fj;jf;fJ. Mf;fTupik rl;lj;jpd; gb VyNt nghJtpy; cs;s xU tplak; (Prior Art) njhlu;gpy; fhg;Gupik Nfhu KbahJ. Mdhy; If;fpa mnkupf;fh Nghd;w rpy ehLfs; ,j;jifa mwpT jk; ehl;bd; vy;iyf;F mg;ghy; fhzg;gLk; NghJ mij mq;fPfupg;gjpy;iy vd;gJ gy ghuk;gupa mwpT ruskha; cs;s mgptpUj;jp mile;j ehLfSf;F ghjfkhdjhFk;. cjhuzkhf 1994 y; INuhg;gpa Mf;fTupik mYtyfj;jhy; If;fpa mnkupf;fhitr;Nru;e;j W.R.Grace & CO kw;Wk; U.S. Department of Agriculture ,dhy; Kd;itf;fg;gll Nfhupf;iff;F ,yq;if ,e;jpahtpy; gutyhf cs;s Ntg;ngz;nzahy; jhtuq;fs; kPjhd gq;if fl;Lg;gLj;Jk; Kiwnahd;wpw;F (hydrophobic extracted neem oil) Mf;fTupik toq;fg;gl;lJk; mjw;F vjpuhf tof;fpl;L gy ru;r;irapd; gpd; mt;thf;fTupik kWf;fg;gl;lJk; Fwpg;gplj;jf;fJ.

NkYk; VyNt MNuhf;fpakhd tu;j;jf Nghl;b Fiwthf cs;s ,e;ehLfspy; ,Wf;fkhd Gyikr;nrhj;J rl;lk; NkYk; ghjfq;fis nfhz;L tuyhk; vd tpthjpf;fg;gLfpwJ. ,e;jstpy; ghjfkhd mk;rq;fs; ,Ug;gpDk; KOJk; kdpj Fyj;jpw;Nf vjpuhdJ vd Fwpg;gpl Kbahjstpw;F Gyikr;nrhj;J rl;lk; NghJkhd rhjfkhd mk;rq;fisAk; jd;dfj;Nj nfhz;Ls;sJ vd;gJ Muk;gj;jpNyNa tpsf;fg;gl;l tplakhFk;. Mf Gyikr;nrhj;J rl;lk; mgptpUj;jp mile;j ehLfSf;F Vw;wthW gad;gLj;jg;glyhkh vd;gijNa mLj;jjhf ghu;f;f Ntz;Lk;.

 WTO kw;Wk; WIPO vd;gdNt Gyikr;nrhj;J rl;lj;ij newpg;gLj;Jk; epWtdq;fshf mike;Js;;sd. ,J njhlu;gpy; Mf;fg;gl;l TRIPS cld;gbf;if mjd; jug;gpdu; midtiuAk; ,t;Tld;gbf;ifapd; mbg;gilapyike;j epajpr;rl;lj;ij cUthf;fp mKy;gLj;Jk; flg;ghl;il muRfSf;F tpjpf;fpd;wd. ,t;Tld;gbf;if mgptpUj;jp mile;j ehLfspdJk;> mgptpUj;jp mile;J tUk; kw;Wk; mgptpUj;jp Fd;wpa ehLfspd; nghUshjhu rkdpiyapd;ikia fUj;jpw;nfhz;L mjd; mKy;gLj;jypy; rpy nefpo;Tj;jd;ikfis nfhz;Ls;sd. ,jd; gb mgptpUj;jp Fd;;wpa ehLfs; ,t;Tld;gbf;ifapd; Vw;ghLfis mKy;gLj;Jtjw;fhd fhytiuaiw Vidatw;iw tpl mjpfkhf toq;fg;gl;Ls;sJ.

Muk;gj;jpy; mgptpUj;jp Fd;wpa kw;Wk; mgptpUj;jp mile;J tUk; ehLfs; Gyikr;nrhj;J rl;lj;ij Vfhjpgj;jpa jdpAupikapd; fUtpahf Nehf;fpDk; jw;NghJ jk; epiyNgz; mgptpUj;jpapd; topKiwahf Nehf;Fk; tpjj;jpy; mt; mgpg;gpuhaj;jpy; khw;wk; Vw;gl;Ls;sij mtjhdpf;f KbfpwJ.

·         Compulsury licensing vd;nwhU nghwpKiw ,Uj;jy; tsu;Kf ehLfSf;F Gyikr;nrhj;J mKy;gLj;jypd; ghjq;fis Fiwf;fty;y xU tplakhFk;. mjhtJ ,jd;gb epahakhd fhuzj;jpd; mbg;gilapy; xUtuJ Mf;fTupikia kl;Lg;gLj;j muRf;F KbAk; vd;gNjhL ehl;bw;F eyd; gaf;Fk; tpjj;jpy; Fwpj;j nghUis Fiwe;j tpiyf;F tpw;gid nra;a VJtha; eltbf;iffs; Nkw;nfhs;sTk; KbAk;.

·         NkYk; tpje;Jiuf;fg;gLk; xUtplakhtJ tpj;jpahrg;gLj;jg;gl;l tpiyfis ghtpj;jyhFk; (Differential Pricing). cjhuzkhf ,jd; %yk; xNu kUe;JfSf;F tsu;r;rpaile;j ehLfspy; xU tpiyAk; tsu;Kf ehLfspy; xU tpiyAk; Ngzg;glyhk;.
·         Mf;fTupik tpz;zg;gq;fspy; fz;Lgpbg;gpw;F %ykhaike;j gUg;nghUspd; Gtpapay; epiyaj;ijAk; ntspg;gLj;JkhW Ntz;bd; mgptpUj;jp mile;J tUk; ehLfs; cj;Njrpf;fg;gl;Ls;s Mf;fTupikahdJ jk; cupikfis kPWtjhapUg;gpd; cld; eltbf;iffs; vLf;ff;$bajhf ,Uf;Fk;.

·         cupa Kiwapy; jj;jk; ehl;bw;F Vw;;wthW ,r;rl;lj;ij mKy;gLj;Jtjd; %yk; ghuk;gupa mwpT> ghuk;gupa fyhrhu ntspg;gLj;Jiffs; kw;Wk; fpilf;f ,Uf;Fk; kugZ tsq;fs; cupa Kiwapy; ghJfhf;fg;glyhk;.

,yq;if gw;wpa xU Nehf;F
,yq;ifapd; 2003 k; Mz;L 36k; ,yf;f Gyikr;nrhj;J rl;lk; TRIPS cld;gbf;iff;F ,yq;if xU jug;gpdu; vDk; tifapy; mjd; Vw;ghLfis cs;thq;fp cUthf;fg;gl;ljhFk;. ru;tNjr juhjuq;fis ek; ehl;bw;F Vw;wtpjj;jpy; cs;thq;f Ntz;ba flg;ghl;il ,r;rl;lk; ngUkstpw;F epiwNtw;wpAs;sJ vdyhk;. rpy Vw;ghLfis cjhuzj;jpw;F mtjhdpg;gpd; Fwpg;ghd Vw;ghlhf Mf;fTupikf;F kl;Lg;ghLfis tpjpf;Fk; gpupT 86 I Fwpg;gplyhk;. ,jd; cggpupT 2(,) MdJ gzpg;ghsu; ehafk; Njrpa ghJfhg;G> Cl;lr;rj;J> Rfhjhuk; my;yJ Njrpa nghUshjhuj;jpd; NtW Kf;fpakhd Nehf;fq;fSf;fhf tpje;Jiuf;fg;gl;l elgbKiwfis Njitg;gLj;jhJ Fwpj;j fz;Lgpbg;gpd; ghtidf;F fl;lha mDkjpia nghJ mf;fiwapd; mbg;gilapy; xUtUf;F toq;fyhk; vd;fpwJ. ,q;F Nehf;fq;fs; kpfTk; gue;jstpy; nghUs;Nfhlg;glf; $bajhf ,Uj;jy; ,yq;if Nghd;wnjhU mgptpUj;jp mile;J tUk; ehl;bw;F rhjfkha; mikaf;$banjhU tplakhFk;. mNj Nghy; TRIPS rkthaj;jpy; Mf;fTupikf;F cupj;Jila rpyTk; ekJ epajpr;rl;lj;jpy; Mf;fTupik ngwg;glKbahJ vd ntspg;gilahf kWf;fg;gl;Ls;sik Fwpg;gplj;jf;fJ.

TRIPS  cld;gbf;ifapy; Plants and animals other than micro-organisms, and essentially biological processes for the production of plants and animals other than non-biological and microbiological processes.” vd;Wk; ekJ epajpr;rl;lk; plants ,animals and other micro organism other than transgenic micro organism and essentially biological process for the production of plants and animals other than the non-biological and microbiological processes
vd;Wk; Fwpg;gpLtJ Mf;fTupik Nfhuf;$ba gug;ngy;iyia Fiwg;gjhf ekJ epajpr;rl;lk; miktij njspTWj;JfpwJ. mgptpUj;jp mile;J tUk; ehL vDk; tifapy; ehk; ,Wf;fkhd Gyikr;nrhj;J rl;lj;ij nfhz;bUg;gJ ekf;F ghjfkhaikayhk;.

KbTf; Fwpg;Gf;fs
                               
Gyikr;nrhj;J rl;lk; nghUspay; rkj;Jtk; ,y;yhj epiyapy; ru;tNjr juhjuj;ij nfhz;bUg;gJ mgptpUj;jp mile;J tUk; ehLfSf;F ghjfkhdNj vdpDk; KOJk; kdpj Fyj;jpw;F vjpuhd xU rl;l nghwpKiw vd fUj KbahJ vd;gNj Vw;fg;glf;$ba nghJthd fUj;jhFk;. J}uNehf;fpy; ghu;g;gpd; ePz;l fhy nrad;Kiwapy; tsu;Kf ehLfspd; mgptpUj;jpf;Fk; $l VJthd fhuzpahf ,ij gad;gLj;jyhk; vd;gJ njspthfpwJ. MapDk; tsu;r;rpaile;j ehLfs; Ntz;LtJ Nghd;w NkYk; ,Wf;fkhd rl;lg;gug;G cz;ikapy; tpUk;gj;jFe;jjy;y vd;gJTk; Fwpg;gplj;jf;fJ. vt;thnwdpDk; tsur;rpaile;j ehLfSk; gy;Njrpa $l;Lj;jhgdq;fSk; tsu;Kf ehLfspy; Gyikr;nrhj;J njhlu;gpyhd Gjpa juhjuq;fis mKy;gLj;Jtjw;F  NghJkhd njhopDl;g> epjp cjtpfis toq;fNtz;Lk; vd;gNjhL ,it MNuhf;fpakhd tu;j;jf Nghl;bia ikag;gLj;jpajhAk; mtu;fspd; epiyNgz; mgptpUj;jpia fUj;jpwpnfhz;ljhfTk; mikaNtz;Lk; vd;gJ mtrpakhFk;.




Wednesday, 5 March 2014

புத்தளம்- பாலாவி வீதி தொடர்பான சுற்றாடலியல் ஓர் சட்ட நோக்கு



புத்தளம் – பாலாவி தொடர்பில் சுற்றாடற் காரணங்களை காட்டி அவ்வீதியை மூடும் பணியை செய்ய சிலர் முயற்சிக்கின்ற போதும் சர்வதேச சுற்றாடற்சட்டம் (International Environmental Law) மற்றும் தேசிய சுற்றாடற் சட்டம் (National Environmental Law) ஆகியவற்றின் கீழ் எம்மால் அவ்வீதிக்கான பயன்படுத்ததகு பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்று வாதிட்டு இவ்வாக்கம் வரையப்படுகின்றது. ஆனால் இவ்வாக்கம் சட்டரீதியாக வாதிடுகிறதே தவிர பௌதீகரீதியாக அல்ல என்பதை வாசகர்கள் கவனமெடுப்பார்கள் என வரைந்தோன் எண்ணமிட்டிருந்தான்.



இன்று மனிதன் விஞ்ஞான மேம்பாடும், துரித அறிவுப்பொருளாதார வளர்ச்சியும் மனிதனை இயற்கைத்தாயின் அரவணைப்பில் இருந்து துாரவிலக்கி கொண்டே போகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. இயற்கையில் இருந்து தன்னை வேறுபடுத்தும் மனிதன் அதை தாக்க தொடங்குகின்றான். விளைவாக இயற்கை அதன் சீற்றத்தை பல்வேறு கோர வழிகளில் மனித இனத்தின் மீது கட்டவிழ்த்து விடுகின்றது. இந்த இயற்கை- மனித உறவை மேம்படுத்த அல்லது சீராக்க சட்டம் சமூகத்தை நெறிப்படுத்தும் விதிகளின் தொகுப்பு எனும் ரீதியில் தவையிட வேண்டிய தேவைப்பாட்டிற்குள்ளாகின்றது.

சுற்றாடற் சட்டம் என்றால் என்ன எனும் வினாவிற்கு பதிலிறுப்பதானது எந்த தேர்ந்த சட்டவியலாளருக்கும் கடினமானது. அதன் பரப்பெல்லை மரபு சட்ட வகையறாக்கள் பலவற்றுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையது. அது அரசியலமைப்புச்சட்டம் (Constitutional law), மனித உரிமைகள் சட்டம் (Human Rights Law) , நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் (Consumer Protection Laws) , நிர்வாகச்சட்டம் (Administrative Law) , குற்றவியற் சட்டம் (Criminal Law) , காணிச்சட்டம் (Land Law) மற்றும் பொது சுகாதார சட்டங்கள் (Public health Law) என்பவற்றுடன் பின்ணிப்பிணைந்துள்ளது.

சர்வதேச ரீதியில் சுற்றாடலை பாதுகாக்கவென பல்வேறு நாடுகள் பல
மாநாடுகளை நடாத்துகின்றன. ஒவ்வொரு மாநாடுகளிலிருந்தும் இறுதியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அத்தீர்மானங்களை பங்குபற்றிய நாடுகள் தமது தேசிய சட்டவாக்கங்கள் மூலம் அமுல்படுத்த கடமைப்பட்டவையாகின்றன.

இதில் குறிப்பிட்டு கூறக்கூடிய முதலாவது கருத்தமர்வு 1972ஆம் ஆண்டு Stockholm எனுமிடத்தில் நடைபெற்ற கருத்தமர்வாகும். இது மனித சுற்றாடலிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் கருத்தமர்வு (The United Nations Conference on the Human  Environment) எனவும் அழைக்கப்படுகின்றது.

இதன் தீ்ர்மான வெளியீட்டு பிரிவறிக்கையின் கொள்கை 21படி நாடுகள் தமது நாட்டு இயற்கை வளங்களை தமது தேவைகட்காக தமது சுற்றாடற் கொள்கைகளுக்கேற்ப பயன்படுத்த முடியும் என்பதை ஐக்கிய நாடுகள் பட்டயம் மற்றும் சர்வதேச சட்டங்களின் படி உறுதிப்படுத்துகின்றது.

States have, in accordance with the charter of the United nations and the prilciples of international law, the sovereign right to exploit their own resources. Pursuant to their own environment policies.

அத்தோடு கொள்கை 22 படி  சுற்றாடல் மாசடைதலால் ஏற்படும் பாதிப்புக்களில் பாதிக்கப்படுவோர்க்கு குறிப்பிட்ட அரசுகள் ஏற்புடைய நட்டஈடுகளை வழங்க வேண்டும் எனவும் கூறுகின்றது. ஆனால் எந்த கொள்கையோ அல்லது பிரகடனமோ அபிவிருத்தி என்ற ஒன்று இடம் பெறவே கூடாது என கூறவில்லை.

அத்தோடு சுற்றாடல் சட்டத்தில் மிக முக்கியமாக சில கொள்கைகள் உள்ளன. அக்கொள்கைகளில் முதன்மையானது நிலைபேண்தகு அபிவிருத்தி கொள்கை {Doctrine of Sustainable Developmet}  என்பதாகும். இக்கொள்கை பற்றி முன்னைநாள் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதி வீரமந்திரி அவர்கள் சர்வதேச நீதிமன்றில் (International Court of Justice) உதவி தலைமை நீதிபதியாக கடமை ஆற்றிய போது Hungarey V Sovakia எனும் வழக்கில் வழங்கிய தீர்ப்பின் சாரத்தை கீழே தருகின்றேன்.

The Court must hold the balance even between environmental considerations and the developmental considerations raised by the respective parties’.  

அதாவது சுற்றாடற்பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவற்றிற்கு இடையே ஓர் சமநிலை பேணப்பட வேண்டுமே ஒழிய அபிவிருத்தி நடவடிக்கையே கூடாது என்பதாகாது.

மேற்குறிப்பிட்ட வழக்கில் சொல்வாக்கியா எனும் நாடு ஹங்கரி நாட்டின் தனது எல்லை அருகில் ஓர் நீர் அணையை நிர்மாணிக்க தொடங்கியது. ஆனால் ஹங்கரி இதனால் தனது நாட்டு சுற்றாடல் பாதிக்கப்படும் என சர்வதேச நீதிமன்றில் வாதிட்டது. இப்பிரச்சனை தொடர்பான தீர்வினை அறிவுறுத்தும் போதே நீதிபதி மேற்கண்ட கூற்றினை தெரிவித்திருந்தார். அவ்வாறு சூழலுக்கு எதுவித தாக்கமும் இன்றி மட்டுமே அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் அது யதார்த்தத்தில் என்றுமே சாத்தியப்படாது.

இதே சட்டநிலை இலங்கையிலும் முற்றீர்ப்புக்களாக (Judicial Precedent) உச்ச நீதிமன்றிலும் உண்டு. அதை விட இலங்கையின் பல சுற்றாடற் பாதுகாப்போடு சம்மந்தப்பட்ட சட்டவாக்கங்கள் இயற்கை வளங்களை விகித அடிப்படையில் பயன்படுத்தல் (Rational Exploitation) எனும் பயன்பாட்டடிப்படையை வழங்கியுள்ளன. உதாரணமாக சுற்றாடற் பாதுகாப்பை மேம்படுத்தும் முகமாக அமைக்கப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையை ஸ்தாபித்த சட்டமான National Environamtal Act No 7 of 1980 ஆனது அதன் பிரிவுகள் 18,19,20 மற்றும் 21 ஆகியவை ஊடாக இந்நிலையை உறுதிப்படுத்துகின்றது.

மேலதிகமாக இலங்கையின் மிக பிரபல சுற்றாடலியல் வழக்கான எப்பாவல வழக்கு என்று அழைக்கப்படுகின்ற Bulankulame V The Secretary, Ministry of Industrial Development and others (2000) வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி அமரசிங்க தனது தீர்ப்பை பின்வருமாறு எடுத்துரைத்தார்.

Undoubtedly, the state has the right to exploit its own resources pursuant, however to its own environmental and developmental policies”

அதாவது நீதிபதி வீரமந்திரி கூறியதையெ இவரும் வேறு சொல்லாடல் மூலம் கூறியுள்ளார். இதே வழக்கில் எந்த இயற்கை பாதிப்பான அபிவிருத்தியும் வறுமை ஒழிப்பு எனும் தொனிப்பொருளின் கீழ் நியாயப்படுத்த கூடியதே !

சுற்றாடலியற் சட்டத்தின் படி Polluter Pays Principle என்பது சுற்றாடலை மாசுபடுத்தியோன் அதை நிவர்த்திக்கும் வழியை காண வேண்டுமென்பதாகும். அவ்வகையில் இப்பாதை அமைப்பால் ஏற்படும் சுற்றாடற் ஊறுகட்கு யாராவது முகம் கொடுத்து இருப்பின் அவர்கள் அதற்கு தகுந்த இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும். இது இந்திய வழக்கான Indian Council for Enviro-Legal Action and others V Union of India மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இலங்கை சட்டங்களின் படி  ஓர் கணக்கெடு சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தும் ஓர் அபிவிருத்தி திட்டமானது சுற்றாடற் தாக்க மதிப்பீட்டை (Environmental Impact Assessment) செய்ய வேண்டடியது அவசியமாகும். சில சந்தர்ப்பங்களில் இதற்கு மேலதிகமாக சமூக தாக்க மதிப்பீடும் (Social Impact Assessment) கோரப்படுவதுண்டு. அதன் பின்னரே அத்திட்டத்திற்கான அனுமதி குறிப்பிட்ட சட்டங்கள் வாயிலாக ஸ்தாபிக்கப்பட்ட திணைக்களங்கள் மூலம் வழங்கப்படும்.

இத்தேவைப்பாட்டை வலியுறுத்தும் சட்டங்களாவன
01.National Environmental Authority Act
02.The National Heritage Wilderness Ares Act No 3 of 1988
03.Forest Ordinance of 1907
04.Fauna and Flora Ordinance No 49 of 1993
05.Soil Conservation Act
06. Mines and Minerals Act No 33 of 1992
07.Cost Conservation Act No 57 of 1981
08.Fisheries and Aquatic resources Act No 2 of 1996
09.The Antiquities Act No 24 of 1998

எனவே மேற்குறிப்பிட்ட சட்டங்கள் யாவும், அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் சட்டமுறைமைகளை கடைப்பிடித்து சுற்றாடல் தாக்க தகவளவை கட்டுப்படுத்த வேண்டும் என கூறுகின்றதே தவிர அபிவிருத்தியே வேண்டாம் என தடை செய்யவில்லை. உண்மையில் இயற்கையுடன் தகவளவு கூட முரண்படாவிட்டால் இன்றைய நாகரீக மனித சமூகத்தின் எழுச்சி என்பது சாத்தியப்பட்டிருக்காது. நாம் கற்கால யுகத்தை தாண்டியிருக்கவும் முடியாது.

இன்யைற மனித உரிமைகள் கூட தன்னுள் அபிவிருத்திக்கான உரிமை (Right to Development)  என்பதை ஓர் பரந்தளவு எண்ணக்கருவாக கொண்டுள்ளது. எனவே கனதிபெறா சுற்றாடற் பாதிப்பு எனும் ஒற்றை காரணத்தை காட்டி மறுபக்க நிலைத்தகு பயன்தரு அபிவிருத்தியை தடை செய்வதானது முகத்தளவிலேயே புறந்தள்ளக்கூடியதும் இலங்கையை ஆசியாவின் ஆர்ச்சரியம் மிக்கதாக்குவோம் எனும் தேசபியமன்னியத்திற்கு எதிரானதும் ஆகும்.


Wednesday, 15 January 2014

கணணிக் குற்றங்கள் ஓர் சட்டப் பார்வை


இன்றைய தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தின் மூலம் மனித குலம் அளவிட முடியாத நன்மைகளை அடைந்து வருகின்றமை கண் கூடாக காணும் நாம் அதே சமயத்தில் அதன் அதீரியான பாதக விளைவுகளையும் கேள்விப் படுகின்றோம். சில சமயங்களில் நாம் அதில் பாதிக்கப் படுகின்றோம்.

 ஆனால் பல சமயங்களில் எது பாதிப்பென்று தெரியாமலேயே அதற்கு ஆட்படுகின்றோம். இன்றைய உலகின் இணைய சேவையின் தாராள விஸ்தரிப்பும் பாவனையாளர் இலகு முகத்தளங்களும் இந்நிலைமைகளை நடைமுறை சாத்தியம் ஆக்கியுள்ளன. இந்நிலைமைகட்கு எமது நாடும் விதிவிலக்கானது இல்லை.



இன்று இலங்கையின் வளர்ந்து வரும் தொடர் இணைய தக்கவைப்பு தகைமையும் மற்றும் சமூக வலைத்தளங்களின் அதிகரித்த பாவனையும் கணணிக்குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதில் முக்கிய வகிபாகத்தை கொண்டுள்ளன. சட்டம் மனிதர்களின் சில பிறழ் நடத்தைகளை சட்டத்திற்கு முரண் என்கின்றது. எனவே சட்டத்திற்கு புறம்பானவற்றை தடுக்கவும் நெறிப்படுத்தவும் ஓர் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட சட்டத்தின் அடிப்படைத் தேவை உணரப்படுகின்றது. இலங்கையை பொறுத்தளவில் அவ்வொழுங்கமைப்பை 2007 ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க, கணனிவழிக் குற்றச்சட்டம் வழங்குகின்றது.

இது முகத்தளவிலேயே கணனிக்குற்றங்களை இருவகையாக பிரிக்கின்றது.
01. கணனிக்கு புரியப்படும் குற்றங்கள் ( Offences relating to Computers) 
  02. கணனியின் மூலம் புரியப்படும் குற்றங்கள் (Offences committed using by computers)

கணணிக்கு புரியப்படும் குற்றங்கள் எனும் போது அவை கணணியையோ அல்லது குறிப்பிட்ட வகை தரவு வலைப்பின்னலையோ பாதிக்கும் வகையான செயற்பாடுகளாக அமைய வேண்டும்.

கணணியின் மூலம் புரியப்படும் குற்றங்கள் எனும் போது கணணியை உபயோகித்து வேறோர் குற்றத்தை புரிவது, உதாரணமாக கணணியின் மூலம் துருவலை மேற்கொண்டு வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பதை குறிப்பிடலாம்.

இச்சட்டம் பிரித்தானியாவின் Computer Misuse Act of 1990 ஐ அடியொற்றியே இலங்கையில் உருவாக்கப்பட்டது. இலங்கையில் இதையொற்றி வழக்கு தீர்ப்புக்கள் இல்லை என்ற படியால் மேலைத்தேய வழக்குகள் சிலவற்றை கோடிட விரும்புகின்றேன்.

Gearth V Croos Key, எனும் வழக்கில், பிரபல பாடகர் ஜஸ்டின் பைபரின் காதலியின் Face Book  இன் கடவுச்சொல்லை உடைத்து தகவல்களை திருடிய 19 வயதான இளைஞர் பின்னர் அத்தகவலை ஓர் பிரபல வார இதழிற்கு விற்றார். அவர் மேல் அதிகாரமின்றி கணணியிலுள்ள தகவல்களை கையாண்டமை மற்றும் அதிகாரமின்றி பெறப்பட்ட தகவல்களுடன் ஊடாடியமை எனும் குற்றங்கட்கு தண்டிக்கப்பட்டார்.

ஆனாலும் இலங்கையின் கணணி குற்றச்சட்டம்  முழுவதுமாக ஓர் நிறைவான சட்டஏற்பாடு என்று என்னால் பட்டியலிட்டு விட முடியாது. அதன் நியாயாதிக்கத்தை பற்றி ஆராய்யும் போது பிரிவு இரண்டு ஓர் பரந்து பட்ட அதிகாரத்தை வழங்குகின்றது.

அது கணணி தொடர்பாக குற்றமிழைக்கும் நபர்களோ பாதிக்கப்படும் கணணிகளோ அல்லது குற்றத்திற்கு பயனுறத்தக்க வகையில் பயன்படுத்தப்பட்ட ஏதேனும் சாதனங்களோ அல்லது சேவைகளோ இலங்கையை சார்ந்திருப்பினும் இலங்கைக்கு வெளிப்பரப்பை சார்ந்திருப்பினும் குற்றங்களாக இச்சட்டத்தின் கீழ் நியாயாதிக்கத்திற்கு உட்பட்டு காணப்படுகின்றது. ஆனால் சர்வதேச ரீதியில் இக்குற்றங்களை ஓர் ஒன்றிணைந்த கூட்டு முறைமையின் கீழ் கையாள இலங்கை இது வரை அவ்வாறான ஆக்கபூர்வமான எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை.

இச்சட்டம் ஆனது சாதாரண தண்டனைச்சட்டக்கோவையில் பட்டியலிடப்பட்ட குற்றங்கட்கு அடிப்படை தேவைகளாக வலியுறுத்தப்படும் குற்றமனம் (Mens rea) மற்றும் குற்றச்செயலை (Actus reus) முகத்தளவிலேயே தேவைப்படுத்துகின்றது. அவற்றை நிரூபிக்காது குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிக்க முடியாது. எனவே இதன் மூலம் கணணி குற்றங்கட்கு சிறப்பானதோர் சட்டஏற்பாடு தேவை என உணர்ந்தாலும் எமது பாரம்பரிய சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு சார்பாக்க வேண்டும் எனும் கோட்பாட்டை மீறவில்லை.

இச்சட்டத்தின் பிரிவு  3 ஆனது குற்றமனத்துடன் ஒருவன் தனக்காகவோ வேறொருவருக்காகவோ கணணி ஒன்றையோ அல்லது கணணியில் சேமிக்கப்பட்டுள்ள தகவல் ஒன்றையோ அதிகாரமளிக்ப்படாத வகையில் கையாண்டால் ஓர் இலட்ச ரூபாய் தண்டப்பணமும் ஐந்து வருடங்கள் வரை நீடிக்கப்பட கூடிய சிறைத்தண்டனையையும் பெற உள்ளாக்கப்படுவான். இப்பிரிவின் விரவணப்பகுதியில் கணணி ஒன்றை தொடுவது கூட குற்றம் என கூறப்படினும் குற்றமனம் என்பது சந்தேகத்திற்கு அப்பால் (Beyond Reasonable Doubt) நிரூபிக்கப்படும் வரை யாரையும் குற்றவாளியாக இனங்காண முடியாது. இது பெரும்பாலும் Computer hacking எனும் பதத்தால் தொழினுட்ப ரீதியில் இனம் காணப்படுகின்றது.

அத்தோடு கணணியை அதிகாரமின்றி கையாள்பவன் அக்கையாளுகை வேறோர் குற்றத்தை புரிதலுக்கான தேவைப்பாட்டுடன் தொடர்புடையது என அறிந்து செயற்படின் அவன் ஐந்து வருடம் வரையிலான சிறைத்தண்டனையும் இரண்டு இலட்ச ரூபாய் வரை அபராதமும் செலுத்த நேரிடும். இக்குற்றம் தொழினுட்ப ரீதியில் Computer Cracking என அழைக்கப்படுகின்றது. அத்தோடு கணணியை அல்லது அதிலுள்ள நிரல்களை சேதப்படுத்தல் அல்லது அதன் செயற்பாட்டை மாற்றல் அல்லது பிழையான வெளியீடுகளை தரச்செய்தல் எனும் குற்றங்கட்கு மூன்று இலட்சம் வரையான தண்டப்பணத்தையும் ஐந்து வருட சிறைத்தண்டனையையும் அளிக்கின்றது. இக்குற்றம் கணணி வைரசுகளை பரப்புதல் மற்றும் தரவுகளை அழித்தல் அல்லது மாற்றம் செய்தல் என பரந்து விரிந்த குற்றங்களை உள்ளீர்க்கின்றது. ஓர் சிறப்பான வாதாட்டத்தின் மூலமாக எந்த ஒரு கணணியின் பாற்பட்டு புரியும் குற்றத்தையும் இப்பிரிவின் கீழ் கொணர்ந்து விட முடியும்.

பிரிவு 06 ஆனது முக்கியமாக நாட்டின் பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கான உறுதிப்பாடு  என்பவை பற்றி குறிப்பிடுகின்றது. ஏனெனில் கணணி மூலம் மிக குறைவான நேரத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் விடுவிக்க மடியும். இன்று இலங்கை அரசாங்கம் அனைத்து அரச மற்றும் தனியார் சேவைகளில் இலத்திரனியல் முறைமையை ஊக்குவித்து வரும் இக்கால கட்டத்தில் இவ்வச்சுறுத்தல்கள் மிகவும் பாரதுாரமான விளைவுகளை ஏற்படுத்த வல்லவையாகும். இப்பிரிவின் கீழ் குறிப்பிட்ட அமைச்சின் செயலாளர்கள் நாட்டின் பாதுகாப்பு அல்லது பொருளதாரம் குறித்த நபரின் செயற்பாட்டால் ஆபத்திற்கு உள்ளாகி உள்ளது என நீதிமன்றில் சான்றழிக்க முடியும். ஆயினும் அந்நபருக்கு அக்குற்றத்தை புரிய குற்றமனம் உள்ளதா என தீர்மானிப்பது முழுவதுமாக நீதிமன்றின் கைகளிலேயே உள்ளது. எனவே அமைச்சுகள் தங்கள் தற்றுணிவால் யாரையும் குற்றவாளிகளாக்க முடியாது.

மேலும் இச்சட்டம் அதிகாரமின்றி பெறப்பட்ட தரவுகளை அல்லது தகவல்களை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல், பரிமாற்றல் மற்றும் எவ்விதத்திலாவது ஊடாடல் என்பவற்றை தடுக்கின்றது. இப்பிரிவின் கீ்ழ் நாம் அனைவரும் பொதுவாக தண்டிக்கப்படலாம். அதாவது அனுமதியின்றி தகவல்களை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தல் அத்தோடு முறையில்லா வகையில் தரவிறக்கப்ட்ட வீடியோக்கள் மற்றும் பாடல்களை பயன்படுத்தல் அல்லது அனுமதியோடு பெறப்பட்டவற்றை அதிகாரமின்றி  மீள்பிரதியாக்கம் செய்தல் போன்றவை இப்பிரிவின் படி மூன்று இலட்சம் வரையான தண்டப்பணத்திற்கும் மூன்று வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனைக்கும் உரித்தான குற்றங்களாகும்.

அத்தோடு குறிப்பிட்ட கோப்புக்களின் கடவுச்சொற்களை உடைப்பதற்கான
Pass Word Crackers மற்றும் வன்பொருட்களை பயன்படுத்தல் மற்றும் உற்பத்தி, இறக்குமதி என்பனவும் தடை செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக சீனாவில் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய கடனட்டை வாசிப்பான்களை இறக்குமதி செய்வதோ பயன்படத்துவதோ குற்றமாகும். இவ்வாசிப்பான்களில் ஓர் முறை கடனட்டைகளை புகுத்துவதன் மூலம் கடனட்டை பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து பின்னர் அதை மோசடி செய்ய முடியும்.


அத்தோடு இறுதியாக ஒருவருக்கு ஓர் ஒப்பந்தத்தின் மீது வழங்கப்பட்டுள்ள ஓர் கணணி கையாளுகை அதிகாரத்தை அவர் பிறிதொரு நபருக்கு ஒப்பந்தம் கோரினாலன்றி வழங்க இயலாது. உதாரணமாக வங்கி அதிகாரி தனக்கு அளிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளரின் கணக்குகளை கையாள்வதற்கான கடவுச்சொல்லை பிறிதொரு நபருக்கு வழங்க முடியாது. இங்கு வங்கி உதாரணமாக காட்டப்படினும் அனைத்து தொழில்கட்கும் இது பொருத்தப்பாடுடையது.

அத்தோடு மேற்குறிப்பிட்ட குற்றங்களை புரிய முயற்சித்தல் (Attempt), புரிவதற்கு உதவி செய்தல் ( Abet) மற்றும் புரிய சதி செய்தல் (Conspiracy) என்பனவும் சிறைத்தண்டனையால் தண்டிக்கப்பட கூடிய குற்றங்களாகும்.
  
அத்தோடு இச்சட்டம் விசாரணைகளின் போது அது தொடர்பான கணணிச் செயற்பாடுகள் அவசியமின்றி இடைநிறுத்தப்படுவதை தவிர்ப்பதோடு இலத்தரனியல் நிபுணர் ஒருவரையும் பொலிசாரோடு இணைந்து செயலாற்ற அனுமதிக்கின்றது. அத்தோடு விசாரணையில் உயர் நம்பகத்தன்மை மற்றும் இரகசியத்தகைமை பேணப்படவும் உத்தரவாதமளிக்கின்றது. பெரும்பாலான விசாரணை விடயப்பரப்புகள் நீதவானின் அதிகார பரப்புக்குள்ளேயே வருகின்றன. 

ஆயினும் இச்சட்டத்தின் நியாயாதிக்கம் மேல் நீதிமன்றிற்கே உள்ளது.
இதில் குழப்பம் என்னவெனில் இச்சட்டத்தின் கீழ் வரக்கூடிய பல்வேறு குற்றங்களாக வகையிடப்பட்டுள்ள செயற்பாடுகள் வேறு பல சட்டங்களின் கீழும் குற்றங்களாக பட்டியல் படுத்தப்பட்டுள்ளன. எனவே எச்சட்டத்தின் கீழ் நிகழ்ந்துள்ள குற்றத்திற்கான மூலங்கள் கூடுதலாக பொருந்துமோ வழக்கு தொடுநர் தரப்பு அச்சட்டத்தின் கீழ் வழக்கை முன்னெடுக்க வேண்டும்.

கீழ்வரும் விடயதானங்கள் இலங்கை சட்டப்பரப்பை பொறுத்த மட்டில் கணணிக்குற்றங்கள் தொடர்பில் மாறுபட்ட அணுகுமுறை முக்கியத்துவம் பெறுகின்றது.

01.எவ்வாறு சட்டம் அமைந்திருப்பினும் பயிற்றப்பட்ட ஆளனி மற்றும்    நிறுவன கட்டமைப்பு மேம்பாடு இன்றி அமுலாக்கல் என்பது  சாத்தியமற்றது.

02.கணணி குற்றங்களை கண்டறிய இலத்திரனியல்  சோதனைக்கூடமொன்று அமுலாக்கப்பட வேண்டும்.

03.சர்வதேச கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பில் நிறுவன ரீதியிலான  ஒத்துழைப்பு அவசியம்.

04.முக்கியமாக மக்கள் தங்களது பாதுகாப்பு பற்றி தொடரறா நிலையில்    (Online Surveillance) விழிப்புடன் செயற்படுவது அவசியம்.


மேற்கூறப்பட்ட வழிவகைகள் அமுலாக்ப்படினே கணணியின் பாலான குற்றங்களை கட்டுப்படுத்தல் சாத்தியமானதாக காணப்படும். 

Wednesday, 8 January 2014

உலகின் வினோதமான பாலியற் சட்டங்கள்

1. கொலம்பியாவில், காலி மாநிலத்தில் மனைவி கணவனுடன் மட்டுமே உடலுறவு கொள்ள வேண்டும், அது முதல் முறை நடக்கும் போது மனைவியின் தாய் அறையினுள் தங்கி அதற்கு கண்ணால் பார்த்த சாட்சியாக இருக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது

2.ஒரு ஆண் ஒரு பெண்ணுடனும் அந்த பெண்ணின் மகளுடனும் ஒரே நேரத்தில் உடலுறவு கொள்வது பொலிவியாவில் சாண்டா குரூஸ்சில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

3.
டாப்லெஸ் சேல்ஸ் உமன்கள் இங்கிலாந்தில் லிவர்பூலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், ஆனால் இது மீன்கடைகளில்(tropical fish stores ) மட்டும் தான் இதற்கு அனுமதி

4.
துரோகம் செய்த கணவனை அடித்து கொல்ல மனைவிக்கு சட்டப்பூர்வமான உரிமை உண்டு, ஆனால் வெறும் கையால் தான் அடித்துக்கொள்ளவேண்டும், இந்த விதி இருப்பது ஹாங்காங்கில்

5.
குவாம் (Guam ) நாட்டில் கன்னிப்பெண்களை திருமணம் செய்ய தடை உள்ளது, எனவே பல ஆண்கள் கன்னிப்பெண்களுடன் உறவு கொள்வதை ஃபுல்டைம் ஜாப் ஆக வைத்துள்ளார்கள்

6.
இந்தோனேசியாவில் சுயஇன்பம் மேற்கொண்டு பிடிபட்டால் அபராதம் கட்ட வேண்டும். சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்துகொள்ளுங்கள்

7.
இஸ்லாமியர்கள் உயிரழந்தவர்களின் பாலுறுப்புகளை பார்க்க தடை உள்ளது, எனவே இறந்தவர்களின் பாலுறுப்பின் மீது செங்கல் அல்லது கட்டையை வைத்துவிடுவார்கள்.

8.
பக்ரைனில், ஆண் மருத்துவன் பெண்களின் பிறப்புருப்புகளை சோதனை செய்யலாம், ஆனால் நேரடியாக அதை பார்க்க கூடாது, கண்ணாடி பிரதலிப்பின் வழியாக பார்க்கலாம்.

9.
லெபனாலில், ஆண்கள் மிருகங்களுடன் உறவு கொள்ள அனுமதியுண்டு, ஆனால் உறவு கொள்ளும் மிருகம் பெண்ணாக இருக்க வேண்டும், ஆண் மிருகங்களுடன் ஒரு ஆண் உறவு கொண்டால் அது மரண தண்டனைக்குறிய குற்றம்.

10.
ஆட்டுகுட்டியுடன் உடலுறவு கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதே ஆட்டை அடித்து சாப்பிட்டால் அது மரணதண்டனைக்குறிய குற்றம், இந்த சட்டம் பல மிடில்ஸ் ஈஸ்ட் நாடுகளில் உள்ளது
 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது