Social Icons

Pages

Sunday 11 March 2018

வாக்குமூலம் 05




இலங்கையில் அம்பாறையில் தொடங்கி கண்டி வரை விஸ்தரித்த ஓர் சமூக மக்கள் மீதான தாக்குதல்கள் ஓர் நிறுவனமயப்படுத்தப்பட்ட தாக்குதல்களின் ஓர்  வெளிப்பாடு மாத்திரமல்ல மாறாக அது இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து இனங்களின் மீதும் அவரவர் பார்வையில் நிகழியல் தீர்வுகளைத்தாண்டி தர்க்கவியல் நியாயங்களை தோற்றுக்கும் ஓர் ஏதுவாகவே என்னால் அடையாளம் காணப்படுகின்றது.

குறிப்பாக கடந்த காலத்தை மறந்து விட்டு எப்போதும் நிகழ்காலத்துடன் இணைந்து செயற்படுமாறு அறைகூவல் விடுப்பது மனிதர்களின் மனதை அதிலும் குறிப்பாக வீழ்ச்சியுற்ற அல்லது வீழ்ச்சியுற்றதாக காட்டப்பட்ட ஓர் சமூக மனப்பான்மை உடைய மனிதனை நிச்சயம் ஏற்காது என அனைவரும் நாசூக்காக தன்னும் தன்னளவில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அத்துடன் அறிவுசார் உலகத்தையும் அறிவுசார் பொருளாதாரத்தையும் நம்பி எண்ணிய முதலீட்டுடன் பல நாடுகள் வெற்றி கண்டு வருகின்ற இச்சூழ்நிலையில் இலங்கை போன்ற ஒரு நாட்டின் அதுவும் தன்னிறைவு என்பதை பல தசாப்பங்களுக்கு முன்னரே கைநெகிழ்ந்து விட்டதென்ற பாணியில் இவ்வாறான பௌதீக ரீதியிலான அதிகாரங்கள் அல்லது கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கான போட்டிகளாவை நியாயமாகவோ அல்லது அநியாயமாகவோ தோற்றம் பெற்று மேலோங்கினும் அது ஓரு உலகின் அலகு எனும்“ பரந்த போக்கில் நிச்சயம் பின்னடைவையே பெற்றுத்தரும் என்பது திண்ணம்…..

No comments:

Post a Comment

 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது