Social Icons

Pages

Thursday 20 December 2012

குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல்


நுால் விமர்சனம்


எனக்கு இன்று ஓர் சட்ட தமிழ்ப்புத்தகத்தை பல நாட்கட்கு பின் வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. “குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல்” ( Detection In Criminal Cases ) என்ற அப்புத்தகம் சட்ட தமிழ் வழக்கறிஞர் புலமை வேங்கடாச்சலம் அவர்களை ஆசிரியராக கொண்டது.


முன்னுரையிலேய இப்புத்தகத்தின் சாரத்தை அறிவிக்கின்ற தகமை சிறப்பானது. இன்று நவீன யுகத்தில் பலுகிப் பருகி வருகின்ற குற்றங்களான கொலை , கொள்ளை, பாலியல் வல்லுறவு, ஆட்கடத்தல்கள் போன்ற குற்றங்களயும் அவற்றின் போது குற்றவாளிகள் செய்யும் தவறுகளயும் (தடயங்கள்) எவ்வாறு நீதித்துறைக்கு குற்றவாளிகட்கு எதிராக பயன்படுத்துவதைப் பற்றிய ஓர் தகவற் தொகுப்பாகவே இது அமைந்துள்ளது. சட்டத்தரணி என்ற வகையில் முன்னேற்பாடாக சட்ட மாணவப் பருவத்திலேயே பல்துறை அறிவு பெறுவது புலமைத்துவத்தின் கட்டாயமானதாகும். அந்நோக்கில் குற்றவியல் சட்டங்கள் தொடர்பில் எமது நிரூபிப்பிற்கான படுகைகள் மருத்துவ தொழிலாண்மையுடன் இணந்தவை. ஏனெனில் தடயவியற் நிபுணத்துவம், உடற்கூற்று ரீதியான பொருத்தனைகட்கான நிரூபணங்கள் இல்லாது விடின் பகுத்தறிவு விடயதானத்தில் நடுநிலைப்படுத்த முடியாதவை ஆகி விடும்.

எமது குற்றவியல் நடத்த கோவை ( Criminal Procedure Code ) இன் படி சாட்சியங்கள ஒழுங்கமைக்கவும் அதன மீள் உருவாக்கம் செய்யவும் உறுதிப்படுத்தற் பக்க சான்றுகளை சட்டத்தரணி கையாள்வதின் திரணி தவிர்க்கப்பட இயலாதது. அவ்வகையில் இப்புத்தகமும் சாட்சிகளை ஒழுங்மைக்கவும் நிபுணத்துவ சான்றுகளை சட்டத்தரணிகள் சாதாரண சமூக மனிதனின் பார்வயை விட உய்த்துணர்ந்த கொள்ளவும் இந்த 118 பக்கங்களை கொண்டது மேன்மையானதாகும்.

வெற்றிக்கான கல்வி ஆசிய நாடுகளிலிருந்து காலணித்துவ ஆட்சியில் திட்டமிட்டு கட்டப்படாமல் நிரவப்பட்டது போல் , எமது கல்விக்கான தளமான சட்ட பீடங்களில் இவ்விடயங்கட்கான கற்கை புறத்தொதுக்கப்பட்டமை மனவேதனைக்குரியதே ! இக்குறையை இப்புத்தகம் முகத்தோற்றளவிலாவது பூர்த்தி செய்வது மனத் தேற்றலுக்குரியது.

இனி புத்தகத்தினுள்……..
இப்புத்தகம் மூன்று இயல்களாக தளப்பரப்பின் குறிநலம் கருதி பிரிக்கப்பட்டுள்ளது.

01 இயல் 01 குற்றத்த துப்பறிவதிலுள்ள சிரமங்கள்
02 இயல் 02 தடயங்களைக் கண்டறிதல் ( துப்பறிதல் )
03 இயல் 03 காயங்கள் ( Wounds )

முதலில் குற்றங்களில் துப்பு துலக்கலின் கடினத்தன்மையை  விளக்க பொலிசாரின் சாட்சிய அறிக்கைக்கும் உடற் சடலக் கூறாற்வு அறிக்கைக்கும் இடையே உள்ள பாரிய முரண்பாடுகளை விளக்கியுள்ளது.

(உ+ம்) 1917 கொலை வழக்கில் ஓர் பெண்ணின் அழுகிய உடலம் பாழடைந்த அரண்மனையின் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. அது ஓர் 30 வயது பெண்ணின் சடலம் எனவும் பல்வரிசை சீரானது எனவும் நீண்ட கருங்கூந்தல் உடையவள் என்றும் குறிப்பிட்டிருக்க சடலக்
கூராய்வு அறிக்கை அவளது வயது 60 என்றும் அவளது பற்கள் யாவும் விழுந்த விட்டன எனவும் அவளது கூந்தல் நரத்து நைந்தது என்றும் உறுதிப்படுத்தப்பட்டது.

இரண்டாவது இந்த கடினத்தன்மையை எவ்வாறு நீக்குவது அல்லது ஆதாரத்திற்கும் நிரூபாண்மைக்கும் இடையிலான வித்தியாசத்தை எவ்வாறு குறைப்பது என்பது பற்றியும் எடுத்தியம்புகின்றது. குற்றத்தால் நெறிப்படுத்தப்படும் மூலாதாரங்களைாக இரத்தம், விந்து, உமிழ் நீர், சிறு நீர் மற்றும் மலம் என்பன தடயவியற் நிபுணத்துவத்ததையும் விஞ்சி மருத்துவ எல்லையின் தாக்கத்தை தன்னகத்தே கொண்டது. இதில் இரத்தத்த பற்றி மிக விரிவாக ஆசிரியர் விபரிக்கின்றார்.

 இரத்த பரிசோதனை வகை, பாதுகாப்பாக பரிசோதனைக்கு அனுப்பல், ஆய்வு கூட சோதனையின் பரிசோதனை தன்மை , இரத்த சிதறல்களை வைத்து எவ்வாறு குற்ற பிரயோகத்தின் தன்மையை கணிப்பது என்பது பற்றி பல விடயங்களை பிரயோக ரீதியாக விளக்கியுள்ளது இப்புத்தகம். ஏனெனில் இன்று பல பிரயோகத்தின் போது இரத்தம் சாதாரணமாக குற்றங்கட்கான தடயமாகின்றது. அதை போன்று மற்ற மனித  வெளியாக்கற் வஸ்துகளையும் எவ்வாறு சேகரிப்பது மற்றும் பரிசோதனை அறிக்கைகளின் நம்பகத்தன்மை பற்றியும் இரண்டாம் இயல் விளக்குகின்றது.

மூன்றாம் இயல், காயங்களை பற்றி கலந்துரையாடுகின்றது. உடலியற் குற்றங்கள் யாவுமே வெளி அல்லது உட்காயங்கள் எதுவும் இன்றி குற்றங்கள் நிகழ்வது அசாத்தியம். எனவே காயங்களின் வகைகளை பற்றி மிக விபரமாக இவ்வியல் விபரிக்கின்றது. காயங்கள் சிராய்ப்பு ,உராய்வு, வழுவுண்டது, அழுத்த காயம், இடித்தது, கன்றியது, வீக்க காயங்கள், வட்டுக்காயம்,கீறல் காயம், பொத்தல் காயம், சிதைந்த காயம்,தீக்காயம், கடுகருவி காயம் என வகைப்படுத்த படுகின்றது. அத்தோடு கண்ணாடி உடைவுகளின் நுட்பங்கள், வெப்பமேற்றி நொருக்குதல், பரிசோதனைக்கு சான்றான முறையில் ஆதாரங்களை திரட்டி வகைப்படுத்தல் என பல நடைமுறைப் பிரயோகங்களை இந்நுால் தமிழில் விளக்குகின்றது. அதோடு காயங்கள் மற்றும் தடயங்களை வைத்து உடனிடத்திலேயே அது தற்கொலையா அல்லது படுகொலையா என அனுமான ஊகிப்பிற்கும் அதனால் உடனடி சந்தேக மடக்கல்களுக்கும் ஆன சாத்தியப்பாட்டை விபரிக்கின்றது.

இந்திய நுாலாகையால் இந்திய நீதிமன்ற முறைமையின் கீழ் நீதிமன்றுகட்கான குற்றவியல் நியாயாதிக்க படிமுறையை விபரித்திருப்பது எமது ஒப்பீட்டு தேவைகளை பூர்த்தியாக்கும் என எண்ணுகின்றேன். 

அத்தோடு ஒப்பீட்டு ரீதியில் விலை சமவளவையே பேணுகின்றது. இலங்கை மதிப்பில் (50* 3.75 =190.00) ரூபா 190 ஆகும். இது நிச்சயம் சட்ட மாணவர்கள் அனைவரும் தங்களது பீடத்தவகட்கு அப்பாற் பட்டு வாழ்நாள் முழுவதும் பிரயோசனப் படக்கூடிய ஓர் நுால் ஆகும்.

1 comment:

  1. சிவப்பு சந்தை இ-புத்தகம் தங்களிடம் உள்ளதா??

    ReplyDelete

 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது