Social Icons

Pages

Tuesday 12 November 2019

சட்டமாமேதை அம்பேத்காரின் சிந்தனைத் தொகுப்பு - 01




v ல்விக்கூடங்களில் எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சீருடை, கல்வி இடம் கண்டிப்பாகக் கொடுத்தாக வேண்டும் குழந்தைகளுக்கிடையே சாதி மனப்பான்மை சிறிதளவு வராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

v பிறப்புக்கு அடையாளமாக ஒவ்வொருவரும் தங்கள் பெயருக்குப் பின்னால் பிறந்த சாதிப் பெயர்களையும், பட்டங்களையும் போட்டுக் கொள்கிறார்.

ஜனநாயக தத்துவத்திற்கு நேர் எதிராகக் காணும் இத்தகைய சாதிப்பெயர்களையும், பட்டங்களையும் உடனடியாக எடுத்துவிட வேண்டும்.

v இந்துமதக் கோவில் ஆராதனை செய்ய எல்லா இந்துக்களுக்கும் முன்னுரிமை
அளிக்கப்பட்டாக வேண்டும். பிராமணர்கள்தாம் பூஜை செய்ய வேண்டும் என்ற முறையை அடியோடு ஒழித்தால்தான் கோயிலில் சமத்துவம் நிலவும்.

v ஆண்டுக்கொருமுறை உலகத்திற்காக ‘சமபந்தி போஜனம்’ என்று விளம்பரப்படுத்திவிட்டுக் கோயிலில்விருந்து சாப்பிடுவதைவிடக் கொடுமை உலகில் வேறு ஏதுமில்லை. இதனால் தீண்டாமை ஒரு போதும் அகலாது.

v மக்களிடம் நிலவியிருக்கும் கோழைத்தனமும், பரம்பரை மூடப்பழக்கங்களும் அடியோடு ஒழிய வேண்டும். தைரியமும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இன்றே இப்பொழுதே பெற வேண்டும்.

v சாதி ஆசாரங்களையும், விதிகளையும், மீறுகிறவர்களை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கும் நிலையை உடனடியாக ஒழிக்க வேண்டும். அதுமட்டுமல்ல; இப்படிப்பட்டவர்களை அழைத்துப் புகழ்மாலையும் சூட, இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் துணிச்சலோடு முன்வர வேண்டும்.

v தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் அனுதாபம் காட்டி, அவனுக்கு வேண்டிய வசதிகளை, சாதிமத வேறுபாடு இன்றிச் செய்ய வேண்டும்.

v சாதியின் கொடுமைகளைக் கண்டு தீண்டாமையை ஒழிக்கப் புறப்பட்ட இராமானுஜர், கபீர்தாசர் போன்ற மகான்களின் அடிச்சுவட்டைப் பின்பற்ற ஒவ்சொரு இந்துவும் முன்வர வேண்டும்.

v பகுத்தறிவும்,ஒழுக்கமும் கொண்டவர்கள் இந்து மதத்தின் தலைவர்கள் என்று ஏற்றுக் கொள்ளும்வரை சாதியை ஒழிப்பதைக் கடமையாகக் கருத வேண்டும்.

v இந்துக்களுக்கெல்லாம் பொதுவானதும் எல்லா இந்துக்களும் ஒப்புக் கொள்ளக் கூடியதுமான ஒரு ‘வேதம்’ இந்துக்களுக்கு இருக்க வேண்டும்.

v புரோகிதம் பரம்பரைத் தொழிலாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்துக்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களுக்கு எல்லாம் புரோகிதனாகும் உரிமை வழங்கப்பட வேண்டும்.

v சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகதுவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பகுத்தறிவு தத்துவத்தில், எல்லா இந்துக்களும் ஒன்றுபட்டு முயன்றால் சாதி, சமயக் கொடுமைகளை ஒழிக்கலாம். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதமையை அகற்றலாம்.

v சமுதாயக் தொண்டு செய்பவர்கள் ஒழுக்கம் உள்ளவர்களாகவும், நேர்மை உள்ளவர்களாகவும், தியாகம் செய்யக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் இந்தக் சமுதாயம் பலராலும் ஏமாற்றப்பட்ட சமுதாயம். இவர்களை நீங்களும் ஏமாற்றாதீர்கள்.

பொதுத்தொண்டு என்று சொல்லிக் கொண்டு அரசியல் இலாபம் பெறவோ, அதிகாரம்- அந்தஸ்திற்கான பணம், பெயர், புகழ்பெறவோ விரும்பாதவர்களாக இருங்கள்.

v சமூகச் சீர்திருத்தத்துக்கு பார்ப்பனர் என்றுமே முழு எதிரிகள். அரசியல் பொருளாதார மாற்றங்களில் பார்ப்பனர் முன் அணியில் நிற்பார்கள்.

ஆனால், சாதியை ஒழிப்பதற்கான இயக்கங்களில் அவர்கள் ஈடுபடமாட்டார்கள். எதிர்காலத்திலாவது ஈடுபடுவார்கள் என்றால் அந்த நம்பிக்கையுமில்லை.

v சாதி ஒழிப்புக்கு நேரான வழி கலப்பு மணமே ஆகும். இரத்தக் கலப்பினால் சுற்ற உணர்வு என்பது மாறி, நட்பு உணர்வு உண்டாகும். நட்பு கலந்த சகோதர உணர்ச்சி தோன்றாத வரையில் வேற்றுமை உணர்ச்சி இருந்து கொண்டுதான் இருக்கும்.

இந்துக்களுக்குள்ளே கலப்பு மணம், மிக்க பலன் அளிக்க கூடியதாக இருக்கும். இதைத் தவிர வேறு எதனாலும் சாதி ஒழியாது. அரசியல் கொடுமையை விட முகக் கொடுமையே மிகவும் பயங்கரமானது. சாதிக் கொடுமையை எதிர்த்து போராடும் சமூகக் சீர்திருத்தவாதியே அரசியல்வாதியைவிட மிகுந்த துணிவுக்காரன்.

v புத்தன், மார்க்ஸ் ஆகிய இருவரின் அடிப்படை ஒழுக்கத்தின் இலட்சியமுமே                 ‘இந்த உலகத்தில் மனிதனின் துன்பத்தை ஒழிக்க வேண்டும்’ என்பதுதானே தவிர வேறு மறு உலகத்தில் மோட்சத்தைத் தேடுவதல்ல. புத்தனின் ஒழுக்க தத்துவமும் மார்க்ஸின் பொருளாதாரக் தத்துவமும் விஞ்ஞானமே உண்மையை அறியும் ஒரே வழி என்று உறுதியாக நம்புகின்றன.

v கம்யூனிசமும் பௌத்தமும் அடிப்படையில் ஒன்றே, புத்தன் வறுமையைத்தான் ‘துன்பம்’ என்று பொதுவாகக் குறிப்பிடுகிறான். தனியுடைமை சுரண்டலை அடிப்படையாக் கொண்டது. ‘தனியடைமை ஒழிந்தால்தான் பொதுநலம் பெருகும்’ என்கிறான் புத்தன், ‘சுரண்டல்’ என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லையே தவிர, மார்க்ஸிகமும் பௌத்தமும் ஒரே பொதுவுடைமை சமுதாயத்தையே இலட்சியமாக அடிப்படையில் கொண்டுள்ளன.

புத்தன் பொதுவுடமை இலட்சியத்தை அடைய பிரச்சாரத்தையே கையாள வேண்டும் என்று சொன்னால், மார்க்ஸ் அரசியல் திறனையும் ஆயுதப்புரட்சியையும் உபதேசித்தான் என்ற முறையில்தான் இருவரும் வேறு படுகின்றனர்.

v இந்தியாவைப்போல சமூக ஊழல்களால் கெட்டுப்போன நாடு உலகில் வேறு இல்லவே இல்லை. தம்மை அடிமைப்படுத்தும் சமூக அமைப்பை பாமர மக்கள் சகித்துக் கொண்டிருப்பதன் காரணம் என்ன? உலகில் பல தேசங்களில் புரட்சி உண்டாகியிருக்கும் போது இந்தியாவில் மட்டும் ஏன் புரட்சி உண்டாகவில்லை? அந்தக் கேள்விக்கு ஒரே ஒரு விடைதான் உள்ளது.

அதாவது சதுர்வாண (நாலு ஜாதி) கொடுமையினால் பாமர்கள் பலவீனர்களாக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் அவர்களுக்குப் புரட்சி செய்ய ஆற்றல் இல்லை. அவர்களுக்கு ஆயுதம் தாங்க முடியாது, ஆயுதம் இன்றி புரட்சியில் வெற்றி பெற முடியாது. அவர்கள் எல்லாம் உழவர்கள்.

ஏரைக்கட்டி உழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். கொழுவை வாளாக மாற்றிக் கொள்ள அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உரிமையில்லை. அவர்களுக்குக் கல்வி கற்கவும் முடியவில்லை. எந்நாளும் அடிமைகளாகவே அமிழ்த்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

v புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானல் ஏழை எளியொர் முன்வந்துதான் ஆக வேண்டும் அத்தகைய ஒரு புரட்சி செய்ய இந்தியப் பாமர மக்கள் மற்றவர்களுடன் சேருவார்களா?

மற்றவர்கள் தம்மை சமத்துவத்துடனும் சகோதர பாவனையிலும் நீதியாகவும் நடந்துவார்கள் என்ற நம்பிக்கை இருந்தால்தான் பாமர மக்கள் மற்றவர்களுடன் சேருவார்கள்.

புரட்சி வெற்றி பெற்ற பிறகு தம்மைச் சரிநிகர் சமானமாக நடத்துவார்கள் என்று பாமர மக்கள் நம்பவில்லையானால் அவர்கள் மற்றவர்களுடனன் சேர்ந்து புரட்சி செய்ய முன்வருவார்கள்?

புரட்சியைத் தலைமை வகித்து நடத்து கம்யூனிஸ்டு என்கு ஜாதியில் நம்பிக்கையில்லை என்று சொன்னால் மட்டும் போதாது. புரட்சியில் ஈடுபடுவோர் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் சமத்துவ சகோதரத்துவ உணர்ச்சி தோன்றும்படி நிலைபெறும்படி செய்ய வேண்டும்.

v அடிமைக்கு ‘அவன் அடிமை’ என்பதை உணர்த்தினால்தான் அவன் அடிமைச் சங்கிலியினை உடைப்பான்.

v கூடிய வரையில் வன்முறையைத் தவிர்ப்பதும், அவசியமானபோது வன்முறையை பயன்படுத்துவதும்தான் புத்தன் சொன்ன வழியில் அஹிம்சை தத்துவத்தைக் கடைப்பிடிப்பதாகும்.

v சமுதாயக் கொடுமைகளை எந்த ஒரு நாகரிகம் அடைந்த சமுதாய அமைப்பாலும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. சழுதாயக் கொடுமைகளை மதக் கோட்பாடுகளால் நியாயப்படுத்த முயல்வதைப்போல அசிங்கமான, கொடூரமான போக்கு வேறு எதுவுமில்லை.

v மதப்பற்று உள்ளவரை உங்கள் அடிமைச் சங்கிலிகளை உடைப்பதோ வறுமையைப் போக்குவதோ இயலாது.

v இந்து கோயிலுள்ள நுழைய தாழ்த்தப்பட்டவர்கள் போராடமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் சுயமரியாதைக்காரர்கள். அந்தக் காலத்தில் ஐரோப்பிய ஹோட்டல்களிலும், கிளப்களிலும் ‘நாய்களும் இந்தியர்களும் அனுமதிக்கப்படுவதில்லை’ என்ற போர்டுதான் தொங்கும். அவற்றுக்கும் இந்து கோயிலுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.

‘எல்லா இந்துக்களும், நாய்கள் உட்பட எல்லா மிருகங்களும் அனுதிக்கப்படவர். ஆனால், தீண்டத்தகாதவர்களுக்கு மட்டும் அனுதியில்லை’ என்ற நடை முறை போர்டு போடாமலேயே இந்துக்களால் கடைப் பிடிக்கப்படுகிறது.

அப்படி ஆவணம் பிடித்த இந்துக்களிடம் அனுமதி பிச்சை கேட்க சுயமரியாதை உள்ளவன் எவன் வருவான்? இந்துக்கள் வேண்டுமானால் தங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ள எல்லோருக்கும் அனுமதி உண்டு என்று தங்கள் நடைமுறையை மாற்றிக் கொள்ளட்டும். தாழ்த்தப்பட்வர்கள் எதற்காக கோயிலுக்குப் போக வேண்டும்? கோயில் நுழைவு பற்றி அவர்களக்கு அவசியம் இல்லை. இருக்கத் தேவையில்லை.

v தீண்டாமை ஒழிய ஜாதி அமைப்பு ஒழிய வேண்டும். ஜாதி ஒழிய மதம் ஒழிய வேண்டும். மதம் ஒழிய சாத்திரங்கள், வேதங்கள், புராணங்கள், கடவுள் கற்பனைகள் ஒழிய வேண்டும். இவற்றை ஒழிக்காமல் சாதிமுறையை தீண்டாமையைக் கடைப்பிடிக்போரைக் குற்றம் சொல்வது விவேகமாகாது.


           








1 comment:

  1. qualified and talented and the facilities should be made available to him without any caste distinction.
    academic essay writing
    UK's Top-Rated and Students' Most Favorite custom services is Here to Offer Expert Help in Most Affordable Prices with a Guarantee to an A or A+ Grade

    ReplyDelete

 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது