Social Icons

Pages

Friday 25 December 2015

சில்லறையை வச்சுக்கோ

அந்த மருந்துக்கடைக்காரர் மருந்துச்சீட்டை என்னிடம் திருப்பிக்கொடுத்தார்.  காத்திருக்க வைத்ததற்கு மன்னிப்பு கோரினார். பின்னர் பதிவேடு ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டது என விளக்கினார். கடையின் முன்புறத்தில் உள்ள பதிவேட்டைப் பயன்படுத்த முடியுமா எனக் கேட்டார்.  பரவாயில்லை என கூறி நான் முன்புறம் சென்றேன்.
 
அங்கே மருந்து வாங்குவதற்கான வரிசையில் ஒரு சிறுமி மட்டுமே நின்றிருந்தாள். அவளுக்கு ஏழு வயதிற்கு மேலே இராது. குழந்தைளுக்கான மருந்து போத்தல் ஒன்று கவுண்டரில் வைக்கப்பட்ருந்ததது. பச்சையும் வெள்ளையுமாக கோடுகள் இட்ட ஒரு சிறிய, சில்லறை காசு பர்ஸை தன் நெஞ்சுடன் இறுக்கிப் பிடித்திருந்தாள்.

நான் எனது குழந்தைப்பருவத்தில் பாட்டியின் அலமாரியருகே பெரிய மனுசி போல ஆடையணிந்து விளையாடியதை அந்த பர்ஸ் எனக்கு ஞாபகப்படுத்தியது. நான் பெரிய ஆடைகள் நகைகள் தொப்பி ஸ்கார்ப் அணிந்து வீட்டை சுற்றி வருவேன். யாராவது காசு கொடுத்தால் பெரிய மனிசித்தனமாக நடந்து கொள்ளுவேன். நான் ஒரு நாள் பாவனையாக டாலர்  ஒன்றை ஒருவரிடம் கொடுத்த போது அதற்காக அவர் எனது நிஜ காசுகளை குடுத்து பர்சில் வைத்துக்கொள் என கண்ணடித்தது எனக்கு இப்போதும் ஞாபகம் உள்ளது.

இப்போது மருந்துக்கடைக்காரர் அச்சிறுமியை மருந்தை எடுத்துக்கொள்ளுமாறு மணியை அடித்தார். அவள் நடுங்கும் கைகளால்  பர்ஸ்க்குள் இருந்து ஒரு கூப்பன், ஒரு டாலர் நோட்டு மற்றும் கொஞ்சம் சில்லறைகளை எடுத்தாள். அவள் தனது பணத்தை எண்ணியபோது முகம் சிவப்பதை கண்டேன். அவளிடம் மருந்து விலைக்கு ஒரு டாலர் குறைவாக இருப்பதையும் கண்டேன். படக்கென்று ஒன்றைக் கண்ணடிப்புடன் ஒரு டாலர் நோட்டை ’போட்டேன். அவளுக்கு மருந்து கொடுக்கப்பட்டு விட்டது என்பதற்கு அடையாளமாக மணியை அடிக்கும் படி சைகை செய்தேன். அப்பெண் தான் எண்ணாத மீதச்சில்லறைகளை எடுத்துக் கொண்டு மருந்துப்போத்தலுடன் கடையை விட்டு வேகமாக வெளியேறினாள்.

நான் கடையிலிருந்து வெளியேறி காரை நோக்கிப் போனபோது யாரோ எனது சட்டையைப் பிடித்து இழுப்பதை உணர்ந்தேன். அது அந்த சிறுமி தான். அவள் தனது பெரிய பழுப்பு நிறக்கண்களால் என்னைப்பார்த்தாள். புன்னதை்தாள். தனது கரங்களால் எனது கரங்களை வளைத்திருந்தவள் பின் தனது குட்டிக்கையை என் முன் விரித்தாள். கை நிறையக்காசு. நன்றி என முணுமுணுத்தாள்.
பரவாயில்லை என்ற நான் புன்னகையுடன் கண்ணடித்து மீதச்சில்லறையை வச்சுக்கோ என்றேன்.

No comments:

Post a Comment

 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது