இப்பதிவை முன்னைய ஆங்கிலப்
பதிவோடு சேர்த்து வாசிப்பதன் மூலமே போதிய தெளிவை பெறக்குடியதாக இருக்கும்.
வெளித்தள்ளுகை பதங்கள் என்பது ஒப்பந்தத்தில் ஈடுபடும் இருபகுதியினரில் ஒரு பகுதியினர் தொடர் செயற்பாடுகளின் போது ஏற்படும் ஒப்பந்த மீறுகைகளின் போதும் கவனக்குறைவு நடவடிக்கைகளின் போதும் ஏற்படும் பொறுப்புக்களிலிருந்து தம்மை விடுவித்து கொள்வதற்காக ஒப்பந்த சரத்துக்களில் உட்புகுத்தும் ஓர் பாதுகாப்பு வாசகங்களாகும்.
உ+ம் கடைநிலை உற்பத்தி ஊழியரின் கவனக்குறைபாட்டு இயந்திர தாமதத்திற்கு தாம் பொறுப்பல்ல.
உ+ம்
வெள்ள , நெருப்பு அபாயங்கட்கு தாம் பொறுப்பாளி அல்ல .
இந்த வெளித்தள்ளுகை பதங்கள் எவ்வாறான முறைமையினாலும் ஒப்பந்தத்தினுள் உள்ளடக்கப்படலாம். ஆனால் மற்றைய ஒப்பந்த பகுதி அத்தகைய பதங்களை ஒப்பந்தத்தை ஏற்க முன்னரோ அல்லது ஏற்கும் அந்த நேரத்திலோ கட்டயமாக அறிந்திருக்க வேண்டும்.
வெளித்தள்ளுகை வாசகங்களில் மூன்றாம் பகுதியினரின் நிலைப்பாடு
அதாவது வெளித்தள்ளுகை வாசகங்களை வைத்து ஒப்பந்தத்தில் ஈடுபடாத எந்த ஒரு மூன்றாம் நபரும் ஓர் வகிபாகத்தை ஒப்பந்த தரப்பினரிடைய வகிக்க முடியாது என Cosgrove V Horsfull வழக்கில் தீர்க்கப்பட்டது. ஆனால் பின்னைய வழக்கான Elder,Dempster & Co V Paterson
Zochonis & Co இதை புறத்தொதுக்கி மூன்றாம் தரப்பினர் வெளித்தள்ளுகை வாசகங்கள் ஊடாக நன்மையை அனுபவிக்கலாம் என்றது. ஆனாலும் இன்றைய பிணிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் பிரபுக்கள் சபையால் வழங்கப்பட்ட தீர்ப்பான Scrottons, Ltd V Midland silicons அமைகின்றது. இது மூன்றாம் திறத்தவரின் தலையீட்டை முற்றாக நிராகரித்ததுடன் திரும்பவும் நீதித்துறை படிமுறையை Cosgrove வழக்கின் நியாயத்திற்கு இட்டுச் சென்றது போல தோற்றமளிக்க வைத்தது. ஆனாலும் பரீட்சை நோக்கின் போது Elder வழக்க சுட்டி குறிப்புக்கள அளிப்பது உங்கள் பக்க நியாயத்தை மேலும் வலுவுள்ளதாகும்.
ஏனெனில் சட்டத்தை பொறுத்த மட்டில் எந்த அதி திறமைசாலியாலும் இதற்கு இது தான் தீர்வு அல்லது விடை என அறுதியிடமுடியாது. ஏனெனில் அவ்வாறு அறுதியிட அனுமதி அளிக்கப்படின் சட்டம் சீர்தன்மை என்ற கோட்டில் விரைவாக நீண்டிருக்கும் ஆனால் சட்ட வளர்ச்சி என்ற கோட்டின் நிலை பரிதாமமாக பின்தங்கி சிறுத்திருக்கும். இரு கோடுகளும் சமாந்தரமாக நீண்டிருந்தால் மட்டுமே சமூகம் என்ற வண்டில் தொடர்ந்து பயணிக்க முடியும் . அல்லாது விடின் ஒரு கோடு முடியும் இடத்தோடு வண்டியும் நிற்பது தவிர்க்க இயலாதது.
அடிப்படைவாத மீறல்
அதாவது ஓர் ஒப்பந்த்தின் அடிப்படையை மீறுவது அந்த மீறலால் அவ்வாப்பந்தம் வறிதாகுமா அந்த மீறல புரிகின்ற ஒப்பந்த தரப்பிற்கு வெளித்தள்ளுக வாசகங்கள் பாதுகாப்ப அளிக்குமா அல்லது அளிக்காதா என்பத பற்றி இப்பந்தி ஆராய்கின்றது. ஆனால் எனது தேடலை பொறுத்த மட்டில் இன்று வரை நீதிமன்ற பிணிக்கும் தீர்ப்புகளில் ஒரு சீர்தன்மையை என்னால் இவ்விடயத்தில் காண முடியவில்ல. எமது நாட்டில் ஒப்பந்த சட்டத்தை அமுலாக்க என்று எந்த சட்ட மூலமும் இல்லை. எனவே நீதிமன்றுகள் ஆங்கில வழக்கு தீர்ப்புகளை வைத்தே முடிவுகட்கு வர வேண்டியுள்ளது. ஆனால் வெளிநாட்டு தீர்ப்புக்கள் எமது மன்றுகளை பிணிக்கும் தீர்ப்புகளாக இன்றி வெறும் ஊக்கி தீர்ப்பக்களாகவே கருதப்படும் என்பதை இப்பொழுதில் உங்களிடம் நினைவூட்ட விரும்புகின்றேன்.
அடிப்படை மீறல் இரு வகுதிகள் ஊடாக இடம் பெறலாம்.
01.ஒரு குறிப்பிட்ட வாசகத்தை மீறல்.
02.ஒட்டு மொத்த ஒப்பந்தத்தையே அழிக்கும் பின்விளைவு கொண்ட மீறல்கள்.
மேற்கூறிய இரு வழக்குகளிலும் நீதிமன்றமானது அடிப்படை மீறல் ஒன்று ஏற்பட்டு அதன் விளைவாக ஏற்படும் பொறுப்பிலிருந்து பொறுப்பாக வேண்டிய தரப்பை ஒப்பந்தத்தில் காணப்படும் ஒரு வெளித்தள்ளுகை வாசகம் காப்பாற்றாது எனும் நிலைப்பாட்டை எடுத்தது. அதாவது சுருங்க கூறின் என்ன வகையான பாதுகாப்பை அளிக்க கூடிய வாசகங்கள் ஒப்பந்த சரத்துகளில் காணப்பட்டாலும் அவை ஓர் ஒப்பந்த அடிப்படை மீறலின் போது எவ்வகையான பாதுகாப்பையும் அளிக்க மாட்டாது என்பதாகும்.
ஆனால் இவ்விதி காலத்தின் தேவை கருதி நேரெதிராக மாற்றப்பட்டது. அதற்கு உதாரணமாக Photo Production Ltd V Securicor
transport Ltd (1980) எனும் வழக்கில் பிரபுக்கள் சபையால் மாற்றி அமைக்கப்பட்டதன் காரணம் சமூக, பொருளாதார மாற்றமும் வளர்ச்சியும் தான். அதாவது ஒப்பந்த தரப்பினர் சுமூகமாக தமது தற்றுணிபின் பேரில் பணியாற்றுவதற்காகவும் பொருளாதார நலன்களின் அபிவிருத்தி மற்றும் நலன் தொடர்பாகவும் நீதிமன்றிற்கு உள்ளதாக கருதப்பட்ட இடையீட்டாளர் பதவியை அகற்றுவதற்காகவுமே இத்தீர்ப்பானது கருத பட வேண்டியுள்ளது. இதன் போது மன்றானது எந்த வகையான மீறலும் அது அடிப்படை மீறலாக அமையினும் கூட ஓர் தெளிவான வெளித்தள்ளகை வாசகம் தவறிழைத்த தரப்பிற்கு வாசக அளவிற்கு பாதுகாப்பை வழங்கும் என வெளிப்படையாக தீர்த்தது.
இப்பகுதியை எழுதும் போது ஆங்கில உட்புகுத்தல் தவிர்க்க முடியாததாயிற்கு தாய் மொழியில் நேரடி உறுதிப்படுத்தப்பட்ட மொழி பெயர்ப்புக்கள் இன்மையும் புலமைத்துவ வேற்று கருத்துக்ளும் இவ்வாறு என்னை இவ்வாறு செய்ய உந்தின. கீழுள்ள Comment பெட்டியிலா அல்லது முகநுாலிலா உங்களது கருத்துக்களை பகிர்வதன் மூலம் நான் எனது தவறுகளை திருத்தி கொள்ளவும் எது தேவை எந்த மாற்றம் அவசியம் என்பதையும் உணரவும் வாய்ப்பாக அமையும் என எண்ணுகின்றேன். மேலதிக விபரங்கட்காக இணைய அஞ்சல் மூலமா அல்லது கருத்து பகிர்வு மூலமா பின்னுாட்டுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
No comments:
Post a Comment