எங்கள்
நண்பர் ஒருவர் சூரிய அஸ்தமன வேளையில் “மெக்சிகோ” கடற்கரையில் நடந்து சென்றார். அப்படி
அவர் நடந்த சென்ற போது தொலைவில் ஒரு மனிதனை கண்டார். அவனை நெருங்க நெருங்க, அவன் குனிந்து
எதையோ எடுப்பதும், கடலுக்குள் அதை வீசுவதும் தெரிந்தது.
நமது
நண்பர் அந்த மனிதனை இன்னம் நெருங்கினார். அவன் அலையில் அடித்து வரப்பட்டு கடல் மணலில்
ஒதுங்கியிருந்த நட்சத்திர மீன்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கி கடலுக்குள் வீசுவது தெரிந்தது.
நமது
நண்பருக்கு புதிராக இருந்தது. அவர் அந்த ஆசாமியை அணுகி “குட் ஈவினிங் நண்பரே, நீங்க
என்ன செஞ்சுகிட்டிருக்கீங்க?” என்று கேட்டார்.
“நான்
இந்த மீன்களைப் பொறுக்கி மறுபடி கடலுக்குள் எறிஞ்சுக்கிட்டிருக்கேன். இப்படி இவற்றை
எடுத்துப் போடாவிட்டால் இவை “ஆக்சிஜன்” கிடைக்காமல் செத்துப் போகும்”
“எனக்குப்
புரியுது. ஆனா இது மாதிரி ஆயிரக்கணக்கான மீன்கள் தினமும் இந்தக் கடற்கரையில் இறந்து
கிடக்கும். அவற்றை எல்லாம் உங்களால் கடல் நீருக்குள் எடுத்துப் போட முடியாது. அவை அவை
அவ்வளவு இருக்கு. இந்தக் கடல் பகுதியில் இருக்கிற நுாற்றுக்கணக்கான கடற்கரைகளிலே இது
போல நட்சத்திர மீன்கள் கிடக்கும் என்பது உங்கட்கு புரியலையா ? உங்களால பெரிசா மாற்றத்தை
ஏற்படுத்திட முடியாதுன்னு தெரியலையா ? என்று கேட்டார் எமது நண்பர்.
அவன்
புன்னகைத்தான். குனிந்து ஒரு நட்சத்திர மீனை எடுத்து கடலுக்குள் வீசியபடி சொன்னான்.
“ இந்த ஒரு மீனுக்காவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாமே!
No comments:
Post a Comment