Social Icons

Pages

Friday 26 August 2011

குற்றத்தின் உட்கூறுகள் ஓர் அறிமுகம்



சுயாதீன வெளிப்படை நோக்கில் குற்றம் எனும் செயல் சமூகத்தால் ஒழுக்க ரீதியாகவோ அல்லது அங்கீகரீக்கப்பட்ட அரசின் சட்ட ஏற்பாடுகளாலோ தடுக்கப்பட்ட செயல்களாக காட்ட முடியும். இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில் எல்லா ஒழுக்காற்று குற்றங்களும் சட்டக்குற்றங்களாகாது அதே போல் எல்லா சட்டக்குற்ங்களும் ஒழுக்காற்று குற்றங்களாகாது.

உ+ ம்  மத ஆராதனைக்கு செல்லாது புறக்கணித்தல் ஒழுக்க நெறி குற்றமாகும். ஆனால் இச்செயற்பாடு சட்டப்படி தடுக்கப்பட்ட ஒன்றல்ல.

உ +ம்  ஈருளுளியில் தலைக்கவசம் அணியாது செல்லல் சட்டப்படி குற்றமாயினும் ஒழுக்க நெறிகளின் படி தடை செய்யப்பட்ட ஒன்றல்ல.

குற்றங்கள் என குற்றச்சட்டத்தின் கீழ் வரைவிலக்கணப்படுத்தப்ட்டுள்ள செயற்பாடுகள் யாவும் ஒரு தனி மனிதனுக்கோ அல்லது குழுவிற்கோ ஏன் அரசிற்கு எதிரான செயற்பாடுகட்கு ( ACTS ) மட்டும் மேற்கோள்காட்டப்படாமல் சட்டம் குறிப்பிட்ட ஒருவனுக்கு விதித்த பணியை செய்யாமல் விடுவதை  (OMMISSION ) கூட குற்றமாக மேற்கோளிடும்.

இன்றைய நவீன கால குற்றச்சட்ட வரலாற்றடிப்படைகளை பகுப்பாய்வு செய்யும் போது சமயக்கோட்பாடுகள் சட்டத்தின் தவிர்க்க முடியாத அங்கங்கள் என்பது புலப்படும். 13ம் நுாற்றாண்டில் சமய விதிகளே சட்டமாக விளங்கியதென்பதோடு அவை அன்றாட விஞ்ஞான வளர்ச்சி வேகத்தை விட பன்மடங்கு பரந்த தன்மையில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் தொடர்ச்சியான கால மாற்றத்தில் இன்றைய நிலைமையை நோக்கும் போது விஞ்ஞான வேகத்தை கட்டுப்படுத்தும் நிலையில் சட்டமோ அதன் பரப்பெல்லைகளோ இல்லை என்பது கண்கூடு. உரோம பேரரசர்கள் கிறிஸ்தவ மத தலைவர்களாகவும் மத தலைவர்கள் படைத்தலைவர்களாகவும் ஆட்சி செலுத்திய காலம்.

இனி இன்றைய குற்றச்சட்ட நிலை பற்றி ஆராய்வோம்.

குற்றச்சட்டம் எப்போதும் தனி மனிதனுக்கோ குழுவிற்கோ இடையிலான சட்ட மீறுகைகளாக இருப்பினும் வாதி எப்போதும் நாட்டினுடைய அரசாகவே காணப்படும். அரசிற்காக சட்டமா அதிபர் நீதி மன்றில் பிரசன்னமாவார். குற்றவியல் வழக்குகள் பின்வருமாறு தலைப்பிடப்படும். ( இங்கு A , B யும் குற்றவாளிகளாக சுட்டப்படின் )

A V A.G
B V A.G

தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான அத்துமீறல்கள் ஆயினும் அரசு தலையிட காரணம் இக்குற்றங்கள் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக அமையும். எவ்வாறெனில் ஒரு கொலைக்குற்றத்தில் குற்றவாளியை அரசு தண்டிக்காவிடின் ஏனையோரும் கொலை செய்ய எத்தனிப்பர். இதனால் சமூக சீரழிவு ஏற்பட்டு நாடு அழிவுப்பாகையில் செல்வது வதிர்க்க முடியாததாகிவிடும். சமூக நல அரசுகளின் மூல பணியே சமூக நீதியாகும்.

குற்றம் எனும் தோற்றப்பாட்டின் காட்சிப்படுத்தப்படும் விளைவு குற்றவாளியின் செயல் அதாவது குற்றச்செயல் (Wrongful Act ) ஆனால் சட்டம் குற்ற மூலகங்களை இரண்டாக வகுக்கின்றது.

1.குற்ற செயல் Actus Reas ( WRONGFUL ACT )
2.குற்ற மனம் Mens rea   ( GUILTY MIND )

இவை இரண்டும் ஒரு மனிதன் குற்றவாளி என தீர்ப்பளிக்க அத்தியாவசியமானவை என 1984 ஆம் ஆண்டு வழக்கான REX V FACKE எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் இங்கு ஒன்றில் இருந்து இன்னோர் தேவைப்பாட்டை வேறுபடுத்தி வெளிப்படுத்துவது சட்டவியலாளர்கட்கு விடப்பட்ட சவாலாகும். 

Saturday 13 August 2011

விரல் ரேகைகளே இல்லாத அதிசய மனிதர்கள்




விரல் ரேகை ஒருவரின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. ஒருவருக்கு உள்ளது போல விரல் ரேகை இன்னொருவருக்கு இருக்காது.
அதனால்தான் மனிதர்களை அடையாளம் காண எல்லா நாடுகளும் விரல் ரேகைகளை ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றன. விரல் ரேகையே இல்லாமலும் சிலர் இருக்கின்றனர்.
மிகமிக அரிதாக அப்படி நடப்பதுண்டு. ரேகை இல்லாமல் இருப்பது ஒருவகை தோல் நோய் என்கின்றனர் மருத்துவர்கள். விரல் ரேகை பற்றிய ஆராய்ச்சியை "டெர்மடோகிளிபியா" என்று அழைக்கின்றனர்.
இஸ்ரேலின் டெல்அவிவ் நகரை சேர்ந்த தோல்நோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் இலி ஸ்பீரிச்சர் தலைமையிலான குழுவினர் விரல் ரேகை இல்லாமல் இருப்பதற்கு காரணமான மரபணு மாற்றத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரை அமெரிக்க மனித மரபணுக்கள் இதழில் வெளியாகி உள்ளது. சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பிறந்ததில் இருந்தே விரல் ரேகைகள் இல்லை.
அனைவரும் டெர்மடோகிளிபியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களை மருத்துவர்கள் இலி ஸ்பீரிச்சர் குழுவினர் ஆய்வு செய்து சில மருத்துவ உண்மைகளை கண்டறிந்துள்ளனர்.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உள்ளங்கை, விரல், கால் விரல்கள், பாதம் எல்லாமே வழுவழுவென இருக்கின்றன. விரல் ரேகை பதிவு செய்தால் கோடுகள், வட்டங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும்.
குறிப்பிட்ட ஒரு மரபணு மாற்றம் தோல் பகுதியை மட்டும் பாதிக்கிறது. மற்ற உறுப்புகளை பாதிக்காது. அதுபோல் விரல் ரேகைகளை மட்டும் பாதிக்கும் புரோட்டீன் எது என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார் மருத்துவர் இலி.
சுவிஸ் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவுக்கு சென்ற போது விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் பிடித்துக் கொண்டனர். அவருக்கு விரல் ரேகை இல்லாததால் தீவிரவாதியை போல் நினைத்து அவரிடம் கேள்விகள் கேட்டு துளைத்தது குறிப்பிடத்தக்கது.

Monday 8 August 2011

Ragging and Legal proceeding in Srilanka………


 Legislature have the main role in the society to maintain the Law and order and build the non-violence community. “Ragging” is a form of abuse on newcomers to educational institutions in Sri Lanka

In 1998, the parliament of Srilanka unanimously passed the ‘Prohibition of ragging and other forms of violence in Educational Institutions Act, No 20 of 1998’. It is identified as an Act to eliminate ragging and other forms of violence, and cruel, inhuman and degrading treatment, from Educational Institutions.

In terms of the Act, “Ragging” means ‘any act which cause or is likely to cause physical or psychological injury or mental pain or fear to a student or a member of the staff of an educational institution’
Forms of the ragging according to the Law

Criminal intimidation
Hostage taking
Wrongful restrain
Unlawful confinement


Provision of the act stated that
Any person, who commits or participates in ragging within outside of the Educational Institution, shall be guilty of an offence under this act.

 If a sexual harassment or grievous hurt is caused whilst committing ragging the person is liable to imprisonment for a term of not exceeding 10 yrs.

If the victim is threatened to cause injury to the person, reputation or property of some other person of whom the victim is interested, with the intention of causing fear in the victim compelling the victim to do any act which the victim is not legally required to do, or to omit to do any act which the victim is entitled to do, shall be guilty of an offence and on conviction be liable rigorous imprisonment for a term not exceeding 5 yrs.

Any person restricting the personal liberty and the freedom of movement of any other person shall be guilt of an offence and be liable to rigorous imprisonment for a term of 7 years.

The provision of this Act shall be made effective in addition to the provisions of the penal Code and the Convention against Torture and Other Cruel. Inhuman regarding Treatment or Punishment Act No.22 of 1994.

This statute clearly shows the government’s objective to totally remove the inhuman and barbarian act of ragging from Srilankan Educational Institutions. University administration authorities have the right to take the action against these brutal acts. Though the higher education authority has the right to take severe action, until this Act No.20 of 1998 enacted none of the university authorities took any strong action against the students and other who are involved in the ragging.

This drafted legislation clearly explains the definition of ragging, forms of ragging and applicable penalties, legal proceedings and interpretation of terms. And the Act specifies the relevant Higher Educational Institutions coming under the Act and that includes all the Higher Educational Institutions established under the Universities Act No.16 of 1978.

The provisions of these Acts additionally say that, in terms of by Laws of each Higher Educational Institution, action can be taken against those who engage in inhuman and violent acts by that Institution.
The steps which a victim can follow are

Inform the authorities of the Higher Educational Institutions.
The provisions made under part of XIV of the universities Act No.16 of 1978 on establishing student unions and other Associations are follows:

Section 112
Each Higher Educational Institution shall have a University Student Union.
Each Faculty of the Higher Educational Institution shall have a faculty Student Union.

Section 115
 Any Higher Educational Institution may recognize any Union, Society or other Associations of Students of that Institution for the purpose of furthering academic or social objective, provided that the membership of such Union, Society or other association consists entirely of students of that Institution.

Section 118
 If any Union or Society to other association of a Higher Educational Institution conducts itself in a manner, which, in the opinion of the principal executive officer of that Institution, obstructs the proper administration of that institution, or acts in contravention of the Universities Act or any other Union, such principal executive officer may suspend or dissolve such Union, society or other association, as the case may be.
Pave the way to police to take actions under the above mentioned ragging Act by lodging an entry at the nearest Police Station.

 The party who accuses another of having committed an offence has the burden to prove the offence. And the parties, who have abused or misused the process, have gone beyond merely filling a lawsuit

கைரேகையை ஆராயும் புதிய தொழில்நுட்பம்




குற்றப்புலனாய்வில் முக்கிய பங்கு வகிப்பது குற்றவாளியின் கைரேகையாகும். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் கைரேகையை வைத்து குற்றவாளி குற்றத்தில் ஈடுபடுவதற்கு முன் போதை மருந்து உட்கொண்டிருந்தாலும், வெடி பொருட்களை கையாண்டிருந்தாலும் அதனை காட்டிக்கொடுத்து விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஷீஃபீல்ட் ஹாலம் பல்கலைகழக விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கைரேகை ஆய்வு குற்றவாளியின் பழக்கவழக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை துல்லியமாக காட்டிக் கொடுத்து விடுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்னும் மூன்றாண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த கண்டுபிடிப்பு குற்றப்புலனாய்வில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுவரையிலும் தடயப்பொருள்களில் காணப்படும் ரேகையிலுள்ள கோடுகளை குற்றவாளிகளின் ரேகையுடன் ஒப்பிட்டு பார்த்தே விசாரணைகள் இடம்பெற்றுவந்தன.

இந்த நிலையில் புதிய தொழிநுட்பத்தின் உதவியுடன் விரலில் ஒட்டிக் கொள்ளும் பொருட்களின் நுண்ணிய துகள்களை கொண்டு அடிப்படை ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமன்றி உடலில் சுரக்கும் திரவங்கள் தொடும் பொருள் மீது ஒட்டிக்கொள்வதாக கூறப்படுகிறது.


எனவே ஒருவரது விரல் ரேகையிலிருந்து அவர் என்னென்ன பொருட்களை தொட்டிருந்தார் என்பது முதல் அவரது உடல் வெளியிட்ட திரவங்கள் வரை அனைத்தையும் புதிய ஆய்வின் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday 7 August 2011

திடீர் கோபமூட்டல் ----PROVOKED

குற்றவியல் சட்டத்தில் மனித உயிரை அழித்தல்
(கொலை செய்தல்) எனும் குற்றத்திற்கு இருவகையான தண்டனைகள் சட்டத்தால் வழங்கப்படலாம். தணிக்கும் பாதுகாப்புக்கள் அற்ற நிலையில் அதற்கான தண்டனை உயிர்பறிப்பாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. உதாரணமாக துாக்கிலிடல், விஷ வாயு செலுத்தல், மின்சார நாற்காலி, விஷ ஊசி ஏற்றல் மற்றும் தலை துண்டிப்பு என்பன மூலம் பரவலாக இடம் பெறுகின்றன.

தணிக்கும் பாதுகாப்புக்கள்  வழங்கப்படின் தண்டனை ஆயுட்சிறையாக மாற்றப்படலாம். இருப்பினும் இன்று பெரும்பாலான நாடுகளில் எக்குற்றத்திற்கும் உயிர் பறிப்பு தண்டனைகள் வழங்கப்படுவது அரிதாகும்.
அவ்வகையான தணிக்கும் பாதுகாப்புக்களில் திடீர் மற்றும் பெரும் கோபமூட்டல் கோட்பாட்டில் மாற்றங்களை புகுத்திய ஒரு வழக்காக Kiranjit Ahluwalia காணப்படுகின்றது.

இவ்வழக்கின் கதையை மையக்கருவாக கொண்டு  Provoked எனும் திரைப்படம் 2007 இல் வெளியிடப்பட்டது. இதில் Kiranjit Ahluwalia ஆக ஐஸ்வர்யா பச்சனும் Deepak ஆக நவீன் அன்றுாஸ் உம் நடித்திருந்தனர். இத்திரைப்படம் உண்டையான Kiranjit Ahluwalia வழக்கின் அச்சு தோற்றப்பாடு எனலாம்.

Kiranjit Ahluwalia வழக்கின் கதைச்சுருக்கம்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சாக்கலை எனுமிடத்தில் 1965 ஆம் வருடம் பிறந்த Kiranjit Ahluwalia தீபக்கை 1979 ஆம் வருடம் மணந்து அவருடன் வாழ்வதற்காக பிரித்தானியா சென்றார். அங்கே கணவன் தீபக் Kiranjit Ahluwalia ஐ மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வன்புணர்ச்சி காரணமாகவும் உணவு வழங்காமை நிலைமை காரணமாகவும் மிகவும் கீழ்த்தரமாக நடாத்த தொடங்கினான்.  இதற்கு இவர்களின் இரு குழந்தைகனான Sandeep மற்றும் Rajeev என்போரே சான்றாகும் .
இக்குற்றங்கள் தொடர்பாக Kiranjit Ahluwalia தன் பெற்றோரிடம் பல தடவை முறையிட்டபோதும் எவ்வித மீட்பு நடவடிக்கைகளும் அவளிற்து கிட்டவில்லை.

இவ்வாறாக நாட்கள் நகர்கையில் Kiranjit Ahluwalia வீட்டை விட்டு தப்பியோட முயற்சிக்கும் போதெல்லாம் கணவன் அவளை விரட்டி பிடித்து கடுமையாக தாக்குவதோடு ஒரு நாள் சித்திரவதையின் உச்ச கட்டமாக ஆடை அழுத்தியால் முகத்தில் சுடவும் முயற்சிக்கின்றான்.
பின் கணவன் துாங்கி விட விழித்திருந்த Kiranjit Ahluwalia தங்கள் களஞ்சிய அறைக்கு சென்று பெற்றோல் மற்றும் எரி சோடாவை எடுத்து வந்து கணவன் துாங்கும் மெத்தை மீது ஊற்றி நெருப்பிடுகிறாள். இச்சம்பவத்தால் கடுமையான தீக்காயங்கட்கு உள்ளாகிய தீபக் 10 நாள் சிகிச்சையின் பின் சிகிச்சை பலனின்றி இறந்துவிட நீதிமன்று 07-DEC-1989 இல் Kiranjit Ahluwalia கொலைக்குற்றவாளியாக தீர்ப்பளித்தது. தீபக்கிற்கு வேறு பெண்களுடன் தொடர்பிருப்பதை அறிந்த Kiranjit Ahluwalia தி்ட்டமிட்டே பழி வாங்கும் நோக்கில் இக்கொலையை புரிந்தார் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் Kiranjit Ahluwalia வின் வாதம் கவனிக்ககூடியது. ”நான் என் கணவரை கொலை செய்வதற்காக நெருப்பு பற்றவைக்கவில்லை மாறாக அவர் என்னை துரத்தி பிடிக்காதிருப்பதற்காக அவரின் கால்களை எரிக்கவும் அதோடு என் திருமண வாழ்க்கையில் 10 வருடங்கள் அவர் மூலமாக அனுபவித்த வலியையும் அவருக்கு காட்டவே அவ்வாறு செய்தேன்.

இருப்பினும் திடீர் கோபமூட்டலில் தன்னிலை மறந்து செயற்பட்டாலே தணிக்கும் பாதுகாப்பு சட்டத்தால் வழங்கப்படும். இங்கு Kiranjit Ahluwalia கணவனால் தாக்கப்பட்டு சில மணி நேர இடைவெளியின் பின்பே கணவனை தாக்கினாள்.  இங்கு COOLOING PERIOD அதாவது துாண்டலுக்கேற்ற துலங்கல் காட்டப்பட்டிருக்க வேண்டும். துாண்டலுக்கும் துலங்கலுக்கும் இடையிலான நேரம் கூடகூட தணிக்கும் பாதுகாப்பின் பிணிக்கும் தன்மை வலுவிழக்கும்.

ஒரு சிறிய உதாரணம் மூலம் இதை விளக்க முனைகின்றேன்.

A , B யும் வாக்குவாத படும் போது A , B யை கேவலமான முறையில் 
( கவனிக்க : சமூகத்தில் வாழும் சாதாரண பகுத்தறிவுள்ள மனிதன் தன்னிலை மறந்து செய்யும் செயற்பாடு – இதையே தணிக்கும் பாதுகாப்பின் கோட்பாட்டு அம்சமாக கருதுகின்றோம். ) திட்டியதாயின் அந்த கணத்திலலேயே தாக்க முற்பட வேண்டும். அதை விடுத்து விலகி வீடு சென்று வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு பின்பு வந்து தாக்கல் செய்யக்கூடாது. அவ்வாறு செய்யின் தணிக்கும் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது. ஏனெனில் B தனது சுய கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தாக்குதல் குற்றத்தை புரியவில்லை.

சுருங்க கூறின் கணிதவியல் முறைப்படி கூறின்  COOLING PERIOD கோட்பாட்டின் படி துாண்டலிற்கும் துலங்கலிற்கும் நேர இடைவெளி கூட கூட குற்றத்திற்கான பாதுகாப்பு குறைவடைந்தே செல்லும். இது எதிர் கணிய தொடர்பை காட்டுகின்றது.

ஆனால்  COOLING PERIOD என்ற கோட்பாட்டை Kiranjit Ahluwalia வழக்கில் கேள்விக்குட்படுத்தப்பட்டது. தொடர்சியான மன அழுத்தம் உடனடி துலங்கலை வெளிக்காட்டா விடினும் திடீரென வெளிப்படலாம். இதற்கும் தனக்கும் தணிக்கும் பாதுகாப்ப அளிக்கப்பட வேண்டும் எனும்  சட்டக்கோட்பாட்டை வருவிக்க இவ்வழக்கு ஆதாரமாகும். பின்பு Kiranjit Ahluwalia தணிக்கும் பாதுகாப்பை பெற்றமை குறிப்பிடக்கூடியது.
இக்கோட்பாடு எமது நீதிமன்றங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் முன்னைய  COOLING PERIOD  கோட்பாட்டை இலங்கை நீதிமன்றங்கள் முழுதாக கைவிடவில்லை என்பது குறிப்பிடகூடியது.

 இதைத் தீர்மானிப்பதில் SUBJECTIVE மற்றும் OBJECTIVE பரீசோதனைகள் என்பதோடு REASONABLE PRUDENT MAN பரீசோதனைகளும்உதவுகின்றது. 

பின் Kiranjit Ahluwalia தன் சுயசரிதை மற்றும் அனுபவங்களை RAHITA GUPTA என்பவரோடு இணைந்து CIRCLE OF LIGHT எனும் புத்தகமாக வெளியிட்டமை குறிப்பிடகூடியது.
 
இவ்வாக்கம் PROVOKED  திரைப்படம் மற்றும் இணைய வழி தகவல் மூலங்களை ஆதாரமாக கொண்டு அமைக்கப்பட்டது


MITIGATARY DEFENCE பகுதியில் சட்ட ஏற்பாடுகள் மற்றும் தொடர்புடைய வழக்குகள் என்பவற்றோடு விரிவாக தரவேற்றப்படும். அடுத்த ஆக்கங்களில் குற்ற மனம் MENS REA  குற்ற செயல் ACTUS REAS என்பவற்றை எதிர்பாருங்கள்.
 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது